Today Rasipalan (16.03.2024): இந்த நாள் உங்களுக்கு எப்படி?....மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Mar 16, 2024, 05:15 AM IST
Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் இன்று (மார்ச் 16) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு ராசிகளுக்கும் மார்ச் 16 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சமீபத்திய புகைப்படம்
மேஷம்
பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வீட்டுமனை சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். அலுவலகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். வியாபார இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.
ரிஷபம்
மறைமுக எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் அலைச்சல் உண்டாகும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் தோன்றி மறையும்.
மிதுனம்
சிலருக்கு திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த சோர்வுகள் விலகும். மனதில் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்துவந்த சில தனவரவுகள் கிடைக்கும்.
கடகம்
சேமிப்பு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் சில மாற்றமான தருணங்கள் அமையும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும்.
சிம்மம்
வியாபாரத்தில் புதிய வாய்ப்பு ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். தொலைதூரக் கல்வியில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
கன்னி
சுபகாரியங்களில் அலைச்சல் ஏற்படும். உயர் கல்வியில் சிறு சிறு குழப்பம் தோன்றி மறையும். பொருளாதாரத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் மேலோங்கும். பயணம் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். பயிர் தொழிலில் சிந்தித்துச் செயல்படவும்.
துலாம்
வியாபார விஷயங்களில் பொறுமை வேண்டும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் தோன்றி மறையும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். மனதில் புதுவிதமான இலக்கு பிறக்கும். தேவையற்ற அலைச்சலால் உடலில் சோர்வுகள் உண்டாகும்.
விருச்சிகம்
வாழ்க்கைத் துணைவருடன் இருந்துவந்த பிரச்சனை விலகும். எதிர்பாராத சில தனவரவுகள் உண்டாகும். சமூகப் பணிகளில் செல்வாக்கு உயரும். பிரபலமானவர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும்.
தனுசு
உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்னைகள் குறையும். குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய தொழில் சார்ந்த முயற்சிகள் கைகூடிவரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நிதானம் வேண்டும்.
மகரம்
கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். இலக்கியம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த பொறுப்பு குறையும்.
கும்பம்
பணிபுரியும் இடத்தில் ஆதரவான சூழல் ஏற்படும். விலகி நின்றவர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பு அமையும். உயர் ரக வாகனங்கள் மீது ஈர்ப்பு ஏற்படும்.
உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் மேம்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எழுத்து சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்பு கிடைக்கும். திறமைமிக்க செயல்பாடுகளால் மதிப்பு உயரும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்