பாவத்தால் கண் பார்வை இழந்த விக்கிரம சோழன்.. கோரிக்கை விடுத்த சிவபெருமான்.. பார்வை கொடுத்து ஆசி வழங்கிய கண்ணீஸ்வரர்
Dec 06, 2024, 06:00 AM IST
Kanneeswarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் அருள்மிகு கண்ணீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் கண்ணீஸ்வரர் என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றார்.
Kanneeswarar: நமது நாட்டில் எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிவபெருமானுக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் இருந்து வருகின்றன. மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்திருக்க கூடியவர் சிவபெருமான்.
சமீபத்திய புகைப்படம்
இந்தியாவில் இருக்கக்கூடிய பல பக்தர்கள் தங்களது வாழ்க்கையை சிவபெருமானுக்காக அர்ப்பணித்து வாழ்ந்தவர்கள் வருகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக எத்தனையோ கோயில்கள் நமது நாட்டில் இருந்து வருகிறது. வாரணாசியில் இருக்கக்கூடிய காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் வயது முதிர்ந்த பிறகு தங்களின் வாழ்க்கையில் முடித்துக் கொள்ளக்கூடிய எத்தனையோ முதியவர்கள் இன்று வரை இருந்து வருகின்றனர்.
கங்கை ஆற்றில் குளித்து உயிரை மாய்த்துக் கொண்டால் புண்ணியம் என ஒரு மிகப்பெரிய நம்பிக்கை இங்கு இருந்து வருகிறது. சிவபெருமான் மீது பக்தி கொண்ட எத்தனையோ பக்தர்கள் அகோரிகளாக அங்கு வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழ்நாட்டில் மன்னர்கள் காலம் தொடங்கி இன்று வரை சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. இந்தியாவின் தெற்கு பகுதியை ஆண்டு வந்த மன்னர்கள் கடல் கடந்தும் போரிட்டு மண்ணை பிடித்து அங்கே சிவபெருமானுக்கு கோயில் அமைத்து வழிபாடுகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. இன்றும் கடல் கடந்து காணப்படக்கூடிய கோயில்களில் தமிழ் மொழியில் இன்றும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
பாண்டியர்கள் மற்றும் சோழர்கள் எதிரிகளாக இருந்து வந்தாலும் இருவரும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். இவர்கள் ஒருபுறம் இருக்க பல்லவர்கள் மறுபுறம் சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டு பல கோயில்களை கட்டி சென்றுள்ளனர்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில்கள் இன்று வரை வானில் மட்டும் அளவிற்கு வரலாற்றின் சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகிறது. சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை தெரியவில்லை. இந்த கோயிலை எப்படி கட்டி இருக்க முடியும் என பல கோயில்கள் ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதற்கு மிகப்பெரிய சோழ மன்னனாக விளங்கிய ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் அருள்மிகு கண்ணீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் கண்ணீஸ்வரர் என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றார்.
தல சிறப்பு
இந்த கோயிலில் அய்யனார் பூர்ண கலா புஷ்பகலாவோடு தெற்கு நோக்கி காட்சி கொடுத்து வருகின்றார். சபரிமலை செல்லக்கூடிய பக்தர்கள் இங்கு சன்னதிக்க வந்து இருமுடி கட்டு. ஆஞ்சநேயருக்கு புடைப்புச் சிற்பம் இங்கே காணப்படுகின்றது.
இந்த கோயிலில் வந்து வழிபட்டால் வியாபார சிக்கல், குடும்ப சிக்கல்கள் என அனைத்தும் நிவர்த்திகளையும் நம்பப்படுகின்றது. இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய முருகப்பெருமான் மற்றும் துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது இந்த கோயிலின் மிகப்பெரிய சிறப்பாக கருதப்படுகிறது.
தல வரலாறு
விக்கிரம சோழன், வீரபாகு பாண்டியன் இருவரும் மிகப்பெரிய எதிர்கலாக திகழ்ந்து வந்தனர். நீண்ட காலமாக பகை உணர்வோடு வாழ்ந்து வந்தனர். வீரபாகு பாண்டியன் மீது பலமுறை போர் தொடுத்தும் விக்கிரம சோழனால் வெற்றி பெற முடியவில்லை. இருப்பினும் வீரபாகு பாண்டியனை கொலை செய்வதற்காக பலமுறை விக்ரமசோழன் சதி வேலை செய்துள்ளார்.
சதி வேலை செய்த காரணத்தினால் விக்கிரம சோழனுக்கு பாவம் ஏற்பட்டுள்ளது. அதனால் விக்கிரம சோழன் பார்வை இழந்துள்ளார். பின்னர் தனது தவறை உணர்ந்து தனக்கு மீண்டும் பார்வை கிடைக்க வேண்டும் என தேவதானம் என்ற ஊரில் இருக்கக்கூடிய சிவபெருமானை வழிபட்டுள்ளார். சிவபெருமானின் அருளால் அவருக்கு ஒரு கண் பார்வை மட்டும் அங்கு கிடைத்துள்ளது.
மற்றொரு கண்ணுக்கும் பார்வை வேண்டும் என விக்கிரம சோழன் சிவபெருமானை நோக்கி வேண்டியுள்ளார். தனக்காக ஒரு கோயில் கட்டி வழிபட்டால் மற்றொரு பார்வை கிடைக்கும் என சிவபெருமான் கூறி மறைந்து விட்டார். அதன் பின்னர் சேர்த்து ஊரில் சிவபெருமானுக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தி விக்கிரம சோழன் தனது மறு கண்ணிற்கு பார்வையை பெற்றுள்ளார்.
பார்வையிழந்த பக்தனுக்கு கண் கொடுத்த காரணத்தினால் இவர் திருகண்ணீஸ்வரர் என்ற திருநாமத்தை பெற்றார். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய கண்ணீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் கண் பார்வை சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என நம்பப்படுகிறது.