தொடர்ந்து சண்டை சச்சரவுகள்..மன நிம்மதி, மிகிழ்ச்சி, வீட்டில் செழிப்பு பெற உதவும் வாஸ்து குறிப்புகள்
Oct 26, 2024, 07:55 PM IST
காலையில் தூங்கி எழுந்தது முதல் மீண்டும் இரவில் உறங்கும் வரை வீட்டில் தொடர்ந்து சண்டை சச்சரவுகள் நடப்பது மனதில் அமைதியின்மை ஏற்படுத்தும். அத்தகைய சிக்கலை எதிர்கொள்ள தினமும் தவறாமல் இந்த விஷயத்தை செய்வதால் இழந்த அமைதியையும், மன நிம்மதியையும் பெறுவதோடு, மகிழ்ச்சி, செழிப்பும் பெறலாம்.
வீடு அமைதியாக இருந்தால் மனம் நிம்மதியாக இருக்கும். தொடர்ந்து சண்டை சச்சரவுகள் ஏற்பட்டால் நரகமாகத்தான் இருக்கும். உங்கள் வீட்டில் தினமும் சண்டை நடக்கிறதா? வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் இருப்பதற்கான விளைவுதான் இது.
சமீபத்திய புகைப்படம்
வீட்டின் ஆற்றல் நேர்மறையாக இல்லாமல் எதிர்மறையாக மாறும்போது சிக்கல்கள் எழுகின்றன. வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிப்பதால், அமைதி குறைகிறது. வாஸ்து தோஷங்கள் காரணமாக, குடும்ப உறுப்பினர்களிடையே வேறுபாடுகள் மற்றும் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
அத்தகைய சூழ்நிலையில் உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை அதிகரிக்க சில வாஸ்து நடவடிக்கைகள் எடுக்கலாம். வீட்டில் நிலவும் சச்சரவுகளை குறைக்க வாஸ்து சாஸ்திரம் குறிப்புகள் பல இருக்கின்றன. உங்கள் வீட்டில் மோதல்களைக் குறைக்க, தினமும் செய்ய வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்
சூரியனுக்கு நீர் வழங்குதல்
சூரியனுக்கு தினமும் தண்ணீர் கொடுப்பதால் ஜாதகத்தில் சூரிய கிரகம் வலுப்பெறும். சூரிய கிரகம் மரியாதை மற்றும் பதவியுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. மத அடிப்படையில் சூரியனின் நல்ல அம்சம் தொழில் வெற்றியை அடைய உதவுகிறது. இது உங்கள் நிதி பிரச்னைகளையும் தீர்க்கும். அதனால் தான் காலையில் குளித்து, செம்பு பாத்திரம் வைத்து சூரியனுக்கு வழங்குவது நல்லது.
விளக்கை ஏற்றவும்
தினமும் காலையில் வீட்டில் தீபம் ஏற்றவும். இதனால் நேர்மறை ஆற்றல் வீட்டுக்ள் நுழைகிறது. வீட்டில் உள்ள பூஜைகளை முறையாகச் செய்தால், வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களும், பொருளாதாரச் சிக்கல்களும் விலகும். எந்த வீட்டில் திருவிளக்கு வழிபாடு தவறாமல் நடக்கிறதோ, அங்கே எல்லா தெய்வங்களும் இருப்பதாக ஐதீகம்.
துளசி பூஜை
தினமும் துளசிக்கு கடவுளுக்கு படையுங்கள். மேலும் காலை, மாலை துளசியின் முன் நெய் தீபம் ஏற்றவும். துளசி லட்சுமி தேவியின் உருவமாக கருதப்படுகிறது. அதே சமயம் வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதும், லட்சுமி சூக்தம் பாராயணம் செய்வதும் பணப் பிரச்னைகளில் இருந்து விடுபடும்.
வீட்டை சுத்தமாக வைத்திருங்கள்
வீட்டை சுத்தம் செய்வது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இது வீட்டின் சுற்றுச்சூழலையும் சுத்தப்படுத்துகிறது மற்றும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கிறது. அதே சமயம் தேவையில்லாத பொருட்களை சேகரிக்க வேண்டாம். தினமும் வீட்டிலிருந்து தேவையில்லாத குப்பைகளை அகற்றவும். தினமும் காலையில் எழுந்தவுடன் வீட்டை சுத்தம் செய்யுங்கள்.
உப்பு
சில நேரங்களில் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் உங்கள் நிதி வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, தண்ணீரில் உப்பு கலந்து துடைப்பதன் மூலம் வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை அகற்றலாம். மேலும் வீட்டின் மூலையில் உப்பை வைத்திருப்பது எதிர்மறை சக்திகளையும் நீக்கும். மன நிம்மதியையும் பெறுவீர்கள்.
மரங்கள் பராமரிப்பு
வீட்டில் உள்ள மரங்களுக்கும் செடிகளுக்கும் தவறாமல் தண்ணீர் பாய்ச்சவும். இறந்த மரங்கள் மற்றும் தாவரங்கள் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் வீட்டு அலங்காரத்துக்கு முள் செடிகளை பயன்படுத்த வேண்டாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. விரிவான மற்றும் கூடுதல் தகவலுக்கு, சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரை அணுகவும்.
டாபிக்ஸ்