தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vayiru Rajju: வயிறு ரஜ்ஜு என்றால் என்ன?-வயிறு ரஜ்ஜு நட்சத்திரங்களை திருமணம் செய்தால் குழந்தை பாக்கியம் இருக்குமா?

Vayiru Rajju: வயிறு ரஜ்ஜு என்றால் என்ன?-வயிறு ரஜ்ஜு நட்சத்திரங்களை திருமணம் செய்தால் குழந்தை பாக்கியம் இருக்குமா?

Manigandan K T HT Tamil

Mar 16, 2024, 12:28 PM IST

google News
Vayiru Rajju: வயிறு ரஜ்ஜு என்றால் என்ன?-வயிறு ரஜ்ஜு நட்சத்திரங்களை திருமணம் செய்தால் குழந்தை பாக்கியம் இருக்குமா? என்பது குறித்து இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம். அந்த நட்சத்திரங்கள் சேர்ந்தால் தான் அவர்களுக்கு திருமணப் பொருத்தம் இல்லை என கூறுவார்கள். (pixabay)
Vayiru Rajju: வயிறு ரஜ்ஜு என்றால் என்ன?-வயிறு ரஜ்ஜு நட்சத்திரங்களை திருமணம் செய்தால் குழந்தை பாக்கியம் இருக்குமா? என்பது குறித்து இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம். அந்த நட்சத்திரங்கள் சேர்ந்தால் தான் அவர்களுக்கு திருமணப் பொருத்தம் இல்லை என கூறுவார்கள்.

Vayiru Rajju: வயிறு ரஜ்ஜு என்றால் என்ன?-வயிறு ரஜ்ஜு நட்சத்திரங்களை திருமணம் செய்தால் குழந்தை பாக்கியம் இருக்குமா? என்பது குறித்து இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம். அந்த நட்சத்திரங்கள் சேர்ந்தால் தான் அவர்களுக்கு திருமணப் பொருத்தம் இல்லை என கூறுவார்கள்.

ரஜ்ஜுவில் வயிறு ரஜ்ஜு என ஒன்று உள்ளது. ரஜ்ஜு என்றாலே குறிப்பிட்ட நட்சத்திரக்காரர் மற்றொரு குறிப்பிட்ட நட்சத்திரக்காரருடன் சேரக் கூடாது என்பதற்காகவே உள்ளது.

சமீபத்திய புகைப்படம்

2025 முதல் சனி இந்த ராசிகளுக்கு அள்ளிக் கொடுக்கப் போகிறார்.. இவர்களுக்கு அனைத்து வகையான யோகங்களும் கிடைக்கும்!

Dec 25, 2024 06:45 AM

'வெற்றி நங்கூரமிட காத்திருக்கும் ராசிக்காரர்களா நீங்கள்' இன்று டிச. 25 மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

Dec 25, 2024 05:00 AM

குரு பொங்கல் வைத்து பொட்டு வைப்பார்.. சிக்கிக்கொண்ட 3 ராசிகள்.. வக்கிர நிலையில் ராஜ வாழ்க்கை

Dec 24, 2024 05:46 PM

மாடிகளில் கோடிகளை சேர்க்கும் 3 ராசிகள்.. மகிழ்ச்சியில் புண்ணாக்கும் கேது.. இனி நீங்க தான் கெத்து!

Dec 24, 2024 04:40 PM

சனி கட்டிய கோட்டை.. 2025 மகாராஜா வாழ்க்கை பெறுகின்ற 3 ராசிகள்.. இனி உங்களை அசைக்க முடியாது

Dec 24, 2024 04:36 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. நாளை டிச.25 எதிர்பார்த்தபடி உங்கள் கையில் பணம் சேருமா?

Dec 24, 2024 03:48 PM

அப்படி சேர்ந்தால் குழந்தை பிறக்காது என ஜோதிட சாஸ்திரத்தில் கூறுவார்கள். வயிற்றை சம்பந்தப்படுத்தியதுதான் வயிறு ரஜ்ஜு. இந்த ரஜ்ஜு எப்படி உருவாகிறது எப்படி ஆளுமை செய்யும் என பார்க்கலாம்.

27 நட்சத்திரங்களில் 3 சூரியனுடைய நட்சத்திரங்கள் 3 குருவினர் நட்சத்திரங்கள் வயிறு ரஜ்ஜுவை இணைக்கும்.

