Lemon: வீட்டு வாசற்படி மேல் எலுமிச்சை பழத்தைக் கட்டி வைத்தால் என்னென்ன நன்மைகள்னு பாருங்க!
May 16, 2024, 12:49 PM IST
Lemon: வீட்டு வாசலில் எலுமிச்சை பழம் கட்டினால் கிடைக்கும் பயன்கள் வீட்டு வாசலில் எலுமிச்சை பழத்தை பலர் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். அது ஏன் என தெரியுமா? வாங்கப் பார்க்கலாம்.
எலுமிச்சை என்பது மலை உச்சியிலும் வளரக் கூடியது. மேலும் பல நன்மைகளைக் கொண்டுள்ளது எலுமிச்சை என்பது பலரும் அறிந்ததே.
சமீபத்திய புகைப்படம்
சரி வீட்டு வாசலில் எலுமிச்சை பழத்தை தொங்கவிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம். உண்ணக் கூடிய பொருட்கள் நமது உயிரைப் பாதுகாக்கும்.
எலுமிச்சையில் இருக்கக் கூடிய சில சக்திகள் நம்மிடம் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை விரட்டி அடிக்கக் கூடிய சக்தி படைத்தவை.
எலுமிச்சையை சாப்பிடும்போது பித்தத்தை போக்கும். தொண்டை வலியைப் போக்கும். பல் நோய்களை குணப்படுத்தும். வாய் நாற்றத்தை போக்கும். சரும நோய்களையும் குணப்படுத்தும். வாய்ப்புண்ணை ஆற்றும்.
தேள் கடிக்கும் அற்புதமான மருந்து எலுமிச்சை. கோடைக்காலத்திலும் இது மிகவும் பயன் தரக் கூடியது.
எலுமிச்சைச்சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் எலுமிச்சையை தினமும் சாப்பிடலாம்.
எலுமிச்சையில் உள்ள பயன்கள்
எலுமிச்சை சாறு உயர்ந்த கிறுமி நாசினியாக இருக்கும்.
எதிர்ப்புகளை சமாளிக்க மனிதர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது எலுமிச்சை. எலுமிச்சை விதைகள் செல்வத்தை இழுக்கக் கூடியவை. எலுமிச்சையை கோயிலில் வைத்து சாமி கும்பிட்டுவிட்டு அதை பயணிக்கும்போது கொண்டு செல்லலாம். சக்தியை வாங்கி வைக்கும் ஆற்றல் கொண்டது எலுமிச்சை. திருஷ்டியைப் போக்கக் கூடியது. பொறாமைப் பார்வையைப் போக்கக் கூடியது. எலுமிச்சை பழத்தை குங்குமத்தில் தடவி சுற்றிப் போடுவதைக் கூட நாம் பார்த்திருப்போம்.
உடம்பில் இருக்கக் கூடிய சிக்கல்கள் போகும். கெட்ட அதிர்வுகளைக் கூட சரி செய்யக் கூடியவை எலுமிச்சை. எலுமிச்சையை வீட்டில் முன்னால் கட்டும்போது கண் திருஷ்டி கழியும். திருஷ்டி என்றால் கண் பார்வை என அர்த்தம்.
காவி நிற விநாயகரை வாசலில் வைப்பது ஏன்?
இதனிடையே, வாஸ்து படி, காவி நிற விநாயகர் சிலையை பிரதான வாசலில் வைப்பது மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கு மங்களகரமானது. இவற்றுடன் கொழுக்கட்டை, விநாயகருக்குப் பிடித்த வாகனமான எலி ஆகியவற்றைக் கையில் வைத்திருக்க வேண்டும். முன்னேற்றத்திற்கு வெள்ளை நிற விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்வது நல்லது.
பிரதான வாயிலில் உள்ள கணபதி பாபாவின் சிலையில், அவரது தலை இடதுபுறமாக இருக்க வேண்டும். வீட்டில் வைத்தால் விநாயகப் பெருமானின் விக்கிரகத்தை வலது பக்கம் நிறுவ வேண்டும். குழந்தைப் பேறு விரும்புபவர்களும், புதுமணத் தம்பதிகளும் வீட்டில் விநாயகப் பெருமானின் சிலையை வலப்புறமாகத் திருப்பி வைத்து வைப்பது மிகவும் நல்லது.
நடனம் ஆடும் விநாயகர் சிலையை தவறுதலாக கூட வீட்டில் வைக்கக்கூடாது. மேலும் யாருக்கு பரிசாக வழங்கக்கூடாது. அத்தகைய சிலையை வீட்டில் வைத்தால் சச்சரவுகள், சச்சரவுகள் ஏற்படும். வாஸ்து படி விக்னேஷ்வரர் சிலையை அங்கு வைக்கக்கூடாது. குளியலறையின் கதவுக்கு அருகில் வைக்க வேண்டாம். மேலும் படுக்கையறையில் விநாயகர் சிலையை வைத்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படும். அதனால் இந்த இடத்தில் விநாயகர் சிலை வைக்கக்கூடாது
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்