பூர்வீக செல்வத்தையும், வெற்றியையும் கொடுக்கும் லட்சுமி நாராயண யோகம்! 2025 புத்தாண்டில் செல்வ செழிப்பு பெறும் ராசிகள்
Dec 14, 2024, 09:30 PM IST
ஜோதிட சாஸ்திரப்படி, ஒருவரது ஜாதகத்தில் புதனும் சுக்கிரனும் சேர்ந்து இருந்தால், அது லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்குகிறது. இந்த யோகம் அமைவதால் பூர்வீக செல்வமும், வெற்றியும் ஒரு சேர கிடைக்கும்.
2025ஆம் ஆண்டு பிப்ரவரி லட்சுமி நாராயண யோகம் உருவாகும் ஜோதிட சாஸ்திரத்தில் கணிக்கப்பட்டுள்ளது. இந்த யோகம் வியாழனின் மீன ராசியில் உருவாகும். மீனத்தில், மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கு அதிபதியான சுக்கிரன் மற்றும் புதன் இருவரும் ஒன்றாக சந்திப்பார்கள். இவர்களின் சந்திப்பால் 2025 பிப்ரவரியில் இந்த யோகம் உருவாகும். 69 நாள்கள் வரை இந்த யோகாமானது நீடிக்கவுள்ளது.
சமீபத்திய புகைப்படம்
லட்சுமி நாரயண யோகம் என்றால் என்ன?
வேத ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள யோகங்களில் ஒன்றாக இருந்து வரும் லட்சுமி நாராயண யோகம் மங்களகரமான யோகமாக கருதப்படுகிறது. புதனும், சுக்கிரனும் சேர்ந்தால் லட்சமி நாராயண யோகம் உண்டாகும். இந்த யோகம் பல ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தரும். இந்த யோகத்தால் பூர்வீக செல்வமும், வெற்றியும் கிடைக்கும். சில ராசிக்காரர்களுக்கு பாதிக்கப்பையும் ஏற்படுத்தும்.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2025 ஜனவரி 28ஆம் தேதி மீன ராசியில் வரும் சுக்கிரன் மே 31ஆம் தேதி வரை இந்த ராசியில் சஞ்சரிக்கிறார். இதன் பிறகு பிப்ரவரி 27ஆம் தேதி புதன் மீன ராசியில் பிரவேசிக்கிறார். இருவரும் ஒன்றாக கூடும் போது லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இந்த யோகம் மேஷம், மிதுனம், மீனம் ராசியினரை வெகுவாக பாதிக்கும். லட்சுமி நாராயண யோகம் இந்த ராசிக்காரர்களுக்கு ஏற்படும் பலன்களை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்
மேஷம்
லட்சுமி நாராயண யோகம் இருக்கும் வரை, மேஷ ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியில் வளம் பெறுவார்கள். 12-வது வீட்டில் இந்த யோகம் உருவாகிறது.
நிதி ரீதியாக செழிப்பாக உணருவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். பணத் தட்டுப்பாடு என்பது இருக்காது. வருமானத்துக்கான புதிய வழிகள் பிறக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பு கூடும். குடும்ப வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.
மிதுனம்
லட்சுமி நாராயண யோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு முடிவுகள் எடுக்கும் திறன் அதிகரிக்கும். பத்தாம் இடத்தில் இந்த யோகம் உருவாகிறது.
முந்தைய தவறான முடிவுகளால் நின்றுபோன அல்லது கெட்டுப்போன வேலைகள் இப்போது நிறைவேறும். நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். பொருளாதாரம் மேம்படும். வெளிநாட்டில் வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு வேலை கிடைக்கலாம். உத்யோகத்தில் பணி உயர்வுடன், ஊதிய உயர்வும் கிடைக்கும்
மீனம்
லட்சுமி நாராயண யோக மீன ராசிக்காரர்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டத்தை அதிகரிக்க செய்யும். லக்ன ஸ்தானத்தில் இந்த யோகம் உருவாகிறது.
இந்த நேரத்தில், நீங்கள் ஒரு சமநிலையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். பண விஷயத்தில் புதிய வழிகள் பிறக்கும். இது தவிர, வேலை தேர்வுகளிலும் வெற்றி பெறலாம். செய் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நிதிநிலை மேம்படுவதுடன், குடும்பத்தில் சுபகாரியங்கல் நடக்கும். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.