Tamil Hindustan Times
https://whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81vhttps://whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு எப்போதுமே குரு தான்.. 5 மாசம் வச்சு செய்யப் போகும் ராசிகள்.. உங்களை யாரு காப்பாத்துவா?

குரு எப்போதுமே குரு தான்.. 5 மாசம் வச்சு செய்யப் போகும் ராசிகள்.. உங்களை யாரு காப்பாத்துவா?

Dec 07, 2024, 01:15 PM IST

google News
Guru Bhagwan: குருபகவானின் ரோகிணி நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Guru Bhagwan: குருபகவானின் ரோகிணி நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Guru Bhagwan: குருபகவானின் ரோகிணி நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Guru Bhagwan: நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வ செழிப்பும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சமீபத்திய புகைப்படம்

அந்த வகையில் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் கடந்த நவம்பர் 28ஆம் தேதி என்று குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். குருபகவானின் ரோகிணி நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சிம்ம ராசி

குருபகவான் உங்கள் ராசியில் 11 வது வீட்டில் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும். பல்வேறு விதமான நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். திருமண வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

கடக ராசி

சந்திர பகவானால் ஆட்சி செய்யக்கூடிய ராசியான உங்கள் மீது குரு பகவான் ஒன்பதாவது வீட்டில் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சாதகமான பலன்களை கிடைக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய திட்டங்கள் உங்களுக்கு மனநிறைவு கொடுத்து முன்னேற்றத்தைப் பெற்றுத் தரும். 

வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். தொழிலை இழிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வணிகத்தை உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. நண்பர்களால் உதவி கிடைக்கும்.

ரிஷப ராசி

குருபகவானின் ரோகினி நட்சத்திர பயணம் உங்களுக்கு யோகத்தை அள்ளித் தரப் போகின்றது. எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிதி ரீதியாக உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். 

மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கையில் பெரிய உயரங்களை தொடுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உயர் அலுவலர்களிடம் உங்களுக்கு நல்ல பெயர் வாங்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி