Sani Peyarchi : 2025ல் சனிபகவான் ஆட்டத்தை காட்டும் ராசியா நீங்கள் .. எந்த ராசிக்கு ஏழரை சனி தொடங்கும் பாருங்க!
Sani Peyarchi : வரக்கூடிய 2025 சனி பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பித்து அடுத்த இரண்டரை வருடம் விரையசனி நடைபெறப்போகிறது. மீன ராசிக்கு இப்பொழுது நடக்கக்கூடிய விரைய சனி முடிந்து அடுத்த இரண்டரை வருடம் ஜென்ம சனி நடைபெறப்போகிறது.

Sani Peyarchi : 2025 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி நடக்க உள்ள சனி பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனி, அர்த்தாஷ்டம சனி நடக்கப்போகிறது. இதனால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கு 25ல் எப்ப இருக்கும் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம். முதலாவதாக ஏழரை சனி ஏழரை சனியை மூன்று இரண்டரை ஆண்டு காலமாக பிரித்துச் சொல்லலாம் முதலாவது இரண்டரை வருடத்தை விரைய சனி என்றும் அடுத்ததாக வரும் இரண்டரை வருடத்தை ஜென்ம சனி என்றும் இறுதியாக வரக்கூடிய இரண்டரை வருடத்தை பாதசனி என்றும் அழைக்கிறோம். 2023 லிருந்து மகரத்திற்கு பாத சனியும், கும்ப ராசிக்கு ஜென்ம சனியும், மீன ராசிக்காரர்களுக்கு விரைய சனியும் நடைபெற்று வருகிறது. இனி வரக்கூடிய 2025 சனி பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பித்து அடுத்த இரண்டரை வருடம் விரையசனி நடைபெறப்போகிறது. மீன ராசிக்கு இப்பொழுது நடக்கக்கூடிய விரைய சனி முடிந்து அடுத்த இரண்டரை வருடம் ஜென்ம சனி நடைபெறப்போகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
கும்ப ராசிக்கு இப்பொழுது நடக்கக்கூடிய ஜென்ம சனி முடிந்து இறுதி இரண்டரை வருடமான பாதசனி நடைபெறப்போகிறது. இதில் மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியிலிருந்து முழுமையாக விடுதலை அடையப் போகிறீர்கள். மேஷ ராசிக்கு ஏழரை சனி 2025 இல் தொடங்கி அடுத்த ஏழரை வருடம் நடைபெறப்போகிறது.
அர்த்தாஷ்டம சனி
ராசிக்கு நான்கில் சனி வரும்பொழுது நடக்கக்கூடியது அர்த்தாஷ்டம சனியாகும். இப்பொழுது 2023 லிருந்து விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி நடந்து வருகிறது. 2025 இல் சனி பெயர்ச்சியிலிருந்து சனி தனுசு ராசிக்கு மாறி விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்த்தம சனி முடியப்போகிறது.