ராகு கோடீஸ்வர திசை.. சனி ராசியில் புகுந்து விளையாடும் 3 ராசிகள்.. கோபுரம் கட்டுவது யார்?
Lord Rahu: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Rahu: நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார்.
ராகு கேது இணை பிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். இந்நிலையில் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதய ராசியில் பயணம் செய்வார். அவர் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
இந்நிலையில் ராகு பகவான் 2025 ஆம் ஆண்டு கும்ப ராசிக்கு செல்கின்றார் இது சனி பகவானின் சொந்தமான ராசியாகும். ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
கும்ப ராசி
உங்கள் ராசியில் முதல் வீட்டில் ராகு பகவான் பயணம் செய்யப்போகின்றார். அதனால் உங்களுக்கு அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல மாற்றங்கள் கிடைக்கக்கூடும். தொழில் ரீதியாக உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மன அழுத்தம் உங்களுக்கு குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
மேஷ ராசி
உங்கள் ராசியில் 11 வது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்யப் போகின்றார். அதனால் உங்களுக்கு கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். தொடர் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும்.
மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வணிகத்தில் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தினரோடு பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும்.
தனுசு ராசி
உங்கள் ராசிகள் மூன்றாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் எதிர்பாராத நேரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படக்கூடும். நீண்ட நாட்களாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். குடும்பத்தினர் ரோடு சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
வேலைக்காக வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். வேலையில்லாதவர்களுக்கு சிறப்பான வேலை கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.