தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Tiruchendur Temple: திருச்செந்தூர் கோயிலில் கட்டணம் உயர்வு!

Tiruchendur Temple: திருச்செந்தூர் கோயிலில் கட்டணம் உயர்வு!

Mar 26, 2023, 11:26 AM IST

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சண்முகார்ச்சனை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சண்முகார்ச்சனை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சண்முகார்ச்சனை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அறுபடை வீடுகளில் மிகவும் சிறப்பு மிக்க கோயிலாகத் திகழ்ந்து வருவதைத் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இது இரண்டாம் படை வீடாகும்.

சமீபத்திய புகைப்படம்

Summer illness: என்ன பரிகாரம் செய்தால் கோடை கால நோய்களில் இருந்து தப்பிக்கலாம் தெரியுமா? - ஜோதிடம் சொல்வது இதுதான்!

May 07, 2024 01:26 PM

Lucky Rasis: சனி பகவான் மனசு வச்சுட்டார்.. எந்த 3 ராசிகாரர்கள் அதிர்ஷ்டத்தில் குதிக்கப் போகிறார்கள் பாருங்க!

May 07, 2024 12:15 PM

Money Luck: அட்சய திருதியை நாளில் வீட்டில் பண மழை கொட்டணுமா.. உணவு பொருட்களை வாங்கினால் ஜாக்பாட் தான்!

May 07, 2024 11:36 AM

Money Luck: 12 ஆண்டுகளுக்கு பின் வரும் நவ பஞ்சம யோகம்.. பணக்கடலில் குதிக்கும் 3 ராசிகள் இதோ! ஜாக்பாட் காத்திருக்கு!

May 07, 2024 10:15 AM

Love Horoscope Today :புதிய உறவில் ஈடுபடுவதற்கான நேரம் இது.. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்குமான இன்றைய காதல் ராசிபலன்!

May 07, 2024 08:57 AM

Amavasya : பித்ருதோசம், காலசர்ப்ப தோசம், சனிதோசத்தில் இருந்து விடுபட வேண்டுமா.. அமாவாசையில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்!

May 07, 2024 07:02 AM

உலகம் முடிவதிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபாடு செய்வார்கள். தென்னிந்தியப் பகுதிகளில் இருக்கும் பக்தர்கள் மாலை அணிந்து இந்த கோயிலுக்கு வந்து தங்களது பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள்.

சமுத்திரத்தின் அருகே இந்த கோயில் அமைந்திருப்பதால் இது மேலும் சிறப்பாகும். என் நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சண்முகார்ச்சனை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் இணை ஆணையர் கார்த்திக் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில், அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் சண்முகார்ச்சனையின் கட்டணமாக ரூபாய் 1500 வசூலிக்கப்பட்டு வந்தது.

இது தொடர்பாக தற்போதைய சூழ்நிலை மற்றும் விலைவாசி ஏற்றத்தின் காரணமாகக் கோயில் மூலம் சண்முகார்ச்சனை செய்யக் கட்டணம் ரூபாய் 5000 ஆக உயர்த்தி சட்ட விதிகளின்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து ஆட்சேபனை ஏதும் வராத காரணத்தினால் கோயில் அறங்காவலர் குழு சுற்றுத் தீர்மானத்தின்படி இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மண்டல இணை ஆணையரிடம் உத்தரவு பெறப்பட்டுள்ளது.

இந்த ஆணையின்படி கோயில் மூலம் சண்முகார்ச்சனை செய்யக் கட்டணம் ரூபாய் 1500லிருந்து 5000 என உயர்த்தப்பட்டுள்ளது. இது நாளை முதல் கோயில் நிர்வாகத்தால் அமல்படுத்தப்படுகிறது.

எனவே பக்தர்கள் புதிதாக நிர்ணயம் செய்யப்பட்ட ரூபாய் 5000 கட்டணத்தைச் செலுத்தி சண்முகார்ச்சனை நேர்த்திக் கடனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்