Summer illness: என்ன பரிகாரம் செய்தால் கோடை கால நோய்களில் இருந்து தப்பிக்கலாம் தெரியுமா? - ஜோதிடம் சொல்வது இதுதான்!
- Agni Natchathiram 2024: அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்தரி வெயில் காலம் தற்போது ஆரம்பமாகி இருக்கிறது. சூரியன் அனலை கக்கும் இந்த நாட்களில் ஏற்படும் நோய்களில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
- Agni Natchathiram 2024: அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்தரி வெயில் காலம் தற்போது ஆரம்பமாகி இருக்கிறது. சூரியன் அனலை கக்கும் இந்த நாட்களில் ஏற்படும் நோய்களில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
(1 / 7)
வெயில் காலத்தில் கோடை கால நோய்களான வேனல் கட்டி, அம்மை நோய், கண் பாதிப்புகள் போன்றவை ஏற்படும். இந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
(2 / 7)
அக்னி நட்சத்திர காலத்தில் தண்ணீர், நீர் மோர், விசிறி உள்ளிட்ட பொருட்களை தானம் செய்வதன் மூலம் கோடை காலத்தில் ஏற்படும் நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
(3 / 7)
கோடை காலத்தில் ஏற்படும் நோய்களுக்கு முக்கூட்டு கிரகங்களான சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரங்களோடு செவ்வாயும் சேர்ந்து அதிக விளைவுகளை ஏற்படுத்தினாலும் அனேக நோய்களுக்கு சுக்கிரனே காரணமாக அமைந்துள்ளது.
(4 / 7)
கோடை நோய்களை தவிர்க்க சுக்கிரனின் அம்சமான சுத்தமான குடிநீரை அதிகம் குடித்துவந்தாலே பல நோய்களை விரட்டிவிடலாம் என ஆயுர்வேதமும் மருத்துவ ஜோதிடமும் கூறுகிறது. சுக்கிரனை காரகமாக கொண்ட இளநீரை கோடை காலத்தில் அதிகம் குடித்து பல நன்மைகளை பெறலாம்.
(5 / 7)
கோடை வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பை தணிக்க வேப்பிலை, மஞ்சள் கொண்டு வீட்டை தூய்மைப்படுத்த வேண்டும்.
(6 / 7)
அக்னி நட்சத்திர காலத்தில் தான தருமம் செய்வதோடு முருகனையும், அன்னை மீனாட்சியையும் வழிபடலாம். பரணி நட்சத்திரத்திற்கு உரிய தேவதையான துர்க்கையையும், கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய அக்னி தேவன்,ரோகிணி நட்சத்திரத்திற்கு உரிய பிரம்மாவையும் வழிபடலாம்.
மற்ற கேலரிக்கள்