2025 புத்தாண்டு தனுசு ராசி பலன்கள்.. உங்க வாழ்க்கையே மாறபோகுது.. எல்லா யோகமும் உங்களுக்குதான் கிடைக்குமாம்..!
New year 2025: சில ராசிகளுக்கு நன்மைகள் மற்றும் சில ராசிகளுக்கு தீமைகள் என அனைத்தும் கலவையான பலன்களாக கிடைக்கக்கூடும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறுகின்றனர். அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு தனுசு ராசி பெறக்கூடிய பலன்கள் குறித்து இங்கு காண்போம்.
New Year 2025: புத்தாண்டு என்றாலே அனைவருக்கும் இன்பம் தான். பலரும் பல ஆண்டுகள் கடந்து சென்றாலும் புத்தாண்டு எதிர்பார்த்து காத்து இருப்பார்கள். இந்த ஆண்டும் நமக்கு சிறப்பாக இருக்க வேண்டும் என எண்ணக்கூடியவர்கள் சிலர்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் பலன்கள் அமையும் என கூறப்படுகிறது. இந்த 2025 ஆம் ஆண்டு மிகப்பெரிய கிரகங்கள் தங்களது இடத்தை மாற்றுகின்றனர். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
சில ராசிகளுக்கு நன்மைகள் மற்றும் சில ராசிகளுக்கு தீமைகள் என அனைத்தும் கலவையான பலன்களாக கிடைக்கக்கூடும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறுகின்றனர். அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு தனுசு ராசி பெறக்கூடிய பலன்கள் குறித்து இங்கு காண்போம்.
நிதி நிலைமை
இந்த 2025 புத்தாண்டு பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நிறைய லாபத்தை பெற்று தரப்படும். மரம் சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கக்கூடும். தொழிலில் இரட்டிப்பான லாபம் கிடைக்கக்கூடும். பொருளாதாரம் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஜனவரி மாதத்திற்கு பிறகு புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தகவல் தொடர்பு சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் இருந்து நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உணவு சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மார்ச் மாதத்தில் இருந்து நிதி முன்னேற்றம் கிடைக்கும்.
அரசு துறையில் பணியாற்ற போர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் இருந்து வருமானம் அதிகரிக்கக்கூடும். புதிதாக வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. செலவுகள் அவ்வப்போது ஏற்பட்டாலும் உங்களுக்கு வருமானத்தில் எந்த குறையும் இருக்காது.
கல்வி
இந்த 2025 புத்தாண்டு மாணவர்களுக்கு சாதகமான வருடமாக அமைந்துள்ளது. ஆரம்பக் கல்வியில் இருக்கக்கூடிய மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஜனவரி மாதத்தில் இருந்து மாணவர்களுக்கு கல்வியில் கவனம் திரும்பக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படக்கூடும். பொறுப்போடு செயல்பட்டால் உங்களுக்கு நன்மை உண்டாகும்.
மாணவர்கள் இறுதி தேர்வுகளில் வெற்றி பெற்று அதிக மதிப்பெண்களை பெறுவார்கள். பொறியியல் படிப்பில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு ஆற்றல் அதிகரிக்க கூடும். நண்பர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தகவல் தொழில்நுட்பம் படிக்கக்கூடிய மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி காண்பார்கள்.
வெளிநாட்டில் சென்று படிப்பதற்கான யோகங்களும் கிடைக்கக்கூடும். ஆராய்ச்சி துறையில் ஈடுபட்டு இருக்கக்கூடிய மாணவர்கள் நல்ல முன்னேற்றத்திற்கு காண்பார்கள். போட்டி தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கக்கூடிய மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து கவனக்குறைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்களை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.
உடல் ஆரோக்கியம்
இந்த 2025 புத்தாண்டு உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் தரும் என கூறப்படுகிறது. ஜனவரி மாதத்தில் இருந்து உடல் ஆரோக்கியத்தில் சிறிய கவனம் இருப்பது நல்லது. அவ்வப்போது அஜீரண கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
சரியான நேரத்தில் உணவு அருந்தினால் உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பிப்ரவரி மாதத்தில் இருந்து பெரியவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. கண் காது சம்பந்தப்பட்ட சிக்கல்கள் உங்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சரியான சிகிச்சை மூலம் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
அவ்வப்போது சிறு சிறு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மற்றபடி உங்களுக்கு இந்த ஆண்டு உடல் ஆரோக்கியத்தில் பெரிய சிக்கல்கள் எதுவும் இருக்காது. இருப்பினும் கவனத்தோடு இருப்பது நல்லது. எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்ப்பது உங்களுக்கு நன்மைகளை தரும்.
பரிகாரங்கள்
ஏழைக் குழந்தைகளுக்கு தானம் செய்வதன் மூலம் உங்களுக்கு தனம் முன்னேற்றம் பெறும். காமதேனுவிற்கு வியாழக்கிழமைகளில் தீபாவளிபாடு செய்தால் உங்களுக்கு நல்லது நடக்கும். வியாழக்கிழமை என்று விநாயகர் பெருமானுக்கு வழிபாடு நடத்தி பூஜை செய்தால் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.