Guru Sukran: குரு மற்றும் சுக்கிரனால் உண்டாகும் சமசப்தக ராஜயோகம்.. புத்தியைத் தீட்டி பணத்தை ஈட்டப்போகும் ராசிகள்
Oct 03, 2024, 01:56 PM IST
Guru Sukran: குரு மற்றும் சுக்கிரனால் உண்டாகும் சமசப்தக ராஜயோகம்.. புத்தியைத் தீட்டி பணத்தை ஈட்டப்போகும் ராசிகள்
Guru Sukran: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒன்பது விதமான கிரகங்களும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு விதமான ராசி மற்றும் நட்சத்திரங்களுக்குப் பெயர்ச்சியாகிறது. இதன் தாக்கம் இருக்கும் 12 ராசிகளிலும் பின்விளைவுகளை உண்டாக்கிவிடும். அதில் சில ராசிகள் அதிக நன்மைகளையும், பல ராசிகள் கெடுபலன்களையும் சந்திக்கலாம்.
சமீபத்திய புகைப்படம்
மிகுந்த சக்தி வாய்ந்த குரு பகவானும், அதிக பலம் வாய்ந்த சுக்கிர பகவானும் இணைந்து சமசப்தக ராஜயோகம் உண்டாகிறது.
குரு பகவான் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். வரக்கூடிய அக்டோபர் 13ஆம் தேதி சுக்கிர பகவான், விருச்சிக ராசிக்குள் சஞ்சரிக்கவுள்ளார். இதனால் சமசப்தக ராஜயோகம் ஏற்பட்டுள்ளது.
அதாவது சுக்கிர பகவானும், குரு பகவானும் தூரமாக இருந்து நேர் எதிரே பார்ப்பதால், இந்த சம சப்தக ராஜயோகம் உண்டாகிறது.
இதனால் மூன்று ராசியினர் பெரும் நன்மைகளைப் பெறவுள்ளனர்.
சம சப்தக ராஜயோகத்தால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்:
ரிஷபம்:
சப்தக ராஜயோகம் ரிஷப ராசியினருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும். பணியிடத்தில் உங்களுக்கு எதிரான அரசியல் செய்தவர்களுக்கு பலத்த அடிவிழுகும். வெகுநாட்களாக வாங்க நினைத்தப் பொருட்களை வாங்குவீர்கள். கடன்பெற்று இருந்தால் இந்தக் காலத்தில் முழுமையாக அடைத்துவிடுவீர்கள். ரிஷப ராசியினருக்கு புதிதாக எந்தவொரு பிரச்னையும் இந்த காலத்தில் உருவாகாது. இந்த தருணத்தில் உங்கள் பிசினஸை ரிஷப ராசியினர் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வீர்கள். கிடைத்த பணத்தை சேமிக்க இந்தக் காலத்தில் கற்றுக்கொள்வீர்கள்.
தனுசு:
சமசப்தக ராஜயோகத்தால் தனுசு ராசியினருக்கு வெகுநாட்களாக பொருளாதாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். புதிய வாய்ப்புகளை, ஆர்டர்களைப் பிடிக்க முயலும் தொழில் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். வாழ்வில் அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். மேலும், இத்தனை நாட்களாக கடனுக்கு வாங்கிய சொத்துக்களை, கடனை அடைத்து மீட்பீர்கள். வாழ்வில் சரியாகத் திட்டமிட்டு, தொழிலில் அடியெடுத்துவைத்து முயற்சித்தாலே தனுசு ராசியினருக்கு வெற்றிதான். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். பொதுவெளியில் உங்களை எதிரியாகப் பார்த்தவர்கள், உங்களிடம் வந்து நட்பு பாராட்டுவார்கள். புதிய சிந்தனைகளை உங்கள் வாழ்வியலில் பழக்கிக்கொண்டாலும், வியாபாரத்தில் வெற்றி உண்டாகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு சனியின் தாக்கத்தால் கடந்த சில நாட்களாக குடும்ப வாழ்வில் பிரிவு, மனக்குழப்பம் ஆகியவை இருந்திருக்கும். இவை இரண்டும், சுக்கிரனும் வியாழனும் நேர் எதிராகப் பார்ப்பதால் உருவாகும் சமசப்தக யோகத்தால் மாறும். பிரிந்த கணவன் - மனைவியினர் ஈகோவை விட்டுவிட்டு சேர முயற்சிப்பீர்கள். நல்ல நிலைமைக்குப் போவீர்கள். சரியான வேலைவாய்ப்பு இன்றி இருக்கும் நபர்களுக்கு, வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வம்பு, வழக்கிலிருந்த விருச்சிக ராசியினருக்கு பிரச்னை சுமுகமாகும். நோய்ப்பாதிப்பு இருப்பவர்களுக்கு நோயின் தாக்கம் குறைந்து ஆரோக்கியம் மேம்படும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும். ஆன்மிகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!
டாபிக்ஸ்