HT Yatra: அசுரன் பெற்ற 3 லிங்கம்.. முனிவருக்கு காட்சி கொடுத்த சிவபெருமான்.. வேண்டுதலால் அமர்ந்த மகாதேவர்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: அசுரன் பெற்ற 3 லிங்கம்.. முனிவருக்கு காட்சி கொடுத்த சிவபெருமான்.. வேண்டுதலால் அமர்ந்த மகாதேவர்

HT Yatra: அசுரன் பெற்ற 3 லிங்கம்.. முனிவருக்கு காட்சி கொடுத்த சிவபெருமான்.. வேண்டுதலால் அமர்ந்த மகாதேவர்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 09, 2024 09:57 AM IST

HT Yatra: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் அருள்மிகு மகாதேவர் திருக்கோயில். இந்த திருக்கோயில் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ளது.

அசுரன் பெற்ற 3 லிங்கம்.. முனிவருக்கு காட்சி கொடுத்த சிவபெருமான்.. வேண்டுதலால் அமர்ந்த மகாதேவர்
அசுரன் பெற்ற 3 லிங்கம்.. முனிவருக்கு காட்சி கொடுத்த சிவபெருமான்.. வேண்டுதலால் அமர்ந்த மகாதேவர்

குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. திரும்பவும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டு பல மனிதர்கள் அகோரிகளாக திரிந்து வருகின்றனர்.

குறிப்பாக தென்னிந்தியாவில் இருக்கக்கூடிய தமிழ்நாட்டில் சிவபெருமான் ஆதி கடவுள் ஆசனாக வந்து வருகிறார். மண்ணுக்காக அனைத்து மன்னர்களும் போரிட்டு வந்தாலும் அனைத்து மன்னர்களுக்கும் குல தெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார். ஒரு பக்கம் போர் புரிந்து வந்தாலும் மறுபக்கம் சிவபெருமான் மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்துவதற்காகவும் மிக கம்பீரமாக மிகப்பெரிய கோயில்களை மன்னர்கள் கட்டிச் சென்றுள்ளனர்.

சில கோயில்கள் எப்பொழுது யாரால் கட்டப்பட்டது என்பது கூட தெரியவில்லை. பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை அசைக்க முடியாத வரலாற்று சரித்திர குறியீடாக இந்த திருக்கோவில்கள் கம்பீரமாக நின்று வருகின்றன.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் அருள்மிகு மகாதேவர் திருக்கோயில். இந்த திருக்கோயில் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ளது.

தல சிறப்பு

கார்த்திகை மாதத்தில் ஆண்டுதோறும் இந்த திருக்கோயிலில் கிருஷ்ணா அஷ்டமி திருநாளில் இங்கு இருக்கக்கூடிய சிவபெருமானை வழிபடுவது சிறப்பாகும். காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை சிவனை வழிபட்டால் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

ஏனென்றால் இந்த நேரத்தில் தான் வியாக்ரபாதர்க்கு சிவபெருமான் காட்சி கொடுத்து ஆசீர்வாதம் செய்தார் என நம்பப்படுகிறது. அன்றைய தினம் கிழக்கு பார்த்து அமர்ந்திருக்கும் நெஞ்சத்தின் மீது சூரிய ஒளி படும் அப்போது சூரிய பூஜை நடத்தப்படும். இதுவே இந்த கோயிலின் மிகப்பெரிய சிறப்பாகும்.

தல வரலாறு

கரண் என்ற அசுரன் மோட்சம் அடைவதற்காக சிவபெருமானை நோக்கி கடும் தவத்தை மேற்கொண்டார். தவத்தின் பலனாக சிவபெருமான் அவரிடம் மூன்று லிங்கத்தை கொடுத்து இதை பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். வலது கையில் ஒரு லிங்கத்தையும், இடது கையில் ஒரு லிங்கத்தையும், வாயில் ஒரு லிங்கத்தையும் அந்த அசுரன் எடுத்துச் சென்றார்.

அந்த சமயம் முனிவராக திகழ்ந்துவரும் வியாக்ர பாதர் சிவபெருமானை நோக்கி கடும் தவத்தை மேற்கொண்டு இருந்தார். அவரது தவத்தில் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் கார்த்திகை மாதம் கிருஷ்ணா அஷ்டமி திருநாளில் முனிவருக்கு காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் என கேட்டார்.

இதே நாளில் இந்த இடத்திற்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு அவர்களுடைய வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என முனிவர் கேட்டுக் கொண்டார். அந்த திருநாள் தான் தற்போது வைக்கத்தஷ்டமி என அழைக்கப்படுகிறது.

அதன் பின்னர் அசுரன் கரண் தனது வலது கையில் இருந்த லிங்கத்தை முனிவரிடம் கொடுத்து அதனை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யும்படி கூறினார் அந்த லிங்கம் தற்போது இருக்கும் இடம் தான் வைக்கம். அதன் பின்னர் தனது இடது கையில் வைத்திருந்த லிங்கத்தை ஏற்றமானூர் என்ற பகுதியில் மேற்கு நோக்கி வைத்தார். தனது வாயில் வைத்திருந்த லிங்கத்தை கடித்துருத்தி என்ற இடத்தில் கிழக்கு நோக்கி வைத்து பிரதிஷ்டை செய்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்