கும்ப ராசி புத்தாண்டு 2025 பலன்கள்: பணம் பெருகப் போகுது.. நிதி கொட்டப் போகுது.. கனவு காணாதீங்க..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கும்ப ராசி புத்தாண்டு 2025 பலன்கள்: பணம் பெருகப் போகுது.. நிதி கொட்டப் போகுது.. கனவு காணாதீங்க..!

கும்ப ராசி புத்தாண்டு 2025 பலன்கள்: பணம் பெருகப் போகுது.. நிதி கொட்டப் போகுது.. கனவு காணாதீங்க..!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 11, 2024 03:38 PM IST

New Year 2025: இந்த 2025 புத்தாண்டு சில ராசிகளுக்கு நன்மைகள் மற்றும் சில ராசிகளுக்கு தீமைகள் என அனைத்தும் கலவையான பலன்களாக கிடைக்கக்கூடும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறுகின்றனர். அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு கும்ப ராசி பெறக்கூடிய பொதுப் பலன்கள் குறித்து இங்கு காண்போம்.

கும்ப ராசி புத்தாண்டு 2025 பலன்கள்: பணம் பெருகப் போகுது.. நிதி கொட்டப் போகுது.. கனவு காணாதீங்க..!
கும்ப ராசி புத்தாண்டு 2025 பலன்கள்: பணம் பெருகப் போகுது.. நிதி கொட்டப் போகுது.. கனவு காணாதீங்க..!

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் பலன்கள் அமையும் என கூறப்படுகிறது. இந்த 2025 ஆம் ஆண்டு மிகப்பெரிய கிரகங்கள் தங்களது இடத்தை மாற்றுகின்றனர். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த 2025 புத்தாண்டு சில ராசிகளுக்கு நன்மைகள் மற்றும் சில ராசிகளுக்கு தீமைகள் என அனைத்தும் கலவையான பலன்களாக கிடைக்கக்கூடும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறுகின்றனர். அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு கும்ப ராசி பெறக்கூடிய பொதுப் பலன்கள் குறித்து இங்கு காண்போம்.

நிதி நிலைமை

இந்த 2025 புத்தாண்டு உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தைப் பெற்றுத் தரப் போகின்றது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களோடு வெளியே சென்றால் உங்களுக்கு பணவிரயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வெகு நாட்களாக உங்களுக்கு விற்பனையாகாமல் இருந்த நிலம் தற்போது விற்பனை ஆகி அதிக லாபம் பெற்று தருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பிப்ரவரி மாதத்தில் இருந்து உங்கள் வீட்டை புதுப்பிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் வீட்டில் இருக்கக்கூடிய வயதானவர்களுக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்ட மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சரியான மருத்துவ சிகிச்சை உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புது ஒப்பந்தங்கள் கிடைக்கக்கூடும். இதனால் உங்களுக்கு பல லாபங்கள் கிடைக்கும்.

புதிய ஒப்பந்தங்கள் மூலம் உங்களுக்கு இரட்டிப்பான லாபங்கள் கிடைக்கக்கூடும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் நல்ல லாபத்தை பெற்று நிதின்மையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய தொழில் முதலீடுகள் உங்களுக்கு இரட்டிப்பான லாபத்தை பெற்று தரும். கடன் சிக்கல்கள் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்க கூடும். புதிதாக தங்க நகை ஆபரணங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

தொழிலில் வரவுகளை விட செலவுகள் அதிகமாக இருக்கக்கூடிய சூழ்நிலைகள் அமையும். அதனால் நீங்கள் ஜூலை மாதத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் உங்களுக்கு செலவுகள் குறைந்து லாபங்கள் அதிகரிக்க கூடும். வாகனத்தின் பராமரிப்பு செலவுகள் செப்டம்பர் மாதத்தில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதற்குப் பிறகு புதிய முதலீடுகளை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.

கல்வி

இந்த வருடம் கல்விக்கு சிறந்த ஆண்டாக உங்களுக்கு இருக்கும். மாணவர்கள் 2025 முதல் மிகவும் சிறப்பாக செயல்படுவார்கள். கல்வியில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்க கூடும். ஓவியத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். மிகப்பெரிய வல்லுனர்களாக நீங்கள் மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

பள்ளிக் கல்வியில் படித்து வரும் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். விளையாட்டு போட்டிகளில் வென்று பதக்கங்களை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மாணவர்கள் தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.

பேச்சுப் போட்டியில் சாதனை படைத்து மாணவர்கள் வெற்றி காண்பார்கள். கல்லூரி மாணவர்களுக்கு தனி தன்னம்பிக்கை உருவாகும். பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு தினமும் படிப்பில் கவனம் செலுத்தி படிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. தேவையான கல்விக்கு தேவையான உதவித்தொகை கிடைக்கக்கூடும்.

உடல் ஆரோக்கியம்

இந்த 2025 புத்தாண்டு உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர்கள் உடற்பயிற்சி செய்து தங்களது உடலை பேணி காத்துக் கொள்வது நல்லது. நடுத்தர வயதில் இருப்பவர்களுக்கு தலைவலி மற்றும் சில உடல் உபாதைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இருப்பினும் அது விரைவில் உங்களுக்கு சரியாக விடும்.

பெண்களுக்கு அஜீரண கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வெளியே உணவு உண்பதை தவிர்ப்பது உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும். வேலைப்பளுவின் காரணமாக உங்களுக்கு மனச்சோர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

தினமும் தியானம் செய்து உங்கள் மன உளைச்சலை போக்கிக் கொள்ளலாம். வீட்டில் வயது மூத்தவர்கள் இருந்தால் அவர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மருத்துவரை அணுகினால் அது விரைவில் குணமாகும். தாய்மார்களுக்கு எலும்பு சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மருத்துவரை அணுகினால் விரைவில் உங்களுக்கு குணமாகும்.

பரிகாரம்

சனிக்கிழமை என்று கருப்பு எள் தின்பண்டங்களை மற்றவர்களுக்கு அல்லது சிறுவர்களுக்கு தானமாக கொடுத்தால் உங்களுக்கு பண யோகம் கிடைக்கக்கூடும்.

வயதானவர்களுக்கு மற்றும் ஏழை எளியவர்களுக்கு உடை தானமாக வழங்கினால் உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner