மகாலட்சுமியின் ஆசீர்வாதம் பெற்ற ராசிகள்.. பண மழையில் நனைவது உறுதி.. அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு தான்
Mar 15, 2024, 05:30 PM IST
Money Luck: சுக்கிர பகவான் கும்ப ராசியில் நுழைந்தார் மார்ச் 15ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் கும்ப ராசிக்குள் நுழைகிறார். செவ்வாய் மற்றும் சுக்கிரன் இருவரும் சனி பகவான் பயணம் செய்து வரும் அவருடைய சொந்த ராசியான கும்பராசியில் நுழைகின்ற காரணத்தினால் மகாலட்சுமி யோகம் உருவாக்கியுள்ளது.
நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்தே ஒருவரின் ஜாதகம் அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த காலகட்டத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் இருக்கும்.
சமீபத்திய புகைப்படம்
நவகிரகங்கள் தங்களது இடத்தை அவ்வப்போது மாற்றும் பொழுது ஒரு சில கிரகங்கள் ஒன்றாக சேருவார்கள். அந்த நேரத்தில் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். அப்படி உருவாகின்ற யோகங்களானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த மார்ச் மாதத்தில் தொடக்கத்திலேயே சுக்கிர பகவான் கும்ப ராசியில் நுழைந்தார் மார்ச் 15ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் கும்ப ராசிக்குள் நுழைகிறார். செவ்வாய் மற்றும் சுக்கிரன் இருவரும் சனி பகவான் பயணம் செய்து வரும் அவருடைய சொந்த ராசியான கும்பராசியில் நுழைகின்ற காரணத்தினால் மகாலட்சுமி யோகம் உருவாக்கியுள்ளது. இந்த மகாலட்சுமி யோகத்தை முழுமையாக அனுபவிக்க போகும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு மகாலட்சுமி யோகம் உருவாகியுள்ளது. உங்களுடைய ஆளுமை திறன் அதிகரிக்கும். தைரியம் அதிகரிக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் நல்ல முன்னேற்றம் அடையும் நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
விருச்சிக ராசி
உங்களுக்கு மகாலட்சுமி யோகம் நான்காவது வீட்டில் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் தேடி வரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். புதிய திட்டங்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
துலாம் ராசி
மகாலட்சுமி ராஜயோகம் ஆனது உங்களுக்கு ஐந்தாவது வீட்டில் நிகழ்கின்றது. நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் இரு மடங்கு லாபம் கிடைக்கக்கூடும். நிதி ரீதியாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். சிக்கிக் கிடந்த பணங்கள் உங்களைத் தேடி வரும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக உங்களுக்கு கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. ராஜயோக வாழ்க்கையை நீங்கள் அனுபவிக்க போகின்றீர்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9