Today Pooja Time : இன்றைய குரு பகவான் வழிபாடு, பூஜைக்கு உகந்த நேரம் .. விரதம் குறித்த முக்கிய தகவல்கள் இதோ!
Today Pooja Time : உணவு, தண்ணீர் என எதையும் உட்கொள்ளாமல் நவகிரக சன்னதிக்குச் சென்று மஞ்சள் நிறப் பூக்களை நைவேத்தியமாக படைக்க வேண்டும். குருபகவானுக்கு மஞ்சள், சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தால் கூடுதல் சிறப்பாகும். இந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம் , எமகண்டம் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.

Today Pooja Time: இன்று 2024 செப்டம்பர் மாதம் 25ம் தேதி வியாழக்கிழமை. இன்று காலை, மாலை, நல்ல நேரம், எமகண்டம், எப்போது என்பதை பற்றி பார்ப்போம். மேலும் இன்றைய நாளில் எந்த கடவுளை வணங்குவது உங்களுக்கு நன்மை பயக்கும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். பொதுவாக குரு பகவானுக்கு உகந்த நாளாக வியாழக்கிழமை கருதப்படுகிறது. வியாழக்கிழமைகளில் குரு பகவானை மனதார நினைத்து மேற்கொள்ளும் விரதம் குரு வார விரதம் ஆகும். குரு பகவானின் அருளை பெறுவதற்கு இந்நாளில் விரதம் இருந்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். குரு பகவானை நினைத்து விரதம் இருப்பவர்கள் வியாழக்கிழமை அன்று அதிகாலையிலேயே எழுந்து சுத்தமான நீரில் குளித்துவிட்டு மஞ்சள் வண்ண ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 26, 2025 06:03 PMகுருபெயர்ச்சி பலன்: பண அதிர்ஷ்டம் இந்த ராசிகள் கதவை தட்டப்போகுது.. 2025-இல் மே குரு பெயர்ச்சி.. யார் அந்த அதிர்ஷ்டசாலி?
Mar 26, 2025 02:26 PMகீர்த்தி யோகம்: சனிப்பெயர்ச்சி 2025.. தலைகீழாக மாறப்போகும் ராசிகள் யார்?.. சனி குறித்து விட்டார்..!
Mar 26, 2025 11:17 AMரிஷபம், கும்பம், விருச்சிக ராசிக்கு அடிக்க போகுது ஜாக்பாட்.. சனி உதயத்தால் நல்ல நேரம் ஆரம்பம்.. பதவி உயர்வு கிடைக்கும்!
Mar 26, 2025 06:30 AMKetu Transit 2025: அந்த ராசிகளே தான்.. கேது பெயர்ச்சி.. அசுப கிரகம் தரும் யோக பலன்களை பெறும் ராசிகள்!
Mar 26, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : பணம் தேடி வரும் யோகம் உங்களுக்கா.. கவனமா இருங்க காரியம் முக்கியம்.. இன்று ஜாக்பாட் யாருக்கு பாருங்க!
Mar 25, 2025 04:04 PMவக்ர செவ்வாய்: நேராக வருகின்ற செவ்வாய்.. இனி வாழ்க்கை நேராக மாறும் ராசிகள்.. உங்க ராசி என்ன ராசி?
உணவு, தண்ணீர் என எதையும் உட்கொள்ளாமல் நவகிரக சன்னதிக்குச் சென்று மஞ்சள் நிறப் பூக்களை நைவேத்தியமாக படைக்க வேண்டும். குருபகவானுக்கு மஞ்சள், சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தால் கூடுதல் சிறப்பாகும். இந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம் , எமகண்டம் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.
இன்று 25 செப்டம்பர் 2024
இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு : குரோதி வருடம்
தமிழ் மாதம் : புரட்டாசி
தேதி : 10
கிழமை : வியாழக்கிழமை
பிறை -தேய்பிறை.
திதி: - நவமி.
மாலை : 05.30 வரை, பின்பு தசமி.
இரவு: 07.05 வரை, பின்பு தசமி.
திதி : நவமி
நக்ஷத்திரம்:
புணர்பூசம் ( செப்டம்பர் 27 அதிகாலை 4.32 நிமிடம் வரை பின்பு பூசம்)
திதி : அவிதா நவமி
நல்ல நேரம்:
காலை: 10.45 - 11.45 PM.
ராகு காலம்:
பிற்பகல்: 01.30 - 03.00 PM
எமகண்டம் : 6.00 -7.30
குளிகை : காலை 9.00- 10.30
( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும். )
சூரிய - உதயம்:
காலை: 06.03
சந்திராஷ்டம்- நட்சத்திரம்:
ஸ்தல- விஷேசங்கள்:
பத்ராச்சலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு
சுவாமி மலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆலயத்தில் சுவாமிக்கு தங்க கவசம் வைரவேல் தரிசனம்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்