தமிழ் செய்திகள்  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For March 14, 2024

Today Rasipalan (14.03.2024): ‘தடைகள் மறையும்..தன்னம்பிக்கை பிறக்கும்’ - 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Mar 14, 2024 05:00 AM IST

Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் இன்று (மார்ச் 14) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மார்ச் 14 ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
மார்ச் 14 ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கலைத்துறையில் முயற்சிகள் ஈடேறும். வியாபாரத்தில் சில நுட்பங்களை கற்றுக்கொள்வீர்கள். பயணங்களின் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான சிந்தனை மேம்படும்.

ரிஷபம்

கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. போட்டித் தேர்வுகளில் புதிய அனுபவம் கிடைக்கும். நெருக்கமானவர்களின் மூலம் சில மாற்றங்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் புத்துணர்ச்சி உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

மிதுனம்

சிலருக்கு இன்று நினைத்த காரியங்கள் நிறைவேறும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கற்பனை சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான எண்ணங்கள் மேம்படும்.

கடகம்

வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். பயணங்களின் மூலம் அனுபவம் ஏற்படும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வெளியூர் சம்பந்தமான வேலை வாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.

சிம்மம்

வியாபார இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் மேம்படும். மாறுபட்ட அணுகுமுறையால் சில பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு ஏற்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தடைகள் மறையும் நாள்.

கன்னி

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரப் பணிகளில் மந்தமான சூழ்நிலை ஏற்படும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் புதிய தெளிவு ஏற்படும். புதிய நபர்களின் வருகையால் சுபவிரயங்கள் உண்டாகும்.

துலாம்

மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் சில ரகசியங்களை அறிந்து கொள்வீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உடல் தோற்றப் பொலிவுகளில் மாற்றம் உண்டாகும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும்.

விருச்சிகம்

புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்பு நிறைவேறும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். திடீர் பயணங்களின் மூலம் மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். இணையம் மற்றும் வர்த்தகம் தொடர்பான துறைகளில் முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு

உயர் கல்வி தொடர்பான பயணங்கள் கைகூடும். வியாபாரம் நிமிர்த்தமான முதலீடு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மனதை உறுத்திய சில பிரச்னைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும்.

மகரம்

அரசு வழியில் சில சாதகமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வியாபாரப் பணிகளில் நெளிவு, சுளிவுகளை புரிந்து கொள்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும்.

கும்பம்

தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மனதில் இருந்துவந்த சஞ்சலங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

மீனம்

குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் எதிர்காலம் தொடர்பான எண்ணம் உண்டாகும். இழுபறியான சில தனவரவுகள் கிடைக்கும். அடகு வைத்த பொருட்கள் பற்றிய சிந்தனை மேம்படும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்