அந்த நட்சத்திரங்கள் சேர்ந்தால் தான் அவர்களுக்கு திருமணப் பொருத்தம் இல்லை என கூறுவார்கள். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இது மூன்று குருவின் நட்சத்திரங்கள். வயிறு பகுதியை ஆளுமை செய்யக் கூடியது.

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய சூரியனின் நட்சத்திரங்கள் ஆகும்.

இந்த சூரியனின் நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்றும், குருவின் நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்றும் திருமணம் செய்ய நினைக்கும் இருவருக்கும் இருந்து திருமணமும் செய்து கொண்டால் குழந்தை பிறப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது.

சிலருக்கு குழந்தை பிறக்காமலே போகிறது. இந்த நட்சத்திரங்கள் அதிக எனர்ஜியை கொடுக்க வல்லது.

புத்திர ஸ்தானம் என சொல்லக் கூடிய ஐந்தாம் இடம் வலுவாக இருந்தால், இந்த நட்சத்திரங்கள் கொண்டவர்கள் திருமணம் செய்தாலும் பெரிய பிரச்சனை வராது.

குரு பெயர்ச்சி பலன்கள்

இதனிடையே, குரு பெயர்ச்சி 2024இல் மே 1 ம் தேதி குழந்தை பாக்கியத்துக்காக நிறைய பேர் காத்திருக்கிறார்கள்.

திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு இன்றைய காலகட்டம் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையாக மாறிப் போனதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. குரு பலவீனமாக இருக்கும் ஜாதகங்களும் குழந்தை பாக்கியம் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. குரு நீச்சம் அடைந்திருக்கும். குரு, ராகு-கேதுவுடன் சேர்ந்திருக்கும். இதுபோன்ற ஜாதகங்களில் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும். சிலருக்கு குரு மறைவான ஸ்தானத்தில் இருப்பார். அதாவது, 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தாலும் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும்.

உங்களுக்கு ஜாதகத்தின்படி அதற்கு பரிகாரமும் இருக்கிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி சில கோள்கள் நகர்வதாலும் குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது.

குழந்தை பெற கடவுளின் அருளும் வேண்டும். எந்தெந்த ராசிகளுக்கு குழந்தை பாக்கியம் சாதகம் இருக்கிறது என பார்ப்போம்.

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தம்பதியரில் ஒருவர் மேஷ ராசிக்காரராக இருந்தாலும் அந்தப் பலனை நீங்கள் அடையலாம். மேஷ ராசிக்காரருக்கு சந்தோஷத்தை அளிக்கக் கூடிய புதிய உறவு, புதிய வரவு வர வாய்ப்புள்ளது.

கடக ராசி

கடக ராசிக்கு 11ம் இடத்தில் இருக்கிறது. அவருடைய பார்வை 5ம் இடத்தில் இருக்கும். 5-இல் குரு பார்வை இருப்பதால், தம்பதியரில் இருவரில் ஒருவர் இருந்தால் கூட குழந்தை பாக்கியம் பெறுவீர்கள்.

கன்னி ராசி

கன்னி ராசிக்கு 9ம் இடத்தில் குரு இருக்கிறார். அவருடைய பார்வை 5இலும் விழும் ராசியிலும் விழும். இது உங்களை மன ரீதியாக குழந்தைக்கு முயற்சி செய்ய வைக்கும்.

விருச்சிக ராசி

குரு சுப வீடுகளில் நகரும்போது குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த முறை விருச்சிகத்தில் குருவின் நேர் பார்வை படுவதால் அந்த ராசிக்காரர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டு.

மகரம்

தடைகளை உடைக்கும் நேரமாக இருக்கிறது. குழந்தை பாக்கியமும் என்ற தடையும் விலகும்.

இதனிடையே, நவக்கிரகங்களில் கர்ம வினைகளுக்கு ஏற்ப பிரதி பலன்களை திருப்பிக் கொடுக்கும் கடவுளாக சனிபகவான் விளங்கி வருகின்றார். சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக் கூடியவர். அதனால் இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

குறிப்பாக ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனிபகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். இந்த தற்போது தனது சொந்த ராசியான கும்பராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி