Guru Peyarchi: குறி வச்சு அடிக்க காத்திருக்கும் குரு பகவான்.. ரிஷப ராசியினரே கவனம்.. சத்தியநாராயணர் பூஜைய மறந்துடாதீங்க!
Guru Peyarchi: வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து குரு பகவானுடைய காயத்ரி மந்திரத்தை 101 தடவை சொல்லுங்கள். ஒவ்வொரு பௌர்ணமிக்கும் சத்யநாராயண பூஜை செய்வதும் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக நீங்கள் மாற்றி அமைத்து ஒரு மிகப்பெரிய வெற்றியை காண முடியும்.
Guru Peyarchi: குருபகவானுடைய வக்கிர பயிற்சி பலன்கள் 9 அக்டோபர் 2024 முதல் நான்காம் தேதி பிப்ரவரி 2025 ஆம் ஆண்டு வரை இருக்கக்கூடியது. குருபகவானுடைய வக்கிர பயிற்சி தற்சமயம் ரிஷப ராசியில் இருக்கக்கூடிய குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் பெயர்ந்து கொண்டிருக்கிறார். இவர் மிருக சீரிடம் நட்சத்திரத்துக்கு இன்னும் சில நாட்களில் சேரப்போகிறார். அங்கே சேர்ந்த பிறகு அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று சரியாக வக்கிரகதி அடைகிறார். அதே நட்சத்திரத்தில் அந்த வக்கிர நிலையில் கிட்டத்தட்ட ஐந்து மாசம் நீடிக்கிறார். இந்த மாதிரியான நிகழ்வு ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
ரிஷபம் காலபுருஷனின் இரண்டாம் வீடு தனம் வாக்கு குடும்ப ஸ்தானம் ஆதிபத்தியத்தை கொண்ட இந்த வீட்டுக்கு அதிபதியாக வரக்கூடிய சுக்கிரபகவான். இங்கே சந்திரன் உச்சம் பெறக்கூடிய ஒரு ஸ்தானம். ரிஷப ராசி இருக்கக்கூடியவர்கள் 95% அழகின் உச்சமாக இருப்பார்கள். இந்த ரிஷப ராசியில் இருக்கக்கூடிய இந்த வக்கிர பெயர்ச்சியானது என்ன மாதிரியான பலன்களை செய்யும். ரிஷபத்தில் குருபகவானே சஞ்சரிக்கிறார். பொதுவாக குருபகவானுக்கும் ரிஷப ராசிக்கும் எட்டு பொருத்தம்.
ராஜயோகம்
சுத்தமான அஷ்டம ஸ்தானாதிபதி. ரிஷபத்திற்கு அஷ்டம ஸ்தானம்னா எல்லாவிதமான கெடுதல்களும் ரிஷபத்திற்கும், துலாமிற்கும் செய்யக்கூடியவர்தான் குருபகவான். ஒரு முழு சுப கிரகமாக இருந்தாலும் தேவர்களுக்கெல்லாம் குருவாக இருந்தாலும் பிரகஸ்பதி என்ற பெயரை பெற்றிருந்தாலும் கல்வி, ஞானம், ஆன்மீகம், அறிவு, படிப்பு, புத்திரகாரகன் கல்யாண பார்வை, தனகாரகன் இது அத்தனை காரகத்துவங்களையும் பெற்றிருந்தாலும் இது அத்தனையும் ரிஷப ராசிக்கும், துலாம் ராசிக்கும் தராம பார்த்துக்கிறது தான் குருபகவான் உடைய வேலை. இதுல விதிவிலக்குகள் உண்டு ஒரு ரிஷப ராசி, ரிஷப லக்னம் துலா லக்னக்கார ஜாதகத்துல குரு பகவான் கெட்டுப்போயிருந்தார் என்றால் அது ராஜயோகம். அதே ரிஷப லக்னம் துலா லக்னம் ஜாதகத்துல குருபகவான் வலுத்திருந்தார் என்றால் கஷ்டம் தான். கெட்டுப்போயிருக்காரா வலுத்து இருக்காரா அப்படிங்கறத நம்ம சுய ஜாதகத்தை வச்சுதான் கணிக்க முடியும்.
ரிஷப ராசிக்கு இப்போ ஜென்ம குருவாக இருக்கக்கூடிய குருபகவான் கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிடம், நட்சத்திரங்களை நட்சத்திரமாக கொண்வர்கள். ரிஷப ராசி அன்பர்களுக்கு ஜென்ம குரு கடந்த ஒரு ஆறு மாதங்களாக படாத பாடுபடுத்திக் கொண்டுதான் இருப்பார் முதல்ல ஆரோக்கியத்தில் கை வச்சிருப்பார். தேவையில்லாத உடல் உபாதைகள், தேவையில்லாத பிரச்சனைகள், யோசிக்கிற தன்மையை கொஞ்சம் கம்மி பண்ணி இருப்பார், கடவுள் நம்பிக்கை குறைவது இது மாதிரியான பிரச்சனைகள் கண்டிப்பா நடந்திருக்கும்.
குரு இருக்கின்ற இடத்தை விட அவர் பார்க்கின்ற இடங்களுக்கு பலம் அதிகம் அந்த வகையில உங்கள் ராசியில் அவர் வக்கிரம் பெறும் பொழுது உடல்ல ஏற்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி எண்ணங்கள் சுத்தப்பட்டு நேர்கதியில் சிந்திக்கக்கூடிய திறனும் ஆன்மீகம் ஆண் ஆண்டவனுடைய ஆசீர்வாதம் இதையெல்லாம் கிடைக்கக்கூடிய யோகம் எல்லாம் கிடைக்கும்.
புத்திர பாக்கியம்
இது எல்லாத்துக்கும் மேல ஐந்தாம் பார்வையாக உங்களுடைய கன்னி ராசியை உங்களுடைய பஞ்சம ஸ்தானத்தை பார்க்கும் பொழுது ரொம்ப வருஷமா திருமணமாகி புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியத்தை வழங்கக்கூடிய அளவில் அவர் அந்த பார்வையை வக்கிரகதியாக பார்ப்பார். உங்களுக்கு அஞ்சாம் இடத்தில்னா பூர்வ புண்ணிய ஸ்தானம்ங்கிறதுனால கோர்ட், கேசு வம்பு வழக்கு போராட்டம், பிரச்சனை அப்படின்னு வாழ்க்கை வரைக்கும் இருந்துட்டேன் சார் அப்படின்னா இந்த அக்டோபர் ஒன்பதாம் தேதிக்கு அப்புறம் பிப்ரவரி நாலாம் தேதிக்குள்ள உங்களுக்கு விடிவு காலம் வர வாய்ப்பு உள்ளது.
அடுத்தபடியாக அவருடைய ஏழாம் பார்வையால் உங்களுடைய ஏழாம் வீடு என்று சொல்லக்கூடிய விருச்சிக ராசியை பார்க்கிறார். இந்த விருச்சிக ராசியை பார்க்கக்கூடிய கூடிய குருபகவானே ஒரு ஸ்பெஸ் தான். உங்கள் ராசியில் உச்சம் பெறக்கூடிய சந்திரன் உங்களுடைய ஏழாம் வீட்டில் போய் நீச்சம் அடைகிறார் .ஏழாம் இடம் என்பது பொதுவாக வாழ்க்கை துணையை குறிப்பதாகும். தொழிலை குறிப்பதாகும். சில விஷயங்களில் உயர்மட்ட உறவுகள் ஒரு சமுதாயத்தில் இருக்கக்கூடிய பெரிய நண்பர்கள் இதையெல்லாம் குறிப்பதாகும். இந்த ஏழாம் இடத்தை பார்க்கின்ற குருபகவான் அந்த ஏழாம் இடத்தை வலுப்படுத்துகிறார்.
திருமணம் தள்ளிப்போனால் ரிஷப ராசி அன்பர்களுக்கு உங்களுடைய ஏழாம் வீடு உங்களுக்கு ஆகாத குருபகவான் தன்னிச்சையாக வக்கிரகதி அடைந்து அந்த பார்வையை வந்து ஏழாம் இடத்தில் செலுத்தும் பொழுது பல வருஷமா வரன் தேடியும் திருமணம் நடக்க வில்லை என்றால் ஒரு அருமையான வரன் அமையக்கூடிய யோகம் என்பது அக்டோபர் 9-ல இருந்து பிப்ரவரி 4-க்குள்ள இருக்கும். ஆனால் அதற்கும் உங்கள் சுய ஜாதகம் இடம் கொடுக்க வேண்டும்.
மகன் தந்தை உறவு
அதே மாதிரி அடுத்தது ஒன்பதாம் பார்வையாக உங்களுடைய ஒன்பதாம் இடம் என்று சொல்லக்கூடிய மகர ராசியை அவர் பார்க்கிறார். இந்த மகர ராசி அவர் பார்க்கும் பொழுது பாக்கியஸ்தானம் தந்தைக்கும் உங்களுக்குமான உறவு வலுப்படும். புதிய வேலை வாய்ப்புகள் சம்பந்தப்பட்ட மிகப்பெரிய ஒரு நல்ல செய்தி கிடைக்கும். வெளிநாடு சென்று வரவேண்டும் வெளிநாட்டில் செட்டில் ஆக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது சரியான நேரம்.
பரிகாரம்
வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து குருபகவானுடைய காயத்ரி மந்திரத்தை 101 தடவை சொல்லுங்கள்.
ஒவ்வொரு பௌர்ணமிக்கும் சத்யநாராயண பூஜை செய்வதும் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக நீங்கள் மாற்றி அமைத்து ஒரு மிகப்பெரிய வெற்றியை காண முடியும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!
தொடர்புடையை செய்திகள்