Monday Temple: கரை ஒதுங்கிய வணிகர்.. வருத்தத்தில் அழுத பக்தர்.. காட்சி கொடுத்த சிவபெருமான்
Sep 02, 2024, 06:00 AM IST
Monday Temple: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருவது தான் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோவிலூரில் மிகச் சிறக்கக்கூடிய சிவபெருமான் சிதம்பரேஸ்வரர் எனவும், தாயார் சிவகாமி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்ட வருகின்றன
Monday Temple: மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடு கிடையாது. இந்திய பகுதிகளில் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மனித உயிரினங்கள் தோன்றிய பிறகு சிவபெருமானுக்கு பிரத்தியேகமாக கோயில் கட்டி தங்களது வழிபாடுகளை இன்று வரை நடத்தி வருகின்றன.
சமீபத்திய புகைப்படம்
அன்று மண்ணுக்காக போரிட்ட மன்னர்கள் அனைவரும் தங்கள் தீவிர பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே கலைநயமிக்க எத்தனையோ கோயில்களை கட்டிவைத்து சென்றுள்ளன. மிகப்பெரிய கோபுரங்கள் கொண்ட கோயில்களை கட்டி கோயிலின் நடுவே சிவபெருமானை வைத்து குலதெய்வமாக அனைத்து மன்னர்களும் வணங்க வேண்டும்.
தென்னாடுடைய சிவனாக இன்று வரை அவர் வாழ்ந்து வருவதற்கு காரணம் சிவபெருமான் ஒருபுறம் தமிழர்களின் மூதாதையர் எனக் கூறப்படுகிறது. ஆதி கடவுளாக விளங்கக்கூடிய சிவபெருமான் கடவுளுக்கெல்லாம் கடவுளாக திகழ்ந்த வருகின்றார்.
இன்று வரை சில கோயில்கள் எந்த காலத்தில் கட்டப்பட்டது என்பது கூட கண்டுபிடிக்க முடியவில்லை அந்த அளவிற்கு மிகவும் பழமை வாய்ந்த கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். எங்கும் சிவன் எதிலும் சிவன் என்று கூறும் அளவிற்கு மிகப்பெரிய கடவுளாக அன்றைய கால மக்களின் குலதெய்வமாக திகழ்ந்து வந்துள்ளார் சிவபெருமான்.
அதுபோல தமிழ்நாட்டின் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்துள்ளன அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருவது தான் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோவிலூரில் மிகச் சிறக்கக்கூடிய சிவபெருமான் சிதம்பரேஸ்வரர் எனவும், தாயார் சிவகாமி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்ட வருகின்றன
தல சிறப்பு
பங்குனி உத்திர திருநாளில் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி இருவருக்கும் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. திருமணம் ஆகாதவர்கள் இங்கு நடக்கக்கூடிய திருமண வைபவத்தில் கலந்து கொண்டு இருவருக்கும் அனுபவிக்கப்படும் மாலையை தங்களது கழுத்தில் அணிந்து கொண்டு பிரகாரத்தை வலம் வருகின்றனர். அதன் பின்னர் பிரசாதமாக கொடுக்கப்படும். மஞ்சளை தினமும் பெண்கள் பூசிக்கொண்டு வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
தல வரலாறு
இலங்கை பகுதியில் வசித்து வந்த வணிகர் ஒருவர் ஆண்டு தோறும் திருவாதிரை தினத்தின் பொழுது சிதம்பரத்தில் வீற்றிருக்கக்கூடிய நடராஜரை வழிபட்டுச் சென்றுள்ளார். இதனை அவர் தொடர்ச்சியாக செய்து வந்துள்ளார். ஒரு நாள் இதே நாளில் அவர் கடலில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது கடுமையான புயல் மற்றும் மழை ஏற்பட்டுள்ளது.
அதனால் கடல் மார்க்கமாக வந்த அவர் குலசேகரபட்டினம் வரை வந்து அதன் பின்னர் அங்கே தங்கி உள்ளார். சிவபெருமானை தரிசனம் செய்ய முடியாத காரணத்தினால் அங்கேயே மன உளைச்சலுக்கு ஆளாக்கி கதறி அழுதார். தனது பக்தனின் வருத்தத்தை போக்குவதற்காக சிவபெருமான் அந்த இடத்திலேயே திருவாதிரை கோலத்தில் காட்சி கொடுக்க முடிவு செய்துள்ளார்.
அதன் பின்னர் இங்கே வரிசையாக இரும்பு கூட்டம் செல்லும் அந்த எறும்பு கூட்டங்கள் எங்கே முடிகின்றதோ அங்கே உனக்கு நான் காத்துக் கொடுப்பேன் என வணிகருக்கு ஒரு அசரீரி கேட்டுள்ளது. அதன்படியே அங்கு சென்று வணிகர் பார்த்த பிறகு தில்லையில் காட்சி கொடுப்பது போல் சிவபெருமான் திருவாதிரை திருக்காட்சியை பணிகளுக்கு கொடுத்துள்ளார். அந்த இடத்திலேயே வணிகர் சிவபெருமானுக்கு கோயில் எழுப்பி அவருக்கு சிதம்பரேஸ்வரர் என்ற திருநாமத்தை சூட்டியுள்ளார். இதுவே தலத்தின் புராணமாக திகழ்ந்து வருகிறது.