திருப்பணிகளை தர மறுத்த மந்திரி.. கோபத்தால் பார்வை இழந்த மன்னர்.. ஆசி வழங்கிய சரணகரட்சகர்
Oct 23, 2024, 06:00 AM IST
Saranagaratsagar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் நாகப்பட்டினம் மாவட்டம் தில்லையாடி அருள்மிகு சரணகரட்சகர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் சரணாகரட்சகர் எனவும் தாயார் பெரியநாயகி என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
Saranagaratsagar: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். சிவபெருமானுக்கு உலகம் முழுவதும் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. திரும்பும் திசை எல்லாம் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தங்கள் வாழ்க்கையை சிவபெருமானுக்காக அர்ப்பணித்துவிட்டு எத்தனையோ சிவ பக்தர்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர்.
சமீபத்திய புகைப்படம்
மண்ணுக்காக மன்னர்கள் ஒருபுறம் போரிட்டு வந்தாலும் சிவபெருமானின் மீது மிகப்பெரிய பக்தியை கொண்டு அந்த காலத்தில் மன்னர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். மனித உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.
அந்த காலத்தில் மன்னர்கள் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். அவர்களை மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை கம்பீரமாக வரலாற்றுச் சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகின்றன.
சில கோயில்கள் எந்த காலத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படிப்பட்ட பிரம்மாண்ட கோயில்களின் ஆதி மூலவராக சிவபெருமான் திகழ்ந்து வருகிறார்.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் நாகப்பட்டினம் மாவட்டம் தில்லையாடி அருள்மிகு சரணகரட்சகர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் சரணாகரட்சகர் எனவும் தாயார் பெரியநாயகி என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
தல சிறப்பு
இந்த திருக்கோயிலில் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி சன்னதிகளுக்கு நடுவில் சனி பகவானின் சன்னதி தனியாக அமைந்துள்ளது அது மிகப்பெரிய சிறப்பாக கருதப்படுகிறது. இந்த திருக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. இந்த திருக்கோயிலில் வந்து வழிபட்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், மாங்கல்ய பலம், குடும்ப சிக்கல்கள் நிவர்த்தி உள்ளிட்ட அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.
விஷ்ணு பகவான் இரண்யா சூரனை வதம் செய்தார். இதனால் விஷ்ணு பகவானுக்கு வீரஹக்தி தோஷம் பற்றிக்கொண்டது. அதன் பின்னர் இங்கு வீற்றிருக்கக் கூடிய சிவபெருமானை வழிபட வந்தார். தனது சக்ராயுதத்தால் இங்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார். விஷ்ணு பகவான் இங்கு குதிரை வடிவில் அர்ச்சித்து வழிபட்டார். அதற்குப் பிறகு அவருக்கு தோஷம் நீங்கியதாக கூறப்படுகிறது.
தல வரலாறு
இந்த பகுதிகள் அனைத்தும் விக்ரமசோழனின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. அப்போது அவரது மந்திரிகளின் ஒருவரான இளங்காரர் என்பவர் திருக்கடவூர் கோயில் திருப்பணிகளை மேற்கொண்டு வந்தார். அதுமட்டுமல்லாமல் தில்லையாடி திருக்கோயிலையும் புதுப்பிக்க தன்னால் இயன்ற பொருள் உதவியை செய்து வந்தார்.
மந்திரியின் செயல் குறித்து சிறிது காலம் கழித்து மன்னனுக்கு தெரிய வந்தது. உடனே மந்திரியை அழைத்தார். தில்லையாடி கோயிலின் திருப்பணிகான புண்ணிய பலன்களை எனக்கு தரும்படி மன்னர் கேட்டுக்கொண்டார். ஆனால் மந்திரி அதனை கொடுக்க மறுத்து விட்டார்.
இதனால் கோபமடைந்த சோழ மன்னர் தனது வாளால் மந்திரியின் கையை வெட்ட முயற்சி செய்தார். அப்போது திடீரென பேரொளி ஒன்று மந்திரிக்கு காட்சி கொடுத்தது. சிவபெருமானை பேரொளியாக வந்தார். அந்த திவ்ய தரிசனத்தை மற்ற யாராலும் காண முடியவில்லை. அந்த பேரொளியின் தாக்கத்தால் மன்னனுக்கு பார்வை இல்லாமல் போனது.
உடனே மன்னன் தனது தவறை உணர்ந்து கதறி அழுதார். அந்த இடத்திலிருந்து உடனே ஓடோடி வந்து சிவபெருமானை வழிபட்டு தனது பார்வையை தரும்படி வேண்டிக் கொண்டார். அதன் பின்னர் சிவபெருமான் அவருக்கு பார்க்கும் திறனை கொடுத்தார். அதன் காரணமாகவே இந்த கோயிலில் இருக்கக்கூடிய சிவபெருமான் சரணாகரட்சகர் என அழைக்கப்படுகிறார். தன்னை சரணம் அடைந்து வழிபடுபவர்களுக்கு அருள் புரியவும் இரட்சகனாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார்.