HT Yatra: அம்பாள் சன்னதியில் வளைகாப்பு.. பிரம்மனை நிறுத்திய முருகப்பெருமான்.. அமர்ந்த காசி விஸ்வநாதர்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: அம்பாள் சன்னதியில் வளைகாப்பு.. பிரம்மனை நிறுத்திய முருகப்பெருமான்.. அமர்ந்த காசி விஸ்வநாதர்

HT Yatra: அம்பாள் சன்னதியில் வளைகாப்பு.. பிரம்மனை நிறுத்திய முருகப்பெருமான்.. அமர்ந்த காசி விஸ்வநாதர்

Suriyakumar Jayabalan HT Tamil
May 31, 2024 06:00 AM IST

Kasi Viswanathar: பல கோயில்கள் திரும்பும் திசை எல்லாம் தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் உமையாள்புரம் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

அம்பாள் சன்னதியில் வளைகாப்பு.. பிரம்மனை நிறுத்திய முருகப்பெருமான்.. அமர்ந்த காசி விஸ்வநாதர்
அம்பாள் சன்னதியில் வளைகாப்பு.. பிரம்மனை நிறுத்திய முருகப்பெருமான்.. அமர்ந்த காசி விஸ்வநாதர்

மன்னர்கள் காலத்திலிருந்து இன்றுவரை அனைத்து மக்களுக்குமான கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகிறார் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் சிவபெருமான் மூலக்கடவுளாக திகழ்ந்து வருகிறார்.

மிகப்பெரிய மன்னனாகத் திகழ்ந்து வந்த ராஜராஜ சோழன் சிவபெருமானின் தீவிர பக்தனாக திகழ்ந்து வந்தார் உலகமே வியக்கும் அளவிற்கு தஞ்சை பெரிய கோவிலை கட்டி முடித்தார். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை அசைக்க முடியாத இடத்தில் கம்பீரமாக நின்று வருகிறது.

சிவனுக்கு எந்த அளவிற்கு பக்தர்கள் கூட்டம் உள்ளதோ அதேபோல பார்வதி தேதியாருக்கும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. தனக்கு நிகராக உடலில் பாதி இடம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக சிவபெருமான் மற்றும் பார்வதி இருவரும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர்.

எத்தனையோ வரலாறுகளை சுமந்து கொண்டு பல கோயில்கள் திரும்பும் திசை எல்லாம் தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் உமையாள்புரம் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தல சிறப்பு

கணவர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்காக பெண்கள் இந்த கோயிலில் விரதம் இருந்து வழிபாடுகள் மேற்கொள்கின்றனர். திருமணத்தடை, குழந்தை தடை உள்ளவர்கள் இந்த கோயிலில் இருக்கக்கூடிய அம்பிகைக்கு வழிபாடு செய்து குங்கும அர்ச்சனை செய்தால் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடிய அம்பிகை சன்னதிக்கு முன்பு கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்படுகிறது. இந்த திருக்கோயிலில் வழிபட்டால் காசியில் சென்று வழிபட்ட பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

தல வரலாறு

ஒருமுறை கைலாயம் நோக்கி பிரம்மதேவர் சென்று கொண்டிருந்தார் அப்போது அங்கு முருகப்பெருமாள் இருப்பதை கண்டு கொள்ளாமல் சென்றுள்ளார். உடனே பிரம்மதேவரை அழைத்து தங்கள் யார் என முருக பெருமான் கேட்டுள்ளார். நான்தான் படைப்பு கடவுள் என கர்வமாக கூறியுள்ளார் பிரம்மதேவர். அவருடைய ஆணவத்தை அடக்க நினைத்த முருக பெருமான் படைப்பிற்கு ஆதாரமாக விளங்கக்கூடிய பிரணவ மந்திரத்தின் விளக்கத்தை கூறுங்கள் என கேட்டுள்ளார்.

அதனுடைய விளக்கம் தெரியாமல் விழித்துள்ளார் பிரம்ம தேவர். இதனால் அவருடைய தொழிலை பறித்து விட்டார் முருகப்பெருமான். இதுகுறித்து சிவபெருமானிடம் பிரம்மதேவர் கூறியுள்ளார். உடனே படைப்புத் தொழில் செய்யக்கூடிய பிரம்மதேவருக்கு அதன் ஆதாரமாக விளங்கக்கூடிய பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியவில்லை வேண்டுமென்றால் நீங்கள் கூறுங்கள் நான் அவருடைய தொழிலை திருப்ப தருகிறேன் என்று முருகப்பெருமான் கூறியுள்ளார்.

சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் விளக்கம் தெரியவில்லை. என்னிடம் இதுகுறித்து தாங்கள் உபதேசம் பெற வாருங்கள் என முருக பெருமான் அழைத்துள்ளார். தன்னுடன் வந்த பார்வதி தேவியாரை தற்போது இருக்கும் தளத்தில் நிறுத்திவிட்டு முருகப் பெருமானிடம் சிவபெருமான் உபதேசம் கேட்கச் சென்றார்.

சிவபெருமான் பார்வதி தேவியாரை இருக்கச் சொன்ன அந்த தலம் தான் இந்த உமையாள்புரம் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

Whats_app_banner