தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Karthigai Deepam: திருவண்ணாமலையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் காவல்துறை!

Karthigai Deepam: திருவண்ணாமலையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் காவல்துறை!

Dec 06, 2022, 12:57 PM IST

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு அந்த மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் உச்சத்தில் உள்ளது.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு அந்த மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் உச்சத்தில் உள்ளது.

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு அந்த மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் உச்சத்தில் உள்ளது.

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருநாள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று (டிசம்பர் 6) அருணாச்சலேஸ்வரர் கோயில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.

சமீபத்திய புகைப்படம்

Today Rasi Palan : ‘எதிர்பார்ப்பு நிறைவேறுமா.. நிம்மதி சாத்தியமா.. லாபம் யாருக்கு’ 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

May 08, 2024 04:30 AM

Summer illness: என்ன பரிகாரம் செய்தால் கோடை கால நோய்களில் இருந்து தப்பிக்கலாம் தெரியுமா? - ஜோதிடம் சொல்வது இதுதான்!

May 07, 2024 01:26 PM

Lucky Rasis: சனி பகவான் மனசு வச்சுட்டார்.. எந்த 3 ராசிகாரர்கள் அதிர்ஷ்டத்தில் குதிக்கப் போகிறார்கள் பாருங்க!

May 07, 2024 12:15 PM

Money Luck: அட்சய திருதியை நாளில் வீட்டில் பண மழை கொட்டணுமா.. உணவு பொருட்களை வாங்கினால் ஜாக்பாட் தான்!

May 07, 2024 11:36 AM

Money Luck: 12 ஆண்டுகளுக்கு பின் வரும் நவ பஞ்சம யோகம்.. பணக்கடலில் குதிக்கும் 3 ராசிகள் இதோ! ஜாக்பாட் காத்திருக்கு!

May 07, 2024 10:15 AM

Love Horoscope Today :புதிய உறவில் ஈடுபடுவதற்கான நேரம் இது.. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்குமான இன்றைய காதல் ராசிபலன்!

May 07, 2024 08:57 AM

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக மகா தீபத் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது தளர்வு செய்யப்பட்டுள்ளதால் மகா தீபத் திருவிழாவைக் காண்பதற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாகப் பக்தர்களின் வருகைக்காகச் சிறப்புப் பேருந்துகள் மற்றும் ரயில்கள் விடப்பட்டிருந்தன. தற்போது வரை திருவண்ணாமலைக்கு இந்த போக்குவரத்து வசதிகள் மூலம் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர்.

பக்தர்களின் வருகை அதிகரித்துக் கொண்டே இருக்கின்ற காரணத்தினால் மாவட்ட நிர்வாகம் மற்றும் தூய்மை பணியாளர்கள் சாலைகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் காவல்துறையினர் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை நகருக்குள் வரும் அனைத்து பாதைகளிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து உரியச் சோதனை நடத்தப்பட்ட பின்னரே வாகனங்கள் நகருக்குள் அனுமதிக்கப்படுகிறது. திருவிழாவின் போது பக்தர்களுக்கு இடையூறாக காவல்துறையினர் வாகனங்கள் அடிக்கடி சென்று வருவதாகப் புகார் எழுந்து வந்தது, அதன் அடிப்படையில் இவ்வாறு காவல்துறையினர் பக்தர்களுக்கிடையே சென்று வருவதைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.