தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  லக்ஷ்மி யோகம் உங்கள் வீடு தேடி வர வைக்கும் ஐப்பசி மாத பூஜை! எப்படி செய்வது?

லக்ஷ்மி யோகம் உங்கள் வீடு தேடி வர வைக்கும் ஐப்பசி மாத பூஜை! எப்படி செய்வது?

Suguna Devi P HT Tamil

Oct 25, 2024, 04:08 PM IST

google News
ஐப்பசி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அன்னபூரணி அம்மனுக்கு பூஜை செய்து வந்தால் உங்கள் வீடுகளில் லக்ஷ்மி யோகம் கூடி பொருளாதார நிலை உயரும்.
ஐப்பசி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அன்னபூரணி அம்மனுக்கு பூஜை செய்து வந்தால் உங்கள் வீடுகளில் லக்ஷ்மி யோகம் கூடி பொருளாதார நிலை உயரும்.

ஐப்பசி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அன்னபூரணி அம்மனுக்கு பூஜை செய்து வந்தால் உங்கள் வீடுகளில் லக்ஷ்மி யோகம் கூடி பொருளாதார நிலை உயரும்.

ஐப்பசி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அன்னபூரணி அம்மனுக்கு பூஜை செய்து வந்தால் உங்கள் வீடுகளில் லக்ஷ்மி யோகம் கூடி பொருளாதார நிலை உயரும். சிறந்த மாதங்களில் ஒன்றாக இந்த ஐப்பசி மாதம் இருந்து வருகிறது. மேலும் ஜோதிட ரீதியாகவும் இந்த மாதம் மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாகும். அதன் படி ஐப்பசி மாதம் என்றால் துலாம் மாதம் என ஒரு பொருள் உண்டு. அதாவது துலாம் ராசியில் உள்ள தராசை போல கடவுள் அளந்து நமக்கு பலன் அளிப்பார் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த மாதம் உலகில் அனைவருக்கும் படி அளக்கும் தெய்வமான அன்னப்பூரணி அம்மனுக்கு சிறந்த மாதமாகும். 

சமீபத்திய புகைப்படம்

சனி சட்டென்று அடித்தார்.. பட்டென்று புகுந்த ராகு.. இனி இந்த ராசிகள்.. கவலை வேண்டாம்.. உச்சம் தொடுவது உறுதி!

Nov 16, 2024 10:21 AM

மிதுனத்தில் புகுந்து துலாமில் வெளிவரும் கேது.. 2 ராசிகள்.. இனி அசைக்க முடியாத பணமழை.. 2025 முதல் யோகம்

Nov 16, 2024 09:56 AM

குரு வைகுண்ட வாசல் திறப்பு.. கோடிகளில் பணம் கொட்டும் 3 ராசிகள்.. வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும்!

Nov 16, 2024 07:00 AM

'அருமை தெரியலையா.. அவதிப்படுங்க.. அறம் ஆற்றல் தரும்.. உழைப்பை விடாதீங்க' இன்று நவ.16 மேஷம் முதல் மீனம் வரையான ராசிபலன்!

Nov 16, 2024 04:30 AM

நாளை முதல்ஆட்டம் போட காத்திருக்கும் சூரியன்.. ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், மகரம் ராசியினரே ஜாக்பாட்தான் போங்க!

Nov 15, 2024 07:58 PM

புத்தாண்டில் மாறும் கிரகங்கள்! 2025ஆம் ஆண்டு கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்! செம அடி வாங்க போகும் 3 ராசிகள்!

Nov 15, 2024 05:35 PM

ஐப்பசி வெள்ளியில் நாம் அன்னபூரணியை நினைத்து வீட்டில் செய்யக்கூடிய வழிபாடு செய்தால் வீட்டில் அளவில்லா ஐஸ்வர்யத்தை தரும் எனக் கூறப்படுகிறது. பொருளாதார தரத்தை மேம்படுத்த உதவும் இந்த அன்னபூரணி பூஜையை செய்வது எப்படி என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். 

வெள்ளிக் கிழமை பூஜை 

ஐப்பசி மாதத்தில் வரும் வெள்ளிக் கிழமைகளில் மட்டுமே இந்த பூஜையை செய்ய வேண்டும். முதலில் 5 சிறிய அளவிலான பாத்திரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். கட்டாயமாக அவை எச்சில் படாத பாத்திரங்களாக இருக்க வேண்டும். அந்த பாத்திரத்தை முதலில் சுத்தம் செய்துவிட்டு ஈரம் இல்லாதவாறு துடைத்து விட வேண்டும். அந்த சின்ன கிண்ணத்தை ஏதேனும் ஐந்து தானியங்களை கொண்டு நிரப்பிக் கொள்ள வேண்டும்.  உதாரணத்திற்கு பச்சரிசி, துவரம் பருப்பு, உளுந்து, மொச்சை, கல் உப்பு, பச்சை பயிறு ஆகிய தானியங்களில் இருந்து எதாவது ஐந்து தானியங்களை பயன் படுத்திக்கொள்ளலாம். 

உங்களது வீட்டில் அன்னபூரணி அம்மனின் புகைப்படம் அல்லது சிலை இருந்தால் அதன் முன்பு இந்த பாத்திரங்களை வைக்க வேண்டும். ஒரு வேலை உங்களது வீட்டில் அன்னப்பூரணி  புகைப்படம் அல்லது சிலை இல்லாவிட்டால் லக்ஷ்மி புகைப்படம் அல்லது சிலையை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஐந்து கிண்ணத்திற்கு நடுவில் மற்றொருரு கிண்ணத்தில் ரூபாய் நோட்டுகளையும் வைக்க வேண்டு. இதில் ஐந்து தானியங்களுக்கு மேலே அதிக தானியங்களை வைத்தும் வழிபடலாம்.

விளக்கு ஏற்றி வைத்துவிடுங்கள். எங்களுடைய வீட்டில் தன தானியத்திற்கு ஒருபோதும் பஞ்சம் வரக்கூடாது, தாயே அன்னபூரணி எங்கள் குடும்பத்திற்கான அருள் ஆசியை வழங்க வேண்டும் என்று மனம் உருகி பிரார்த்தனை செய்து கொண்டு, லட்சுமி அஷ்டோத்திரம் அல்லது மகாலட்சுமிக்கு பிடித்த பாடல்களை வீட்டில் ஒலிக்க விடுங்கள். மனம் உருகி பிரார்த்தனை செய்துவிட்டு பின்பு இறுதியாக தீப தூப ஆராதனை காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். 

சமையல் அறை பொருட்கள்

பூஜையை முடித்துவிட்டு சிறிது நேரம் கழித்து இந்த கிண்ணத்தில் வைத்திருக்கக் கூடிய மளிகை பொருட்களை எல்லாம் எடுத்து உங்கள் சமையலறையில் இருக்கும் அந்தந்த பொருட்களோடு கலந்து விட வேண்டும். இப்படி ஐப்பசி மாதம் அன்னலட்சுமியை நினைத்து, மகாலட்சுமியை நினைத்து பூஜை செய்து பூஜை அறையில் இருந்து எடுத்த பொருட்கள் நாம் பயன்படுத்தும் பொருட்களோடு கலக்கும் போது, அந்த குறிப்பிட்ட பொருட்கள் எல்லாம் அபரிவிதமாக பெருகும் என்பது நம்பிக்கை.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை