Vastu Tips: லட்சுமி தேவி ஆசீர்வாதம் பெற..! வாஸ்து தோஷம் போக்கி நேர்மறை ஆற்றல், செல்வ செழிப்பு பெற டிப்ஸ்
Vastu Tips for money: லட்சுமி தேவி ஆசீர்வாதம் பெறவும், நேர்மறை ஆற்றல், செல்வ செழிப்பு பெறவும் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படும் வாஸ்து டிப்ஸ் பற்றி பார்க்கலாம்
நம்மை அறியாமலேயே நாம் செய்யும் தவறுகள் பல சமயங்களில் மோசமான விளைவுகளையும் தாக்கத்தையும் உருவாக்கும். இது வாஸ்து தோஷம் காரணமாக ஏற்படுகிறது எனவும் வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஒவ்வொருவரும் தங்களது வாழ்விலை அமைதி நிலவ வேண்டும், மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்றே விரும்புகிறார்கள். ஆனால் வாஸ்து தோஷத்தால் ஒரு நபர் நிதி, உடல் மற்றும் மனரீதியான பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம்.
வாஸ்து தோஷம் இருந்தால், எதிர்மறை ஆற்றல் வீட்டுக்குள் நுழையும். இதன் காரணமாக நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். வாஸ்து தோஷத்தை நீக்கி, நேர்மறை ஆற்றலை பெருக்கி வீட்டில் நிதி செழிப்பை ஏற்படுத்தும் சில எளிய வாஸ்து குறிப்புகளை தெரிந்து கொள்ளலாம்
ஆரோக்கிய பிரச்னை நீக்க வழிகள்
நமது உடலில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்னைக்கும் வாஸ்துவுக்கு தொடர்பு உள்ளது. உதாரணமாக, ஒற்றைத் தலைவலி நம் வீட்டின் வடகிழக்கு திசையுடன் தொடர்புடையது. இந்த திசையில் ஏதேனும் கனமான கட்டுமானம், படிக்கட்டுகள், கழிப்பறை, சமையலறை இருந்தால், இதுபோன்ற உடல் ரீதி தொந்தரவு, சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இவை அனைத்தையும் இங்கிருந்து அகற்றிவிட்டு பின்வரும் பரிகாரங்களைச் செய்யுங்கள். ஒரு பெரிய படிகாரத்தை இந்த பகுதிகளில் வைக்கவும். செம்பு, பித்தளை அல்லது வெள்ளி கலசத்தில் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும்ய இந்த பகுதிகளில் துளசி செடியை வைத்து, இடத்தை சுத்தமாகவும் வெளிச்சமாகவும் வைத்திருங்கள். இதன் விளைவாக ஒற்றை தலைவலி ஏற்படுவது போன்ற உடல் ரீதியான பிரச்னைகள் அகலும்.
வீட்டின் மின்விசிறிகளை சுத்தமாக வைத்திருங்கள் இல்லையெனில் உடல்நலம் தொடர்பான பிரச்னைகள் வரலாம்.
வாஸ்து தோஷங்களுக்கான பரிகாரம்
வீட்டின் பூஜையறையை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் தெய்வங்கள் அங்கு குடியிருக்காது.
ஒரு நேர்கோட்டில் மூன்று கதவுகள் இருக்கக்கூடாது. இதனால், பணம் எவ்வளவு சம்பாதித்தாலும் வீட்டில் ஆற்றல் தங்காது. செழிப்பும் ஏற்படாது. இப்படி கதவுகள் இருப்பது வீட்டுக்கு வரும் பணம், உடனடியாக வெளியே செல்லும் வழியாகவும் உருவாகிறது.
பிரதான வாயிலில் காற்றழுத்தம் மூலம் ஒலி சத்தம் எழுப்பும் விதமாக ஏதோனும் பொருள்களை தொங்க விட வேண்டும். அதேபோல் படிக கற்களை கதவின் இரண்டு மூலைகளிலும், நடுவிலும் வைக்கப்பட வேண்டும். மெயின் கேட்டை மூடி வைத்து, யாராவது வரும்போது மட்டும் திறக்க வேண்டும்.
வீட்டின் கண்ணாடிகள் மற்றும் ஜன்னல்களை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள் இல்லையெனில் அது பணப்பிரச்னையை உருவாக்கும். சுவர் கடிகாரம் அழுக்காகிவிட்டாலோ அல்லது அதில் சிலந்தி வலைகள் இருந்தாலோ, அதை சுத்தம் செய்யவும். இது எதிர்மறையான விஷயங்களை ஈர்க்கிறது. எனவே அதை சுத்தமாக வைப்பதன் மூலம் நேர்மறை ஆற்றல் பெருகி, நிதி பற்றாக்குறையும் நீங்கி செல்வ செழிப்பு பெறலாம்.
பொறுப்புதுறப்பு: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரின் ஆலோசனையைப் பெறுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்