தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru: குருவின் வக்ரப் பெயர்ச்சி.. சைக்கிளில் இருந்து ஏரோபிளானில் ஜெட் வேகத்தில் வளரப்போகும் ராசிகள்

Guru: குருவின் வக்ரப் பெயர்ச்சி.. சைக்கிளில் இருந்து ஏரோபிளானில் ஜெட் வேகத்தில் வளரப்போகும் ராசிகள்

Marimuthu M HT Tamil

Sep 26, 2024, 04:40 PM IST

google News
Guru: குருவின் வக்ரப் பெயர்ச்சி.. சைக்கிளில் இருந்து ஏரோபிளானில் ஜெட் வேகத்தில் வளரப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.
Guru: குருவின் வக்ரப் பெயர்ச்சி.. சைக்கிளில் இருந்து ஏரோபிளானில் ஜெட் வேகத்தில் வளரப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

Guru: குருவின் வக்ரப் பெயர்ச்சி.. சைக்கிளில் இருந்து ஏரோபிளானில் ஜெட் வேகத்தில் வளரப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

Guru: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒன்பது விதமான கிரகங்களும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு விதமான ராசி மற்றும் நட்சத்திரங்களுக்குப் பெயர்ச்சியாகிறது. இதன் தாக்கம் இருக்கும் 12 ராசிகளிலும் பின்விளைவுகளை உண்டாக்கிவிடும். அதில் சில ராசிகள் அதிக நன்மைகளையும், பல ராசிகள் கெடுபலன்களையும் சந்திக்கலாம்.

சமீபத்திய புகைப்படம்

சனி பகவானின் ஆட்டம் ஆரம்பம்.. பண மழையில் நனைய காத்திருக்கும் 3 ராசிகள் எது தெரியுமா.. ஜாக்பாட் உங்களுக்கா!

Dec 22, 2024 11:19 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இன்று டிச.22 உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்?

Dec 22, 2024 11:19 AM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.22 உங்கள் காதல் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்குமா?

Dec 22, 2024 10:58 AM

யாருக்கெல்லாம் முத்து அணிந்தால் செல்வம் பெருகும்.. யார் அணிய கூடாது தெரியுமா.. முத்து வாங்கும் முன் இத தெரிஞ்சுக்கோங்க!

Dec 22, 2024 10:35 AM

யாருங்க இந்த பாபா வங்கா.. என்னது 2025 ல் பொன்னாக ஜொலிக்க காத்திருக்கும் 5 ராசிகளை கணித்திருக்கிறாரா!

Dec 22, 2024 10:08 AM

‘செல்வம் தேடி வரும்.. நினைத்தது நடக்கும் யோகம் யாருக்கு பாருங்க’ மேஷம் முதல் மீனம் வரை இன்று எப்படி இருக்கும் பாருங்க

Dec 22, 2024 05:00 AM

குறிப்பாக, ஒருவருக்கு சிறந்த கல்வி, சிந்தனை, குழந்தைப்பேறு, நல்லெண்ணங்களைத் தரக்கூடியவர், குரு பகவான். இவர் தற்போது ரிஷப ராசியில் சஞ்சரித்து வரும் நிலையில், வரக்கூடிய அக்டோபர் 9ஆம் தேதி, புதன் கிழமை காலை 10:01 மணிக்கு ரிஷபத்திலேயே குரு பகவான் பின்னோக்கி நகரக்கூடியவர். இதை குருவின் வக்ரப்பெயர்ச்சி என்பர். இதே நிலையில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வரை வக்ரமாக குரு பகவான் நகரக்கூடியவர். குருவின் இந்தச் சூழலால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

குரு பகவானால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்:

மிதுனம்: 

குரு பகவான் விரய ஸ்தானத்தில் இருப்பதால் சமீப காலமாக மிதுன ராசியினர் விரயச் செலவுகளை செய்திருப்பர். இந்நிலையில் குருவின் வக்ரப்பெயர்வு, மிதுன ராசியினருக்கு நன்மைகளைத் தரும். இலக்குகளை நோக்கி தடையில்லாமல் பயணிப்பீர்கள்.புதிய வெற்றிகளைப் பெறுவீர்கள்.

வெகுநாட்களாக உங்களிடம் வாங்கிவிட்டு திரும்ப கிடைக்காமல் இருந்த பணம் கிடைக்கும். எந்த விஷயத்திலும் நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழிலில் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் லாபம் ஈட்டலாம்.

கடகம்:

கடக ராசியினருக்கு குருவின் வக்ரப்பெயர்ச்சி காரணமாக தொழிலில் புதியவர்களின் நட்புகள் கிடைக்கும். அதனால் வாய்ப்புகள் உண்டாகும். ஆகையால், கடக ராசியினருக்கு மிதமிஞ்சிய லாபம் கிடைப்பது உறுதி. வேலைக்குண்டான முயற்சிகள் நிறைவேறும்.

கன்னி:

ரிஷப ராசியில் குருவின் வக்ர நிலையால், கன்னி ராசியினர் விரும்பிய பலன்களைப் பெறலாம். இந்த காலகட்டத்தில் அவசரமுடிவுகளை எடுக்காமல் இருக்கலாம். தொழிலில் சிக்கல்கள் உருவாகியிருந்தால், இந்த காலத்தில் சரியாகும். எதிரிகளின் பலம் குறையும். ஆரோக்கிய அக்கறை தேவை.

விருச்சிகம்:

விருச்சிக ராசியினருக்கு குருவின் வக்ரப் பெயர்ச்சியால் இத்தனை நாட்களாக இருந்த மந்தத்தன்மை நீங்கும். பணியிடத்தில் மேல் அலுவலர்களின் ஆதரவு கிட்டும். தொழில் செய்பவர்களுக்கு சரியாகத் திட்டமிட்டு உயர்ந்தால் நல்ல லாபம் கிடைப்பது உறுதி. புதிய சிந்தனைகளை உங்கள் வாழ்வியலில் பழக்கிக்கொண்டாலும், வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். இருப்பினும், செலவீனத்தை ஆராய்ந்து பார்க்காமல் இருந்தால் சம்பாதித்து மொத்தத்தையும் இழந்துவிட வாய்ப்புள்ளது. ஆகையால், பார்த்து செலவிடுங்கள்.

தனுசு:

தனுசு ராசியின் அதிபதியாகத் திகழ்பவர், குரு பகவான். குருவின் வக்ரப் பெயர்ச்சியால், தனுசு ராசியினருக்கு நன்மையே உண்டாகும். பணியிடத்தில் இழந்த மரியாதையை தனுசு ராசியினர் பெறுவர். வணிகர்களுக்கு கிடைக்காத ஒப்பந்தங்கள் எல்லாம் கைவசம் வரும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். பொதுவெளியில் உங்களை எதிரியாகப் பார்த்தவர்கள், உங்களிடம் வந்து நட்பு பாராட்டுவார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

ஆன்மிகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!

டாபிக்ஸ்

அடுத்த செய்தி