Karthigai Deepam: மொத்தமாக வீட்டை விட்டு வெளியேறும் தர்மலிங்கம்.. கார்த்திகை தீபம்!-karthigai deepam serial promo on march 15 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: மொத்தமாக வீட்டை விட்டு வெளியேறும் தர்மலிங்கம்.. கார்த்திகை தீபம்!

Karthigai Deepam: மொத்தமாக வீட்டை விட்டு வெளியேறும் தர்மலிங்கம்.. கார்த்திகை தீபம்!

Aarthi Balaji HT Tamil
Mar 15, 2024 01:30 PM IST

தர்மலிங்கத்தை வீட்டுக்கு கூட்டி வர கார்த்திக் அவரை வீட்டில் வந்து சந்தித்து நலம் விசாரிக்கிறான். இந்த நேரம் பார்த்து அங்கு வரும் சேட்டு தர்மலிங்கம் இந்த வீட்டை எனக்கு வித்துட்டாரு என்ற உண்மையை சொல்லி அதிர்ச்சி கொடுத்தார்.

கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 : 00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்றால் அது, கார்த்திகை தீபம். இந்த சீரியலுக்கு என்று சிறியவர்கள் வரை பெரியவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதனிடையே கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய ( மார்ச் 14 ) எபிசோடில் கார்த்திக் ராணி என்ற துப்புரவு பணியாளர் பெண்ணை பாட அழைத்திருந்தார். இந்த நிலையில் இன்று ( மார்ச் 15 ) என்ன நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது ராணி பாட வராத நிலையில் கார்த்திக் நான் எவ்வளவோ கூப்பிட்டு பார்த்தும் அவங்க வரல சரி அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம் என்று ஆபீஸில் பேசிக் கொண்டிருக்கும் போது ராணியும் அவருடைய கணவரும் வருகின்றனர்.

ராணி நீங்க சொன்ன மாதிரி நான் பாட ரெடி சார் என்று சொல்ல அவளது கணவர் அவளுக்குள் இருக்க திறமைக்கு நானே முட்டுக்கட்டையாக இருந்திருக்கிறன் என்று வருந்துகிறார். பிறகு ராணி பாடி முடிக்கிறார்.

அடுத்ததாக தர்மலிங்கத்தை வீட்டுக்கு கூட்டி வர கார்த்திக் அவரை வீட்டில் வந்து சந்தித்து நலம் விசாரிக்கிறான். இந்த நேரம் பார்த்து அங்கு வரும் சேட்டு தர்மலிங்கம் இந்த வீட்டை எனக்கு வித்துட்டாரு, அந்தப் பணத்தை வைத்து தான் தீபாவுக்கு நகை போட்டாரு என்ற உண்மையை உடைத்து பேசி விடுகிறார்.

அதோடு நிறுத்தி விடாமல் தர்மலிங்கம் ஏற்கனவே இந்த வீட்டை காலி பண்ணி இருக்க வேண்டும் இப்போ அவருக்கு உடம்பு சரியில்லை அதனால் கொஞ்ச நாள் இருந்துட்டு கூட காலி பண்ணட்டும்.

ஆனா சீக்கிரம் காலி பண்ணிடுங்க என்று சொல்ல கார்த்திக் இந்த வீட்டை எவ்வளவுக்கு வித்தாரு அந்த பணத்தை நான் கொடுத்து விடுகிறேன் வீட்டை திருப்பிக் கொடுத்துடுங்க என்று கேட்கிறான்.

ஆனால் சேட்டு ஆரம்பத்தில் இந்த வீட்டை வாங்குற எண்ணம் எனக்கு இல்ல, ஆனா அதன் பிறகு யோசித்துப் பார்க்கும் போது இந்த வீட்டில் இருந்து என்னுடைய பசங்களுக்கு ஸ்கூல் எல்லாமே பக்கத்துல இருக்கு அதனால வீட்ட திருப்பி கொடுக்கிற எண்ணம் இல்லை என சொல்கிறார். இதனால் தர்மலிங்கம் குடும்பத்தை வீட்டை காலி செய்து கொண்டு தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Google News : https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.