’உங்கள் ஜாதகத்தில் கிரக நீசம் உள்ளதா?’ நீச கிரகம் எப்போது நன்மை செய்யும் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ’உங்கள் ஜாதகத்தில் கிரக நீசம் உள்ளதா?’ நீச கிரகம் எப்போது நன்மை செய்யும் தெரியுமா?

’உங்கள் ஜாதகத்தில் கிரக நீசம் உள்ளதா?’ நீச கிரகம் எப்போது நன்மை செய்யும் தெரியுமா?

Kathiravan V HT Tamil
Oct 17, 2024 05:21 PM IST

நீச கிரகங்கள் நன்மைகள் தாராதே என்றால் அதற்கு நிறைய விதிவிலக்குகல் உள்ளது. ஒரு கிரகத்திற்கு முறையான நீச பங்கம் கிடைத்துவிட்டால் செயல்படும் வலிமையை மீண்டும் பெற்றுவிடும். 6, 8, 12ஆம் அதிபதிகள் நீசம் பெற்று அவர்கள் நீச பங்கம் அடைந்தால் கேட்டவீட்டின் பலாபலன்களையும் தருவார்கள்.

’உங்கள் ஜாதகத்தில் கிரக நீசம் உள்ளதா?’ நீச கிரகம் எப்போது நன்மை செய்யும் தெரியுமா?
’உங்கள் ஜாதகத்தில் கிரக நீசம் உள்ளதா?’ நீச கிரகம் எப்போது நன்மை செய்யும் தெரியுமா?

மேஷ லக்னம் 

உதாரணமாக மேஷ லக்ன ஜாதகத்தில் 5ஆம் இடத்து அதிபதியாக உள்ள சூரிய பகவான், துலாம் ராசியில் நீசம் அடைந்துவிட்டார் என்று எடுத்துக் கொள்வோம். நீசம் பெற்ற சூரியனுக்கு எந்த விதத்திலும் நீச பங்கம் கிடைக்கவில்லை எனில், ஜாதகருக்கு 5ஆம் இடத்தின் ஆதிபத்தியமும், சூரிய பகவானின் காரகத்துவங்களும் கிடைக்காமல் போய்விடும். 

கும்ப லக்னம் 

கும்ப லக்னத்திற்கு லக்னாதிபதியாக உள்ள சனி பகவான் 3ஆம் இடத்தில் நீசம் அடைந்துவிடுகிறார். இந்த நீசம் பெற்ற சனிக்கு நீச பங்கம் கிடைக்கவில்லை எனில் ஜாதகரின் லக்னாதிபதியே நீசம் என்பதால் ஜாதகரே தன்னம்பிக்கை குறைந்தவராக, செயல்திறன் அற்றவராக இருப்பார். இவர்கள் மற்றவர்களை சார்ந்து வாழும் நிலையை கொண்டு இருப்பார்கள். 

ஆனால் நீச கிரகங்கள் நன்மைகள் தாராதே என்றால் அதற்கு நிறைய விதிவிலக்குகல் உள்ளது. ஒரு கிரகத்திற்கு முறையான நீச பங்கம் கிடைத்துவிட்டால் செயல்படும் வலிமையை மீண்டும் பெற்றுவிடும்.  6, 8, 12ஆம் அதிபதிகள் நீசம் பெற்று அவர்கள் நீச பங்கம் அடைந்தால் கேட்டவீட்டின் பலாபலன்களையும் தருவார்கள். 

ஒரு நீசம் பெற்ற கிரகம் லக்னத்திற்கு நண்பரா அல்லது எதிரியா என்பதை கணிக்க வேண்டியது முக்கியம். ஆனால் லக்னம் முதலான 12 வீடுகளும் ஏதேனும் ஒரு வகையில் செயலாற்றும் வலு வேண்டும் என்பதால் எல்லா கிரகங்களுக்கும் குறைந்த பட்ச வலு தேவை. 

நீச கிரகத்திற்கு வீடு கொடுத்த கிரகம் வேறு எங்கேனும் அல்லது அந்த வீட்டிலோ ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் அடைந்தால் நீசபங்கம் கிடைத்து விடும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

 

Whats_app_banner