HT Spiritual Yatra: நடு காட்டில் குழந்தை சத்தம்..பதுமையாக தரையில் கிடந்த ஐயப்பன்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Spiritual Yatra: நடு காட்டில் குழந்தை சத்தம்..பதுமையாக தரையில் கிடந்த ஐயப்பன்

HT Spiritual Yatra: நடு காட்டில் குழந்தை சத்தம்..பதுமையாக தரையில் கிடந்த ஐயப்பன்

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 26, 2023 10:57 AM IST

சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பனின் பிறப்பின் வரலாறு குறித்து இங்கே காண்போம்.

சபரிமலை ஐயப்பன்
சபரிமலை ஐயப்பன்

இறைவனுக்கு பிறப்பும், இறப்பும் கிடையாது. ஆனால் சில காரியங்களுக்காக பிறப்பு எடுத்து வாழ்க்கையின் தத்துவத்தை இறைவன் உணர்த்திச் செல்வார் என புராணங்களில் கூறப்படுகிறது. அந்த வகையில் தெய்வீக சக்தி கொண்டு வித்தியாசமான பிறப்பெடுத்தவர் ஐயப்பன்.

ஐயப்பனின் பிறப்பு

திருவாங்கூரில் பந்தள நிலத்தை ஆளும் உரிமையை மன்னர் ராஜசேகரன் பெற்றிருந்தார். மக்கள் மீது அதிக அன்பு வைத்திருந்த மன்னராக இவர் கருதப்பட்டார். அரசர்கள் என்றாலே வாரிசுகள் மிகவும் முக்கியம். ஆனால் இவருக்கு பல காலமாக குழந்தை பாக்கியம் கிட்டவில்லை.

மன்னரும், ராணியும் சேர்ந்து சிவபெருமானிடம் எப்போதும் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள். அதேசமயம் மகிஷாசுரன் என்கின்ற அரக்கன் பிரம்மதேவரை வணங்கி கடுமையான தவம் செய்து வந்துள்ளார். அவருடைய தவத்திற்காக பூமியில் உன்னை யாரும் அழிக்க முடியாது என்ற வரத்தை பிரம்மதேவன் மகிஷாசுரனுக்கு வழங்குகிறார்.

வரத்தைப் பெற்ற மகிஷாசுரன், அனைத்து மனிதர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க தொடங்குகிறார். ஒரு கட்டத்தில் இவருடைய கவனம் தேவர்களை நோக்கி திரும்புகிறது. தெய்வத்தால் மட்டுமே இவரை அளிக்க முடியும் என்ற காரணத்தினால் அனைவரும் சேர்ந்து துர்கா தேவியை நோக்கி பிரார்த்தனை செய்கின்றனர்.

அதன் பின்னர் பக்தர்களின் வேண்டுகோளை கேட்டு, ருத்ர தாண்டவம் ஆடி ரத்தம் தெறிக்க துர்க்கை அம்மன் மகிஷாசுரனை வதம் செய்கிறார். தனது சகோதரனுக்காக பழிவாங்க வரம் வேண்டி பிரம்மனை நோக்கி மகிஷாசுரனின் சகோதரி மகிஷி கடுமையான தவத்தை மேற்கொள்கிறார்.

தவத்தின் பலனாக பிரம்மனும் அவருக்கு கேட்ட வரத்தை கொடுத்து விடுகிறார். மகிஷி, ஹரி மற்றும் சிவன் இவர்களுக்கு பிறந்த குழந்தையால் மட்டுமே எனக்கு இறப்பு ஏற்பட வேண்டும். என்ற வரத்தை பெற்றுக் கொள்கிறார்.

வரத்தைப் பெற்ற உடனே நேரடியாக தேவர்களை தொந்தரவு செய்ய சொல்கிறார். அனைவரும் சேர்ந்து மகாவிஷ்ணுவிடம் வேண்டிக் செல்கின்றனர். பிரம்மதேவன் கொடுத்த வரம் குறித்து அறிந்த மகாவிஷ்ணு, மோகினி அவதாரம் எடுக்கிறார். அதன் பின்னர் சிவபெருமானோடு இணைகின்றார்.

ஹரி மற்றும் ஹரன் இவர்களுடைய இணைப்பில் ஒரு ஆண் குழந்தை பிறக்கின்றது. குழந்தை இல்லாமல் சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்து வந்த மன்னன் ராஜசேகரன் வேட்டைக்காக பம்பை நதிக்கரையில் உள்ள காடுகளை நோக்கி பயணம் செய்து வருகிறார்.

ஒரு நீர்வீழ்ச்சியில் அமர்ந்து ராஜசேகரன் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது காட்டில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்கின்றது. சத்தத்தைக் கேட்டு அதன் வழியே சென்ற மன்னன் ஒரு அழகான ஆண் குழந்தையை கண்டெடுக்கின்றார்.

இந்த குழந்தை யாருடையது என்று தெரியாத மன்னன், குழந்தைக்கு சொந்தமானவர்களை தேடி வருகிறார். திடீரென்று அந்த பகுதியில் வந்த முனிவர் ஒருவர், குழந்தையை உனது அரண்மனைக்கு எடுத்துச் சென்று உன் பிள்ளை போல் வளர்த்துக் கொள். உனது வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அனைத்து துன்பங்களையும் இந்த குழந்தை தீர்த்து வைக்கும் எனக் கூறுகிறார்.

மேலும், பிறக்கும் பொழுது குழந்தையின் கழுத்தில் தங்கச் சங்கிலி மணி இருந்த காரணத்தினால் இந்த குழந்தைக்கு மணிகண்டன் என பெயர் சூட்டும்படி அவர் கூறியுள்ளார். மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற மன்னன் அந்த குழந்தையை அரண்மனைக்கு எடுத்துச் செல்கிறார். இதனைக்கண்ட மகாராணி மற்றும் மக்கள் அனைவரும் பெரு மகிழ்ச்சியில் பரவசம் அடைந்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner