Mesham : குலதெய்வ கோவில் உள்ள காலடி மண்ணை வீட்டு வாசலில் கட்டி பாருங்க மேஷ ராசியினரே.. அக்டோபர் அமோகமா இருக்கும்!
Sep 22, 2024, 07:58 AM IST
Mesham: நீங்கள் வாரம் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்ல இருக்கக்கூடிய கருடமூர்த்தியை வணங்கி வர வேண்டும். அது முடியாத பட்சத்தில் இந்த அக்டோபர் இரண்டுக்குள் நீங்க உங்களுடைய குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள். குலதெய்வ கோயில் உள்ள காலடி மண்ணை எடுத்து வந்து வீட்டின் நிலைவாசலில் கட்டுங்கள்.
Mesham : மேஷ ராசியினரே உங்களுடைய ராசி அதிபதியாக செவ்வாய் பகவான் அமைந்திருக்கிறார். மேஷ ராசியில் நட்சத்திரங்கள் என்று பார்த்தால் அஸ்வினி, பரணி, கிருத்திகை ஒன்றாம் பாதம் வரைக்கும் அமைந்து உள்ளது. உங்களுடைய வாழ்க்கை காலங்களில் நிறைய கஷ்டங்கள் இருந்திருக்கும். சந்தோஷமும் இருந்திருக்கும். அந்த கஷ்டத்திலேயே சந்தோஷம்னு சொல்லுவது போல் ஒரு விஷயம் நல்லதாக நடந்திருக்கும். அந்த நல்லது நடக்குறதுலயே ஒரு கெட்டது இருக்கும். அதேபோல தான் உங்களுடைய வாழ்க்கையில கஷ்டம் அதிகமாக இருக்கும் அந்த கஷ்டத்திலேயே சந்தோஷம்ங்கிறது உங்களுடைய வாழ்க்கையில எப்பயாவது வந்து போகும். இனி உங்கள் வாழ்வின் என்ன நடக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.
சமீபத்திய புகைப்படம்
கிரக நிலைகள்
கிரக மாற்றங்கள் எப்படி இருக்கும் என்றால் உங்களுடைய வாழ்க்கையில இந்த செப்டம்பர் மாதம் முடிந்து அக்டோபர் பிறக்கும் போது கிரக நிலைகளை பார்த்தால் தனவாக்கு குடும்ப ஸ்தானத்துல குரு அமைந்திருக்கிறார். தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் வளம் வந்து கொண்டிருக்கிறார். பஞ்சம ஸ்தானத்தில் சூரியனும் புதனும் வளம் வருகிறார்கள். ராண ரோன ரோக ஸ்தானத்தில் சுக்கிரனும் கேதுவும் சேர்ந்து வலம் வருகிறார்கள். லாப ஸ்தானத்தில் சனி வலம் வருகிறார். அயன, சயன, போக ஸ்தானத்தில் ராகு வலம் வருகிறார்கள். உங்களுடைய கிரக நிலைகளாக இப்படித்தான் உள்ளது.
முதல் விஷயம் உங்களுடைய வாழ்க்கையில இந்த சில மாதங்கள் அதாவது இந்த செப்டம்பர்லயும் சரி அக்டோபர் மாதம் பிறக்கும் போதும் சரி உங்களுடைய வாழ்க்கையில் துன்பங்கள் முழுவதுமாக மாறப்போகிறது. ஆனால் இதற்கு நீங்க செய்ய வேண்டியது ரெண்டு பரிகாரங்கள் உள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
இந்த மாதம் உங்களுடைய ராசிநாதர் அதாவது செவ்வாய் பகவான் சஞ்சாரத்துல அனுக்கிரகமாக இருப்பதால் உங்களுடைய வாழ்க்கையில நீங்க நினைத்த காரியங்கள் கொஞ்சம் முடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த அக்டோபர் இரண்டுக்கு பிறகு சொல்லவே வேணாம். உங்களுடைய தலைவிதி முழுவதுமாக மாறிவிடும். எந்த விஷயத்தை நீங்க ஆசைப்படுறீங்களோ எந்த விஷயத்துக்காக நீங்க முயற்சி பண்றீங்களோ அது உங்களுக்கு கட்டாயம் கிடைக்கும். எல்லா விதத்திலும் உங்களுக்கு ஓரளவுக்கு நன்மைகள் உண்டாகும். எந்த ஒரு நேரத்திலயும் உங்களுடைய வாழ்க்கையில ஒரு சில மனக்கவலைகளும் மனக்கஷ்டங்களும் வரலாம்.
