Suriya Sani Luck: சனியோடு பார்ட்னர்ஷிப் போட்ட சூரியன்.. அதிரடி ஆட்டம் ஆரம்பம்.. பண மழையில் நனையும் ராசிகள்
Mar 17, 2024, 12:03 PM IST
Suriya Sani Luck: சூரிய பகவான் சனி பகவானின் ராசிக்கான கும்ப ராசியில் இணைந்துள்ளார். இதன் காரணமாக எதிர் கிரகங்களாக இருக்கக்கூடிய சனி மற்றும் சூரியன் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இருப்பினும் ஒரு சில ராசிகள் இவர்களின் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளன.
நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப்படுத்தி பலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நவக்கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
சமீபத்திய புகைப்படம்
சனி பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
தற்போது சூரிய பகவான் சனி பகவானின் ராசிக்கான கும்ப ராசியில் இணைந்துள்ளார். இதன் காரணமாக எதிர் கிரகங்களாக இருக்கக்கூடிய சனி மற்றும் சூரியன் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இருப்பினும் ஒரு சில ராசிகள் இவர்களின் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மிதுன ராசி
சூரிய பகவான் மற்றும் சனி சேர்க்கை உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. இதனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண முதலீடுகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
ரிஷப ராசி
சனி மற்றும் சேர்க்கை உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நல்ல செய்திகள் உங்களுக்கு தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு பாராட்டுகளை கொடுப்பார்கள். உடன் வேலை செய்பவர்கள். உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
கும்ப ராசி
சனி மற்றும் சூரிய சேர்க்கை உங்கள் ராசியில் முதல் வீட்டில் நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். கூட்டு தொழில் முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.