மீன ராசியில் நுழைந்த சூரியன்.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. அடி விழுவது உறுதி.. ஓட வேண்டிய ராசிகள்
Mar 21, 2024, 11:48 AM IST
Lord Surya: சூரிய பகவான் மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே இந்த ராசிகள் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது ராகு பகவானோடு சூரிய பகவான் இணைந்துள்ளார். சூரிய பகவானின் இந்த இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு ஆபத்து கொடுக்கும்.
நவகிரகங்களில் சூரிய பகவான் தலைவன் ஸ்தானத்தில் இருந்து வருகிறார். நவகிரகங்களில் இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சூரிய பகவான். ஒவ்வொரு முறை சூரிய பகவான் இடம் வரும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
சமீபத்திய புகைப்படம்
நவகிரகங்களும் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தற்போது சூரிய பகவான் மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே இந்த ராசிகள் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது ராகு பகவானோடு சூரிய பகவான் இணைந்துள்ளார். சூரிய பகவானின் இந்த இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு ஆபத்து கொடுக்கும். சூழ்நிலை உருவாகியுள்ளது அப்படி சிரமப்பட போகின்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
கடக ராசி
சூரிய பகவானின் இடமாற்றத்தால் உங்களுக்கு வேலையில் சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதிக கவனம் செலுத்தி இருந்தால் நல்லது. வணிகம் மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது சண்டைகள் ஏற்படும். வாழ்க்கை துணையோடு போராடும் சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
துலாம் ராசி
இந்த காலகட்டத்தில் நீங்கள் எது செய்தாலும் உங்களுக்கு திருப்தி கிடைக்காது. ஆசைகள் நிறைவேறாமல் போக அதிக வாய்ப்பு உள்ளது. அதிக வருமானம் எதிர்பார்ப்பதை தற்போது தவிர்க்க வேண்டும். புதிய முதலீடுகள் செய்வது தவிர்ப்பது நல்லது. இல்லை என்றால் நஷ்டம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். திட்டமிட்ட காரியங்கள் செயல்படுவதற்கு சற்று காலதாமதம் ஆகும். எனவே எச்சரிக்கையாக இருங்கள்.
தனுசு ராசி
மீன ராசிக்கு சூரிய பகவான் நுழைந்தது உங்களுக்கு கலவையான பலன்களை கொடுக்கப் போகின்றது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில் கலவையான முடிவுகள் உங்களைத் தேடி வரலாம். கணவன் மனைவிக்கு இடையே சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை அதிகம் அமையும். குடும்பத்தில் அவ்வப்போது சில சிக்கல்கள் ஏற்படும் வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அனைத்து சூழல்களும் உங்களுக்கு எதிர்மறையாக செயல்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.