அஷ்டமத்துல சனி இருப்பதுனால மனக்கவலைகள் என்பது உங்களுக்கு உண்டாகும் முக்கியமான வீண் செலவுகள் என்பது இந்த மேஷ ராசிக்காரருடைய வாழ்க்கையில் இருக்கும். தொழில் வியாபாரம் சுமுகமாக போகும். எந்த ஒரு முன்னேற்றமும் இருக்காது நஷ்டமும் இருக்காதுன்ற மாதிரி என்று புரிந்து கொள்ளுங்கள். புது ஆர்டர்கள் எல்லாமே வரும். ஆனால் பொறுமையா தாமதமாதான் வருவதற்கான காலங்கள் அமைந்திருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் நிச்சயம் இருக்கும். சம்பள உயர்வு கூட இருக்கு அல்லது ப்ரொமோஷன் கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் எதிர் எதிர்பார்த்த வேலைகள் உங்களுக்கு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரைக்கும் கணவன் மனைவிக்கு இடையானான மனவருத்தம் இருந்து கொண்டேதான் இருக்கும்.
ஒரு சில சண்டைகள் வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கு. உங்களுடைய சண்டைகளால் உங்களுடைய பிள்ளைகளுடைய மனதில் பாதிப்பு ஏற்படலாம். இதை அடுத்து வீண் கவலைகள் என்பது வீண் மன அலைச்சல்கள் என்பது உங்களுடைய குடும்பத்தில் இருக்கும். நீங்கள் வெளியே செல்லும் பொழுது வாகனத்தில் செல்லும்போது பார்த்து கவனமாக செல்லக்கூடிய காலங்களாக அமைந்திருக்குது.
நட்சத்திர பலன்கள்
அஸ்வினி
சொத்து தொடர்பான விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சொத்து விஷயத்துல நீங்க கவனத்தை இழந்துட்டீங்க என்றால் உங்களுடைய சொத்து பறி போயிடும். நீங்கள் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் சரி ஆலோசனை கேட்டுக்கொள்ளுங்கள். வழக்கு விவரங்களில் தடைகள் நீங்கும் கொஞ்சம் நல்லபடியாக மாற்றங்கள் இருக்கும். புதிய முயற்சிகள் தள்ளி போடுவது நல்லது. இந்த காலகட்டங்கள்ல நீங்க புதியதா எந்த எந்த ஒரு முயற்சி எடுத்தாலும் சரி அது உங்களுடைய குடும்பத்தையும் உங்களையும் வாட்டி வதைக்கும் முக்கியமாக பணப்பிரச்சனை செல்வ கஷ்டம் வந்துவிடும்.
பரணி
துணிச்சலாக எதையும் செய்து வெற்றி பெறக்கூடிய நாட்களாக இருந்தாலும் நீங்கள் ஒரு சில காரியங்களுக்கு வீண் அலைச்சல்கள் ஏற்படும். தடைகளும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீண்ட அலைச்சல்கள் காரணமாக உங்களுடைய வாழ்க்கையில நீங்க முயற்சி செஞ்சக்கூடிய விஷயங்கள் கைகூடும். ஆனாலும் அது தாமதமாகத்தான் கைகூடி வரும். எதிர்பார்த்தபடி சமூகத்தில் மதிப்பு மரியாதை உயர்வு உண்டாகும்.
கார்த்திகை
உடல் சோர்வு மனக்குழப்பம் ஏற்பட்டாலும், செலவு கட்டுக்குள் இருக்கும். தொழில் வியாபாரம் ஏற்றபடி நடக்கும் கூடுதலான ஒரு சில விஷயங்கள் செய்வதால் நன்மைகள் இருக்கும். கவனமாக செய்வதால் தொழில்ல கொஞ்சம் முன்னேற்றம் கிடைக்கும். தேவையான நேரங்களில் பண உதவி கிடைத்தாலும் பிறகு அந்த பண உதவியை சொல்லிக் குத்தி காமிக்கக்கூடிய காலங்களாக மாறுகிறது.
பரிகாரம்
நீங்கள் வாரம் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்ல இருக்கக்கூடிய கருடமூர்த்தியை வணங்கி வர வேண்டும். அது முடியாத பட்சத்தில் இந்த அக்டோபர் இரண்டுக்குள் நீங்க உங்களுடைய குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள். குலதெய்வ கோயில் உள்ள காலடி மண்ணை எடுத்து வந்து வீட்டின் நிலைவாசலில் கட்டுங்கள். அக்டோபர் இரண்டாம் தேதி அமாவாசை வருகிறது. இந்த அமாவாசை நாளில் குலதெய்வ கோவிலில் இருந்து காலடி மண்ணை எடுத்து வந்து வீட்டு வாசல்ல கட்டுங்கள்.
இன்னும் சிறப்பாக வரும் அக்டோபரில் வரும் அமாவாசை வியாழக்கிழமையில் வருவதனால் இது குருபகவானுடைய அருள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். குருபகவானுடைய அருளும்,
வாழ்க்கையில் பித்துருவுடைய ஆசீர்வாதமும் குலதெய்வத்தின் ஆசீர்வாதம் கிடைத்தது என்றால் நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் நடக்கின்ற கெட்டதுகள் எல்லாம் முழுமையாக நீங்கி நன்மைகள் நடக்கும். இந்த இரண்டு பரிகாரங்களில் ஏதாவது ஒன்று செய்யுங்கள். நம்பிக்கையோடும் இதை செய்தால் நிச்சயம் உங்களுடைய வாழ்க்கையில சிறப்பாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!