Tuesday Temple: பொய் கூறிய பிரம்மதேவர்.. சாபம் கொடுத்த சிவபெருமான்.. நிவர்த்தி கொடுத்த கைலாசநாதர்-history of piramanoor arulmigu kailasha nathar temple in sivagangai district here - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Tuesday Temple: பொய் கூறிய பிரம்மதேவர்.. சாபம் கொடுத்த சிவபெருமான்.. நிவர்த்தி கொடுத்த கைலாசநாதர்

Tuesday Temple: பொய் கூறிய பிரம்மதேவர்.. சாபம் கொடுத்த சிவபெருமான்.. நிவர்த்தி கொடுத்த கைலாசநாதர்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 27, 2024 06:00 AM IST

Tuesday Temple: சிறந்த கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருவதுதான் சிவகங்கை மாவட்டம் பிரமனூர் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். இந்த கோயிலில் இருக்கக்கூடிய சிவபெருமான் கைலாசநாதர் எனவும் தாயார் காமாட்சி அம்மன் என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Tuesday Temple: பொய் கூறிய பிரம்மதேவர்.. சாபம் கொடுத்த சிவபெருமான்.. நிவர்த்தி கொடுத்த கைலாசநாதர்
Tuesday Temple: பொய் கூறிய பிரம்மதேவர்.. சாபம் கொடுத்த சிவபெருமான்.. நிவர்த்தி கொடுத்த கைலாசநாதர்

சிவபெருமானுக்கு எவ்வளவு பக்தர்கள் கூட்டம் இருப்பதற்கு காரணம் என்னவென்றால் எளிய மனிதர்களின் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். மேலும் கடவுளுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார்.

அதுமட்டுமில்லாமல் உயிரினங்கள் உருவான காலத்தில் இருந்து இன்று வரை சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. மனிதர்கள் மட்டுமல்லாது மற்ற உயிரினங்களும் சிவபெருமானுக்கு வழிபாடுகள் நடத்தியுள்ளதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளன. அதேபோல சுயம்புலிங்கமாகவும் சிவபெருமான் பல இடங்களில் காட்சி கொடுத்துள்ளார்.

மன்னர்கள் மிகப்பெரிய கோயில்களை கட்டி சிவபெருமானை வழிபட்டு வந்துள்ளனர் அந்த கோயில்கள் பல்லாயிரம் ஆண்டுகள் தொடங்கும் இன்று வரை காலத்தால் அழிக்க முடியாத அளவிற்கு வரலாற்று சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகிறது.

அப்படிப்பட்ட சிறந்த கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருவதுதான் சிவகங்கை மாவட்டம் பிரமனூர் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். இந்த கோயிலில் இருக்கக்கூடிய சிவபெருமான் கைலாசநாதர் எனவும் தாயார் காமாட்சி அம்மன் என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

தல சிறப்பு

இந்த திருக்கோயிலில் சூரிய பகவான் ஆறடி உயரத்தில் இருக்கின்றார். இவருக்கு செவ்வரளி மாலை மற்றும் கோதுமை பாயாசம் நெய் வைத்தியமாக படைத்து வழிபட்டால் சூரிய பகவானால் ஏற்படும் தோஷங்கள் மற்றும் சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என்பது ஐதீகமாக உள்ளது.

செய்வினை கோளாறுகள் மற்றும் பித்ரு தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் இங்கு வீற்றிருக்கக்கூடிய கைலாசநாதர் வழிபட்டால் நிவர்த்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

தல வரலாறு

சிவபெருமான் விஸ்வரூபம் எடுத்த நின்றார் அப்பொழுது அவருடைய திருமுடியும் திருவடியையும் காண்பதற்காக விஷ்ணு பகவான் மற்றும் பிரம்மதேவர் இருவரும் போட்டி போட்டுக் கொண்டார்கள். தாழம் பூவின் துணியை கொண்டு பிரம்மதேவர் சிவபெருமானின் தலையை தான் கண்டதாக பொய்யாக பேசினார். செவ்வாய் இதனால் சிவபெருமானின் சாபத்திற்கு உள்ளானார்.

தனது தவறை உணர்ந்த பிரம்ம தேவர் சாப விமோசனம் கேட்டு சிவபெருமானை நாடிச் சென்றார். அதன் பின்னர் சிவபெருமான் பூவுலகம் சென்று என்னை வழிபட்டு சாப விமோசனம் பெற்றுக் கொள் எனக் கூறினார். இதனால் பிரம்மதேவர் வைகை ஆற்றின் தென்கரைப் பகுதியில் லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதன் காரணமாக பிரம்மதேவருக்கு சாபம் நீங்கியது.

அதன் பின்னர் சிவபெருமானுக்கு பிரம்ம தேவர் நன்றி தெரிவித்தார். அதன் பின்னர் வரும் காலங்களில் இந்த இடம் தனது பெயரிலேயே அழைக்கப்பட வேண்டும் என சிவபெருமானிடம் கோரிக்கை வைத்தார். அதன் காரணமாக இந்த ஊர் பிரமனூர் என அழைக்கப்பட்டது. அதன் காரணமாகவே மும்மூர்த்திகளும் இந்த திருக்கோயிலில் தனது தேவியர்களோடு காட்சி கொடுத்து வருகின்றனர். இது மிகவும் பழமை வாய்ந்த திருக்கோயிலாக விளங்கி வருகின்றது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9