தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  2025 புத்தாண்டு மீன ராசி பலன்கள்.. திருமண வாழ்க்கையில் சிக்கல்.. காதல் கைக்கூடுமா.. வாங்க பாக்கலாம்!

2025 புத்தாண்டு மீன ராசி பலன்கள்.. திருமண வாழ்க்கையில் சிக்கல்.. காதல் கைக்கூடுமா.. வாங்க பாக்கலாம்!

Dec 11, 2024, 04:40 PM IST

google News
New Year 2025: இந்த 2025 புத்தாண்டில் பல எதிர்பார்ப்புகளோடு காத்திருப்பவர்கள் கிரகங்களின் மாற்றத்தால் கலவையான பலன்களை பெறுவார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் இருந்த 2025 ஆம் ஆண்டு மீன ராசி பெறக்கூடிய பலன்கள் குறித்து இங்கு காணலாம்.
New Year 2025: இந்த 2025 புத்தாண்டில் பல எதிர்பார்ப்புகளோடு காத்திருப்பவர்கள் கிரகங்களின் மாற்றத்தால் கலவையான பலன்களை பெறுவார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் இருந்த 2025 ஆம் ஆண்டு மீன ராசி பெறக்கூடிய பலன்கள் குறித்து இங்கு காணலாம்.

New Year 2025: இந்த 2025 புத்தாண்டில் பல எதிர்பார்ப்புகளோடு காத்திருப்பவர்கள் கிரகங்களின் மாற்றத்தால் கலவையான பலன்களை பெறுவார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் இருந்த 2025 ஆம் ஆண்டு மீன ராசி பெறக்கூடிய பலன்கள் குறித்து இங்கு காணலாம்.

New Year 2025: இந்த 2025 புத்தாண்டு எதிர்பார்த்து காத்திருபவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். இந்த ஆண்டு பெரிய கிரகங்களாக கருதப்படும். குரு, சனி, ராகு, கேது இவர்கள் தங்களது இடத்தை மாற்றுகிறார்கள். 

சமீபத்திய புகைப்படம்

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. நாளை டிச.19 உங்கள் கையில் அதிகம் பணம் சேருமா? - ராசிபலன் இதோ

Dec 18, 2024 03:09 PM

குரு சும்மா விடமாட்டார்.. இந்த 3 ராசிகள் கதி என்ன?.. வந்து பாருங்க அதிர்ஷ்டமா?.. கஷ்டமா?

Dec 18, 2024 02:56 PM

சனி 2025 சரமாரியாக அடிப்பார்.. நேரடி பயணத்தில் சிக்கிய ராசிகள்.. தாறுமாறாக அதிர்ஷ்டம் வரும்

Dec 18, 2024 02:49 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.19 எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும்? - ராசிபலன்!

Dec 18, 2024 02:45 PM

மேஷம் முதல் கன்னி வரை.. உங்க ராசிப்படி 2025 ஆம் ஆண்டில் எந்த நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் தெரியுமா?

Dec 18, 2024 12:52 PM

கேதுவின் பெயர்ச்சி.. இந்த ராசிக்களுக்கு பட்ட கஷ்டம் எல்லாம் அகல போகுது.. இனி வெற்றி மேல் வெற்றி தான்!

Dec 18, 2024 11:37 AM

இந்த 2025 புத்தாண்டில் பல எதிர்பார்ப்புகளோடு காத்திருப்பவர்கள் கிரகங்களின் மாற்றத்தால் கலவையான பலன்களை பெறுவார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் இருந்த 2025 ஆம் ஆண்டு மீன ராசி பெறக்கூடிய பலன்கள் குறித்து இங்கு காணலாம்.

மீன ராசி பொது பலன்கள்

இந்த 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு ஏற்ற மிகுந்த ஆண்டாக அமையக்கூடும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். பெரிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும். கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.

தனியார் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கை கூடும். திருமண வாழ்க்கை உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் அமைதி அதிகரிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அதிகமான செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீண்ட கால முதலீடுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்றுத்தரும். உறவினர்களால் உங்களுக்கு சுமுகமான சூழ்நிலை ஏற்படும். வெளிநாடுகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப்படும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.

வேலை மற்றும் தொழில்

இந்த 2025 ஆம் ஆண்டு தனியார் துறையில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தொழில் செய்பவர்களுக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் தேடி வரும். தனியார் துறையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு பாராட்டுகளை கொடுப்பார்கள்.

தனியார் துறையில் பணியாற்றுபவர்களுக்கு பணிச்சுமை அவ்வப்போது அதிகரிக்கப்படும். கூலி தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உயர் ஆதரவுகள் உங்களுக்கு முழுமையாக கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அரசு துறையில் பணியாற்றுபவர்களுக்கு நல்ல ஏற்றம் இருக்கும். வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு பாராட்டுக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு முழுமையாக கிடைக்கக்கூடும். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதன் மூலம் உங்களுக்கு இரட்டிப்பான லாபம் கிடைக்கக்கூடும். மார்ச் மாதத்திற்கு பிறகு கூட்டு தொழில் முயற்சிகள் பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

காதல் மற்றும் திருமண வாழ்க்கை

இந்த 2025 ஆம் புத்தாண்டு உங்களுக்கு காதல் வாழ்க்கை அமோகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. காதலர்களுக்கு இடையே அன்பு மிகவும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரை காதல் உறவில் இருப்பவர்களுக்கு மனக்கசப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்.

காதல் உறவில் இருப்பவர்கள் வாக்குவாதம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் காதலர்கள் இன்பச் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அக்டோபர் முதல் செப்டம்பர் மாதம் வரை காதல் துணையின் மீது அன்பு மிகவும் அதிகரிக்கக்கூடும். காதலர்கள் அடிக்கடி உணவு விடுதிக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவுகள் கிடைத்தாலும் வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் திருமண வாழ்க்கை தம்பதிகளுக்கு இடையே சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தேவையில்லாத வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. நடுத்தர வயது இருக்கக்கூடிய திருமண தம்பதிகள் அமைதியாக விட்டுக் கொடுத்துச் செல்வது நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். மார்ச் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒற்றுமை அதிகரிக்கக்கூடும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி