Today Rasipalan (17.03.2024): இன்று இந்த ராசிக்காரர்கள் பொறுமையாக இருப்பது நல்லது..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Mar 17, 2024, 05:15 AM IST
Today Horoscope: வேலை, தொழில், வருமானம், வியாபாரம் என அனைத்தும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் இன்று (மார்ச் 17) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today Horoscope, March 17, 2024: ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சமீபத்திய புகைப்படம்
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். தனவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். தள்ளிப்போன காரியங்கள் எளிதில் முடியும். சவாலான பணிகளையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும்.
ரிஷபம்
கணவன்-மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவீர்கள். எதிர்பாராத சில தனவரவுகளால் சேமிப்பு மேம்படும். காரிய அணுகூலம் ஏற்படும். வீடு, மனை விற்பதில் லாபம் உண்டாகும். கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, இன்று சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவது நல்லது. வேலையாட்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். முன்கோபமின்றி செயல்படவும். கடன் தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். சில பணிகளை திட்டமிட்டு மேற்கொள்வதால் நன்மை உண்டாகும். மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே, இன்று நினைத்ததை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் அலைச்சல் ஏற்படும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளவும். திடீர் பயணங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பொதுக் காரியங்களில் ஆர்வம் ஏற்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். அணுகு முறையில் சில மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் பிரச்னைகள் குறையும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். வியாபாரத்தில் புதுவிதமான சூழல் ஏற்படும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதம் விலகும்.
துலாம்
துலாம் ராசியினருக்கு உயர் அதிகாரிகளிடத்தில் நெருக்கம் மேம்படும். உழைப்பிற்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் ஒப்பந்தம் சாதகமாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு எதிர்பாராத சில வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும். மற்றவர்களின் பேச்சுக்களை பொறுமையாக கையாளவும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். பயணங்களில் தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்லவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பயணங்களின் மூலம் மாற்றமான அனுபவம் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். சகோதரர்களின் வழியில் உதவி கிடைக்கும். சமூகம் தொடர்பான விஷயங்களில் புதிய கண்ணோட்டம் ஏற்படும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு வழக்குகளில் சில திருப்பங்கள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும். கலைப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். உயர் கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். ஓய்வு நிறைந்த நாள்.
மீனம்
உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பயணங்களால் புதிய அத்தியாயம் பிறக்கும். புதிய வேலைக்கான வாய்ப்பு சாதகமாகும். வியாபாரத்தில் சில சலுகைகளின் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். சமூகப் பணிகளில் உயர்வு உண்டாகும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்