தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  தவம் செய்த வசிஷ்ட முனிவர்.. ஜோதியாக அமர்ந்த சிவபெருமான்.. தோண்டி எடுத்த மன்னன்.. காட்சி கொடுத்த காயநிர்மலேஸ்வரர்..

தவம் செய்த வசிஷ்ட முனிவர்.. ஜோதியாக அமர்ந்த சிவபெருமான்.. தோண்டி எடுத்த மன்னன்.. காட்சி கொடுத்த காயநிர்மலேஸ்வரர்..

Nov 09, 2024, 06:00 AM IST

google News
Kaayanirmaleswarar: சிறப்பு மிகுந்த கோயில்கள் எத்தனையோ நமது தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அந்த வரிசையில் இருக்கக்கூடிய கோயில்தான் சேலம் மாவட்டம் ஆறகழூர் அருள்மிகு காயநிர்மலேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடிய சிவபெருமான் காயநிர்மலேஸ்வரர் என அழைக்கப்பட்டு வருகின்றார்.
Kaayanirmaleswarar: சிறப்பு மிகுந்த கோயில்கள் எத்தனையோ நமது தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அந்த வரிசையில் இருக்கக்கூடிய கோயில்தான் சேலம் மாவட்டம் ஆறகழூர் அருள்மிகு காயநிர்மலேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடிய சிவபெருமான் காயநிர்மலேஸ்வரர் என அழைக்கப்பட்டு வருகின்றார்.

Kaayanirmaleswarar: சிறப்பு மிகுந்த கோயில்கள் எத்தனையோ நமது தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அந்த வரிசையில் இருக்கக்கூடிய கோயில்தான் சேலம் மாவட்டம் ஆறகழூர் அருள்மிகு காயநிர்மலேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடிய சிவபெருமான் காயநிர்மலேஸ்வரர் என அழைக்கப்பட்டு வருகின்றார்.

Kaayanirmaleswarar: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். எங்கு திரும்பினாலும் கோயில்கள் மூலம் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார். குறிப்பாக இந்தியாவில் திரும்பவும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சமீபத்திய புகைப்படம்

மகரம் ராசிக்குள் நுழையும் சுக்கிரன்! இனி எல்லாமே மாறுது! காதல்! காமம்! பணத்தில் திளைக்க போகும் 5 ராசிகள்!

Nov 22, 2024 04:59 PM

சனி நேரான பாதை.. 30 ஆண்டுகள் கனவு.. இந்த ராசிகள் சூப்பரோ சூப்பர்.. தொட்டுப் பாருங்க தெரியும்!

Nov 22, 2024 04:55 PM

கேது பெயர்ச்சி.. 2025 முதல் இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. ஜாக்பாட் ராசிகள் நீங்கதான்

Nov 22, 2024 11:41 AM

குரு கொடூர யோகத்தை கொட்டுகிறார்.. சுக்கிரன் தாங்கி பிடித்து தாலாட்டும் ராசிகள்.. இனி பணத்தால் மெத்தை உருவாகும்

Nov 22, 2024 10:07 AM

உடுக்கை அடிக்க போகும் புதன்.. ஐயோ அம்மா என்று கதறப்போகும் ராசிகள்.. துரத்தி துரத்தி அடிப்பார்

Nov 22, 2024 10:01 AM

குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை.. லட்சுமி தேவி இந்த மூன்று ராசிக்கு கருணை காட்டுவார்.. 2025 ஜாக்பாட் அடிக்க போகுது!

Nov 22, 2024 09:30 AM

சிவபெருமானுக்கு தற்போது பக்தர்கள் கூட்டம் கிடையாது. ஆதிகாலம் தொடங்கி இன்று வரை மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்திருக்கிறார். கடவுளுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். மனித உயிரினம் இந்த உலகத்தில் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.

மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் அனைத்து மன்னர்களும் சிவபெருமானையும் குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். முதல் வழிபாடு சிவபெருமானுக்கு செய்து விட்ட பிறகு அடுத்த வேலையை செய்யக்கூடிய மன்னர்கள் எத்தனையோ பேர் இருந்துள்ளனர். 

சோழ சாம்ராஜ்யத்தின் மிகப்பெரிய ராஜாவாக திகழ்ந்து வந்த ராஜராஜ சோழன் மிகப்பெரிய சிவபக்தனாக வாழ்ந்து வந்துள்ளார். அதற்கு எடுத்துக்காட்டாக உலகமே பிரம்மிப்படையும் அளவிற்கு மிகப்பெரிய வரலாற்று சரித்திர குறியீடான தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை கட்டி வைத்து சென்றுள்ளார்.

