தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thug Life: மணி ரத்னம் கமல் இணைந்த தக் லைஃப்.. சிம்புவால் வந்த வம்பு.. தெறித்து ஓடிய ஜெயம் ரவி, சித்தார்த், துல்கர்

Thug Life: மணி ரத்னம் கமல் இணைந்த தக் லைஃப்.. சிம்புவால் வந்த வம்பு.. தெறித்து ஓடிய ஜெயம் ரவி, சித்தார்த், துல்கர்

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 30, 2024 03:06 PM IST

Thug Life: பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து தக் லைஃப் படத்திற்கு வந்து வேலை செய்ய தொடங்கினார் ஜெயம் ரவி. மணி ரத்னம் தக் லைஃப் படத்தில் சிம்புவை கமிட் செய்தார். சூட்டிங் ஸ்பாட்டில் வந்த ஜெயம் ரவிக்கு சிம்பு இந்த ப்ராஜெக்டில் இருப்பது தெரிந்த உடன் அவர் வெளியேறி விட்டார்.

மணி ரத்னம் கமல் இணைந்த தக் லைஃப்.. சிம்புவால் வந்த வம்பு.. தெறித்து ஓடிய ஜெயம் ரவி, சித்தார்த், துல்கர்
மணி ரத்னம் கமல் இணைந்த தக் லைஃப்.. சிம்புவால் வந்த வம்பு.. தெறித்து ஓடிய ஜெயம் ரவி, சித்தார்த், துல்கர்

ட்ரெண்டிங் செய்திகள்

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படம், தக் லைஃப். நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், கவுதம் கார்த்திக், ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டப் பலர் நடித்துவருகின்றனர்'. ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீதர் பிரசாத் எடிட் செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தை மணிரத்னம் எழுதி இயக்குகிறார்.

’தக் லைஃப்’ படத்தின்மூலம் 36 ஆண்டுகளுக்குப் பின்னர் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகியோர் மீண்டும் ஒன்றுசேர்ந்துள்ளனர். உலக அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில், மும்பையில் கோலோச்சிய தாதா தமிழர் வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, 1987ஆம் ஆண்டு கமல்ஹாசனை வைத்து மணிரத்னம் இயக்கிய ‘நாயகன்’ திரைப்படம் உலகளவில் கல்ட் ஃபிலிமாக பார்க்கப்படுகிறது. இதையடுத்து தற்போது நடிகர் தக் லைஃப் படம் கவனம் ஈர்த்துள்ளது.

ஆரம்பத்தில் தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், சித்தார்த் ஆகியோர் நடிப்பதாக இருந்தது. ஆனால் தக் லைஃப் படத்தில் சிம்பு இணைவது உறுதியான உடன் நடிகர் ஜெயம் ரவி வெளியேறினார். பின்னர் துல்கரும் தான் விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார். நடிகர் சித்தார்த் வெளிப்படையாகவே அனைவரும் தெரிந்து கொள்ளும் படி தக் லைஃப் படத்தில் இருந்து விலகுவதாக தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டு அதிர்ச்சி அளித்தார். 

இதற்கு பல காரணங்கள் உள்ளது என சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபட்டது. இந்நிலையில் வி.கே. சுந்தர் அப்டேட்ஸ் என்ற பெயரில் நடத்தி வரும் யூடியூப் சேனலில் மூத்த சினிமா பத்திரிகையாளரும் மக்கள் தொடர்பாளருமான வி.கே.சுந்தர் அதற்கான காரணம் குறித்து தனது பதிவில் பேசி உள்ளார். அதில் "ஜெயம் ரவி தக் லைஃப் படத்திற்கு முன் பொன்னியின் செல்வனில் ஒப்பந்தமான போதே பிரச்சனை எழுந்தது. பொன்னியின் செல்வனில் சிம்பு இணைவதாக தகவல் பரவியதையடுத்து தான் விலகுவதாக ஜெயம் ரவி தெரிவித்தார். 

ஜெயம் ரவியின் விலகல் குறித்து செய்தி அறிந்த சிம்பு தான் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்து விட்டார். இதையடுத்து ஜெயம் ரவியிடம் அவரது தந்தையும், கமல்ஹாசன் தொடங்கி பலரும் பொன்னியின் செல்வன் படத்திற்கு முயற்சி எடுத்தும் முடியாமல் போய் விட்டது. இந்த வாய்ப்பு வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும் என்று சொன்னதால் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார். படம் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து மகிழ்ச்சியாக தக் லைஃப் படத்திற்கு வந்து வேலை செய்ய தொடங்கினார் ஜெயம் ரவி.

பொன்னியின் செல்வன் படத்தில் சிம்புவை நடிக்க வைக்க முடியாமல் போனதை எண்ணி மணி ரத்னம் தக் லைஃப் படத்தில் சிம்புவை கமிட் செய்தார். சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த ஜெயம் ரவிக்கு சிம்பு இந்த ப்ராஜெக்டில் இருப்பது தெரிந்த உடன் அவர் வெளியேறி விட்டார். அவர் ஏன் வெளியே வந்தார் என்றால், சினிமாவில் நைட் பார்ட்டி ஒன்றில் சிம்புவால் ஜெயம் ரவிக்கு ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. அதனால் இண்டஸ்ட்ரியில் இருக்கும் வரை சிம்புவை நேரடியாக பார்ப்பதோ, சேர்ந்து வேலை செய்வதோ கூடாது என்பதில் ஜெயம் ரவி உறுதியாக உள்ளார் என்று வி.கே சுந்தர் குறிப்பிடுகிறார். 

ஜெயம் ரவி வெளியில் வந்த அதே நேரத்தில் துல்கர் சல்மான் தானும் விலகுவதாக அறிவித்தார். சித்தார்த் வெளிப்படையாக டுவிட் போட்டிருந்தார். இப்போது ஒரே நேரத்தில் இளம் நடிகர்கள் 3 பேரும் விலகியது மணி ரத்தினத்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் சுஹாசினி மணி ரத்தினம் ஈடுபட்டுள்ளார். 

ஆனால் அது எந்த அளவிற்கு பாசிட்டீவ் ஆக மாறும் என்பது தெரியவில்லை. இதற்கிடையில் சிம்பு 60 நாள் கால் ஷீட் கொடுத்து ராஜஸ்தானில் உள்ள ஜெய் சால்மரில் சூட்டிங் நடை பெற்று வருகிறது."என்று அவர் தெரிவித்துள்ளார். ஒரு வேளை சிம்புவிற்கு படத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் அவர்கள் வெளியேறினதாக சொல்வதில் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை என பத்திரிகையாளர் சுந்தர் தெரிவித்துள்ளார்.

இதனால் நீண்ட நாட்களுக்கு பின் கமல் மணி ரத்னம் இணைந்துள்ள தக் லைஃப் படத்தில் சிம்புவால் வம்பு உருவாகி உள்ளது என்பது மட்டும் தெளிவாகி உள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்