தமிழ் செய்திகள்  /  Astrology  /  Highlights Of Ramanathapuram Sri Dharma Munieswarar Temple

அபார சக்தி கொண்ட ஸ்ரீ தர்ம முனீஸ்வரர்!

Aug 17, 2022, 03:19 PM IST

100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோயில் குறித்து இங்கே காண்போம்.
100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோயில் குறித்து இங்கே காண்போம்.

100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோயில் குறித்து இங்கே காண்போம்.

ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை அருகே உள்ளது ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோயில். இக்கோயில் 100 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். பில்லி, சூனியம், செய்வினை உள்ளிட்ட தீய சக்திகளை அண்ட விடாமல் ஆன்மீக பக்தர்களைக் காத்து வரும் அபார சக்தி உடைய முனி அய்யா என்றழைக்கக்கூடிய தர்ம முனீஸ்வரர் ஆலயம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

சமீபத்திய புகைப்படம்

Lucky Zodiac : பணமும் பதவி உயர்வும் கிடைக்கும்.. சனி பகவானின் பிற்போக்கு பெயர்ச்சி.. இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட மழை தான்!

Apr 30, 2024 07:00 AM

Akshaya Tritiya 2024 : அட்சய திருதியை நாளில் எந்த நேரத்தில் தங்கம் வாங்கினால் ஜாக்பாட் காத்திருக்கு பாருங்க!

Apr 30, 2024 06:20 AM

Uthirattathi Nakshatram: ‘கேட்டதை கொடுக்கும் காமதேனுவின் அருள் பெற்றவர்கள்!’ உத்திரட்டாதி நட்சத்திரத்தின் பொதுப்பலன்கள்!

Apr 29, 2024 05:58 PM

Today Rasi Palan : ‘நினைத்தது நடக்கும்.. நிதானம் தேவை’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Apr 29, 2024 04:30 AM

Elarai Sani 2024: ‘ஏழரை சனி முடிஞ்சாலும் ஏன் இப்படி?’ … தள்ளாடும் தனுசு! - குரு காப்பாற்றுவாரா?

Apr 28, 2024 08:12 PM

Sadhayam Nakshatram: ‘எதிரிகளை ஓட விடுவார்கள்!’ ராஜராஜன் பிறந்த சதயம் நட்சத்திரத்தின் பலன்கள்!

Apr 28, 2024 05:29 PM

இக்கோயிலுக்குப் பொதுமக்கள் வெள்ளி, செவ்வாய் ஆகிய கிழமைகளில் அதிக அளவு வருகை புரிந்து ஆலய வழிபாடு நடத்தி வருகின்றனர். அரசமரம் தலவிருட்சமாக இருந்து வருகிறது. ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் அரிவாளுடன் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.

இந்த கோயிலில் அரச மரத்தடி விநாயகர், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ பொன்னாத்தாள், சோனையா கருப்பர், சேதுமாக்காளி, ஸ்ரீ கிருஷ்ணர், ஒன்பது நவகிரகங்கள் தனித் தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். மஞ்சள், இளநீர், பால், பன்னீர், சந்தனம், குங்குமம், விபூதி, திரவிய பொடி உள்ளிட்ட 21 வகையான அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது.

திருமணத்தடை நீங்குதல், குழந்தை வரம் வேண்டுதல், செய்வினை கோளாறுகளை நிவர்த்தி செய்ய, தீய சக்திவரிடமிருந்து பாதுகாக்க, கல்வி செல்வம், தொழில் முன்னேற்றம் அடைதல் ஆகியவற்றுக்கு வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

இங்குக் கோரிக்கைகள் நிறைவேறினால் இரட்டைக் கிடாய் வெட்டி நேர்த்திக்கடனைப் பக்தர்கள் செலுத்துகின்றனர். சித்திரை, பங்குனி மாதங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்த பல்வேறு மாவட்டத்திலிருந்து பல்வேறு பக்தர்கள் நேர்த்திக் கடனாக ஆலய தரிசனம் செய்து வருகின்றனர்.