இன்று வரை அந்த கோயிலின் கட்டமைப்பை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு அறிவியல் தொழில்நுட்பத்திற்கு சவாலாக திகழ்ந்து வருகின்றது. சிவபெருமான் மீது பக்தி மட்டுமல்லாமல் தங்கள் கலைநயத்தையும் அந்த கோயிலில் செதுக்கி வைத்துச் சென்றுள்ளனர்.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்கள் எத்தனையோ நமது தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அந்த வரிசையில் இருக்கக்கூடிய கோயில்தான் சேலம் மாவட்டம் ஆறகழூர் அருள்மிகு காயநிர்மலேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடிய சிவபெருமான் காயநிர்மலேஸ்வரர் எனவும் தாயார் பெரியநாயகி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றன.

தல சிறப்பு

இறைவன் இந்த திருக்கோயிலில் சுயம்பு மூர்த்தியாக காட்சி கொடுத்து வருகிறார். இது அக்னி தலமாக கருதப்படுகிறது. கற்பூர ஆரத்தி காட்டும் பொழுது இந்த லிங்கம் ஜோதி வடிவில் காட்சி கொடுக்கிறது அதுவே இந்த கோயிலின் மிகப்பெரிய சிறப்பாகும்.

இந்த கோயிலில் சுவாமிக்கு வலது புறம் பின்பக்கத்தில் தனி சன்னதி கொண்டு தாயார் காட்சி கொடுத்து வருகிறார். குறிப்பாக இந்த திருக்கோயிலில் பிரகாரத்தில் ஐயப்பனுக்கு என தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. ஐயப்பன் சன்னதிக்கு முன்னால் இருபுறமும் விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. தனது தம்பியான ஐயப்பனை காப்பதற்காகவே இங்கு இரண்டு விநாயகர் அமர்ந்திருக்கிறார் என பக்தர்கள் கூறுகின்றனர்.

சிறப்பாக இங்கு இருக்கக்கூடிய தலையாட்டி பிள்ளையாரிடம் நமது புதிய செயல்களை கூறி வழிபட்டால் அந்த செயல் விரைவில் முடிவடையும் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

தல வரலாறு

வசிஷ்ட முனிவர் சிவ யாத்திரை செய்வதை பிரதானமாக கொண்டிருந்தார். செல்லும் இடமெல்லாம் நதிக்கரையில் அமர்ந்து தவம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். அப்போது ஒரு முறை ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் லிங்கம் ஒன்றை அமைத்து பிரதிஷ்டை செய்து ஆத்மார்த்தமாக வணங்கி சிவபெருமானின் அருளை முழுமையாக பெற்றார்.

அப்படி ஒரு முறை லிங்கம் செய்து வசிஷ்ட முனிவர் தவம் செய்து கொண்டிருந்த போது திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி கொடுக்கும் சிவபெருமானின் தரிசனத்தை இவர் இருக்கும் இடத்திலேயே காண வேண்டும் என வழிபட்டு வேண்டினார். உடனே தவத்தில் மயங்கிய சிவபெருமான் வசிஷ்ட முனிவர் பிரதிஷ்டை செய்த லிங்கத்தில் ஜோதி வடிவாக வந்து அமர்ந்தார்.

அதற்குப் பிறகு காலப்போக்கில் அந்த லிங்கம் மண்ணில் புதைந்து விட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இடத்தை ஆண்டு வந்த குறுநில மன்னன் கெட்டி முதலில் என்பவருக்கு சிவபெருமான் கனவில் தோன்றி தான் நிலத்தில் மறைந்து இருப்பதாக கூறிவிட்டு சென்றார். மேலும் தனக்கு கோயில் எழுப்பும்படி கூறினார். உடனே அந்த இடத்திற்கு சென்று மண்ணை தோண்டி பார்த்தார் மன்னன். அந்த இடத்தில் லிங்கம் ஒன்று இருந்தது அதன் அருகே புதையல் ஒன்றும் இருந்தது. அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அந்த புதையல் பணத்தை வைத்து அந்த குறுநில மன்னன் கோயில் ஒன்றை கட்டினார். அதுதான் நாம் தற்போது காணும் காய நிர்மலேஸ்வரர் திருக்கோயில்.

 

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை