தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Csk Vs Pbks Result: எதுவுமே சரியா அமையல! சிங்கத்தின் கோட்டையில் கெத்து காட்டிய பஞ்சாப் கிங்ஸ் - 5 தொடர் வெற்றி

CSK vs PBKS Result: எதுவுமே சரியா அமையல! சிங்கத்தின் கோட்டையில் கெத்து காட்டிய பஞ்சாப் கிங்ஸ் - 5 தொடர் வெற்றி

May 02, 2024, 02:47 AM IST

google News
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொடர்ச்சியாக 5 முறை வீழ்த்திய அணி என்ற பெருமையை பஞ்சாப் கிங்ஸ் பெற்றுள்ளது. அந்த அணி முதலில் பவுலிங்கில், பின்னர் பேட்டிங்கிலும் சிஎஸ்கேவை நன்கு கட்டுப்படுத்தியது. (AP)
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொடர்ச்சியாக 5 முறை வீழ்த்திய அணி என்ற பெருமையை பஞ்சாப் கிங்ஸ் பெற்றுள்ளது. அந்த அணி முதலில் பவுலிங்கில், பின்னர் பேட்டிங்கிலும் சிஎஸ்கேவை நன்கு கட்டுப்படுத்தியது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொடர்ச்சியாக 5 முறை வீழ்த்திய அணி என்ற பெருமையை பஞ்சாப் கிங்ஸ் பெற்றுள்ளது. அந்த அணி முதலில் பவுலிங்கில், பின்னர் பேட்டிங்கிலும் சிஎஸ்கேவை நன்கு கட்டுப்படுத்தியது.

ஐபிஎல் 2024 தொடரின் 49வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 போட்டிகளில் 5 வெற்றியுடன் 4வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் 9 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.

இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் பதிரனா, துஷார் தேஷ்பாண்டேவுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர், ரிச்சர்ட் க்ளீசன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான க்ளீசன் சிஎஸ்கே அணிக்காக முதல் போட்டியில் களமிறங்கியுள்ளார்.

சிஎஸ்கே பேட்டிங் சொதப்பல்

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த சிஎஸ்கே 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 62, அஜிங்கியா ரகானே 29, சமீர் ரிஸ்வி 21 ரன்கள் அடித்தனர்.

பஞ்சாப் பவுலர்களில் ஹர்ப்ரீத் பிரார் 2, ராகுல் சஹார், ககிசோ ரபாடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். ஸ்பின்னர்களான பிரார், ராகுல் சஹார் ஆகியோர் சிறப்பாக பவுலிங் செய்து சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் நன்கு கட்டுப்படுத்தினர்.

பஞ்சாப் சேஸிங்

163 ரன்களை சேஸ் செய்ய களமறங்கிய பஞ்சாப் கிங்ஸ் 17.5 ஒவரில் 3 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. இதனால் பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. அதிகபட்சமாக பேர்ஸ்டோ 46, ரோசவ் 43 ரன்கள், சாம் கரன் 26, சஷாங் சிங் 25 அடித்தனர்.

சிஎஸ்கே பவுலர்களில் ஷர்துல் தாக்கூர், ரிச்சர்டு க்ளீசன், ஷிவம் டூபே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

இந்த வெற்றியால் தொடர்ச்சியாக சிஎஸ்கே அணியை 5 போட்டிகளில் வீழ்த்தியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்தபடியாக சிஎஸ்கேவை தொடர்ந்து ஐந்து முறை தோற்கடித்த அணி என்ற பெருமையும் பெற்றுள்ளது.

எதுவும் சரியாக அமையவில்லை

முதலில் டாஸில் தோற்றது. அப்புறம் பேட்டிங் சொதப்பில், பின்னர் பவுலிங்கில் எவ்வித நெருக்கடியும், ஆக்ரோஷம் காட்டாமல் இருந்தது என சிஎஸ்கே அணிக்கு இந்த போட்டியில் எதுவும் சிறப்பாக அமையவில்லை.

ஆனால் முதலில் பவுலிங்கில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் நன்கு கட்டுப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் பவுலர்கள், பின்னர் பேட்டிங்கில் நன்கு ஆதிக்கம் செலுத்தி எளிதான வெற்றியை பெற்றார்கள். 

இந்த போட்டியின் முடிவுக்கு பின்னர் புள்ளிப்பட்டியலில் எந்த மாற்றமும் இல்லாவிட்டாலும், கட்டாய வெற்றியை பெற வேண்டிய இந்த போட்டியில் பஞ்சாப் வென்று ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. 

இந்த தோல்வியால் சிஎஸ்கே அணியின் இனி வரும் 4 போட்டிகளில் கண்டிப்பாக மூன்று போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற நிலைமை இருப்பதுடன், ரன் ரேட் விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.  

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி