தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ராகு ராஜபாட்டை.. 3 ராசிகள் மூச்சு முட்ட கொட்டும் பணம்.. அதிரடி யோகம் வருகுது.. குடும்பத்தில் பொங்கும்!

ராகு ராஜபாட்டை.. 3 ராசிகள் மூச்சு முட்ட கொட்டும் பணம்.. அதிரடி யோகம் வருகுது.. குடும்பத்தில் பொங்கும்!

Dec 18, 2024, 09:51 AM IST

google News
Lord Rahu: ராகு பகவானின் கும்பராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் 2025 ஆம் ஆண்டு கலவையான பலன்களை கொடுக்கப் போகின்றது. ஆனால் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்
Lord Rahu: ராகு பகவானின் கும்பராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் 2025 ஆம் ஆண்டு கலவையான பலன்களை கொடுக்கப் போகின்றது. ஆனால் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்

Lord Rahu: ராகு பகவானின் கும்பராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் 2025 ஆம் ஆண்டு கலவையான பலன்களை கொடுக்கப் போகின்றது. ஆனால் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்

Lord Rahu: நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்கக்கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கி பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு பகவான் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார்.

சமீபத்திய புகைப்படம்

கேதுவின் பெயர்ச்சி.. இந்த ராசிக்களுக்கு பட்ட கஷ்டம் எல்லாம் அகல போகுது.. இனி வெற்றி மேல் வெற்றி தான்!

Dec 18, 2024 11:37 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.18 உங்கள் காதல் வாழ்க்கையில் தொந்தரவு இருக்குமா?

Dec 18, 2024 10:44 AM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.18 உங்கள் காதல் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்குமா?

Dec 18, 2024 10:28 AM

தாராளமாக தரப்போகும் கேது.. 2025-ல் சுழற்றி அடிப்பார்.. இந்த ராசிகள் கையில் சிக்க மாட்டார்கள்!

Dec 18, 2024 10:21 AM

தட்டிக் கொடுக்கப்போகும் சனி .. 2025 முதல் பணமழை கொட்டும் ராசிகள்.. கல்யாண யோகம் வந்துடுச்சு

Dec 18, 2024 10:16 AM

2025ல் புதிய வாகனங்கள், சொத்துக்கள் வாங்கும் யோகம் இந்த மூன்று ராசிக்கு இருக்கு.. சூரியனின் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம்!

Dec 18, 2024 07:21 AM

ராகு மற்றும் கேது இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். அந்த வகையில் ராகு பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

இந்நிலையில் வரும் 2025 ஆம் ஆண்டு ராகு பகவான் கும்ப ராசிக்கு செல்கிறார். இது சனி பகவானின் சொந்தமான ராசி ஆகும். ராகு பகவானின் கும்பராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் 2025 ஆம் ஆண்டு கலவையான பலன்களை கொடுக்கப் போகின்றது. ஆனால் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்

கும்ப ராசி

ராகு பகவான் உங்கள் ராசிகள் முதல் வீட்டில் நுழையப் போகின்றார். இதனால் உங்களுக்கு அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். தொழில் ரீதியாக பல சிறப்பான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கக்கூடும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வருமானத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கக்கூடும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் 11-ஆவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வரும் 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். 

பல வேலைகளின் மூலம் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்று மரியாதை அதிகரிக்கும். பல நன்மைகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வணிகத்திலும் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். இது ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

தனுசு ராசி

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு யோகம் கிடைக்கப் போகின்றது. வரும் 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு எதிர்பாராத நல்ல மாற்றங்கள் ஏற்படக்கூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். சொந்த வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். 

நிதி நிலைமையில் உங்களுக்கு யோகம் கிடைக்கக்கூடும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். குடும்பத்தினரோடு அடிக்கடி சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மன அமைதி மற்றும் தைரியம் கிடைக்கக்கூடும். இந்த காலகட்டத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்றுத்தரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

அடுத்த செய்தி