Vastu Tips: முன்னோர்களின் ஆசி கிடைக்கும்! அரச மரம் வீட்டில் வளர்க்கலாமா? வாஸ்து சாஸ்திரம் கூறுவது இதுதான்
குழந்தைகளுக்கு பாதிப்பு, முன்னேற்ற தடை போன்ற பல பிரச்னைகள் அரச மரத்தால் வரும் என்கிறது வாஸ்து சாஸ்திரம். இந்த மரம் இருந்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் வீட்டில் என நம்பப்பட்டாலும், அரச மரம் வீட்டில் வளர்க்கலாமா என்பது பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படும் விஷயத்தை தெரிந்து கொள்ளலாம்.
வீட்டில் அரச மரம் இருந்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது. தெய்வீக சக்தி கொண்டதாக இருக்கும் அரச மரத்தின் நன்மைகளை அளவிட முடியாது. வாஸ்து சாஸ்தரத்தில் அரச மரத்தின் முக்கியத்துவம் என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம்.
வாஸ்து சாஸ்திரத்தில் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க பல பரிகாரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றாக மரம் சார்ந்த பரிகாரங்கள் இருக்கின்றன.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் சில மரங்களை வைத்திருப்பது வீட்டில் மகிழ்ச்சியை நிரப்புவதுடன், பிரச்னைகள் ஏற்படாலும் தடுக்கும் என கூறப்படுகிறது. அதே சில மரங்களை வீட்டின் பகுதியில் வைத்தால், ஆபத்தை ஏற்படுத்தும்.
பெரும்பாலும் கோயில்களில் அரச மரம் இருப்பது ஐதீகமாக உள்ளது. அரச மரத்தின் மத முக்கியத்துவம் வலுவானது. அரச மரம் வீட்டில் இருப்பதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
வீட்டில் அரச மரம் இருந்தால் மங்களகரமானதா?
வீட்டில் அரச மரம் இருந்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது. ஆனால் வீட்டில் அரச மரம் இருப்பது நல்ல பலனை தராது என்று சூழலியலாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இந்த மரத்தின் தெய்வீக சக்தி அபாரமானது. அரச மரம் வளரும் வீட்டில் வறுமை ஆழமாக வேரூன்றியுள்ளது என்று கூறப்படுகிறது.
நிதி பிரச்னைகள்
வீட்டின் கிழக்கு பகுதியில் அரச மரம் இருந்தால், பொருளாதார பிரச்னைகள் வரலாம். வீட்டின் சுவரில் அரச மரம் வளர்ந்தால், தனிமை வீடு முழுவதையும் ஆட்டிப்படைக்கும் என்றும் கூறப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் கூட தனிமையால் பாதிக்கப்படலாம்.
அரச மரத்தில் நிழலால் ஆபத்து
அரச மரத்தின் காற்று மிகவும் நிதானமாக இருக்கும். அதன் நிழல் இல்லறத்தாருக்கு நல்லதல்ல என்கிறார்கள் சாஸ்திர வல்லுநர்கள். இது வீட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கிறது. இதனால், குடும்ப உறுப்பினர்களின் தொழில் பாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள்
அரச மரத்தால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த அரச மரம் குடும்பத்தின் வளர்ச்சியைத் தடுக்கிறது. வீட்டில் அரச மர நிழல் படும்போது குடும்பத்தில் பலவிதமான தடைகள் வரும். ஆனால் இந்த மரம் வீட்டுக்கு வெளியே இருந்தால் அதை வணங்க வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.
சுவரில் அரச மர இலைகள் படர்ந்தால் என்ன செய்வது
அரச மரத்தை வேரோடு பிடுங்கக் கூடாது என்பது ஐதீகம். அதனால் வீட்டில் வளர்ந்தாலும் வேரோடு பிடுங்கக்கூடாது. ஏனெனில் இந்த மரத்தின் வேரில் பிரம்மா வசிப்பதாக நம்பப்படுகிறது.
இந்த மரத்தை வணங்கி தொட்டியில் எடுத்து சென்று கோயிலில் நட்டு விடுமாறு சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த மரத்தை வெட்டுவது முன்னோர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது, மேலும் திருமண வாழ்க்கையில் தடைகள் இருக்கும் எனவும், மேலும் குழந்தைக்கும் பிரச்னைகள் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த செடி வீட்டில் வளரும்போது 45 நாட்கள் பசும்பாலில் வைத்து வழிபட்டு, பின்னர் கோயிலில் வைத்து வழிபடலாம் என்பது ஐதீகம். ஆனால் அதன் வேர்களை வெட்டாமல் கவனமாக இருக்க வேண்டும்.
பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்