Lord Surya: உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குடிபுகுந்த சூரிய பகவான்.. எதிரிகளை துரத்தப்போகும் ராசிகள்!
Lord Surya: மீன ராசியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குடிபுகும் சூரியபகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.
Lord Surya: நவகிரகங்களில் மன்னாதி மன்னனாக இருப்பவர், சூரிய பகவான். எதிரிகளின் தாக்கம் அதிகரித்தாலும், துரோகத்தால் வாழ்க்கை மாறத்தொடங்கினாலும் அதனைத் தலைமையேற்று மாற்றத் தொடங்கும் வல்லமையை சூரியபகவான் வழங்குகிறார். சூரிய பகவானின் பார்வையை தினமும் நீங்கள் பெற்றாலும் சரி, சூரிய பகவானின் பார்வை உங்கள் ராசியில் விழுந்தாலும் சரி, உங்களது ஆளுமைத்திறனை வளர்த்துவிட்டு அழகுபார்ப்பவர், சூரிய பகவான்.
இந்நிலையில் சூரிய பகவான், சமீபத்தில் மார்ச் 17ஆம் தேதி மீன ராசியில் உத்திரட்டாதி நட்த்திரத்தில் குடிபெயர்ந்துள்ளார். மேலும், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சூரிய பகவான், வரும் மார்ச் 31ஆம் தேதி வரை சஞ்சரிப்பார். இதனால் சூரியபகவான், உத்திரட்டாதியின் நட்சத்திரப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை சில ராசிகள் பெறுகின்றன. அப்போது நல்வாய்ப்பைப் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.
ரிஷப ராசி: சூரிய பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்துக்குப் பெயர்வதால் ரிஷப ராசியினர் அற்புதமான பலன்களைப் பெறப்போகின்றனர்.
இந்த காலத்தில் வீட்டில் இருந்த மனத்தடங்கல்கள், குழப்பங்கள் நீங்கும். முட்டுக்கட்டையாக இருந்த தடைகள் விலகும். கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்னை, தந்தை - மகன் இடையே இருந்த சண்டை ஆகியவை நீங்கும். தொழில்முனைவோர் பலருக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் ஆகாத பணம் கைவந்துசேரும். நீங்கள் தொட்ட காரியம் ஜெயிக்கும். பொருளாதார முன்னேற்றம் இல்லாமல் சிக்கித்தவித்த ரிஷப ராசியினருக்கு சூரியனின் ஆசியால், நல்ல நல்ல ஆர்டர்கள் கிடைக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வு அதிகரித்து வரும் காலாண்டில் செயல்திறன் அதிகரிக்கும். மேலும், அயல்நாட்டில் வேலைக்கு முயற்சித்தால் இந்த காலகட்டத்தில் நல்ல சம்பளத்துடன் கூடிய பணி கிட்டும். இத்தனை நாட்களாக, உங்கள் மீது இருந்த கெட்டபெயர் விலகி, நல்ல பிம்பத்தைச் சம்பாதிப்பீர்கள்.
மிதுன ராசி: சூரிய பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்துக்குப் பெயர்வதால் மிதுன ராசிக்குப் பல நன்மைகள் நடக்கப்போகின்றன. குறிப்பாக, வெகுநாட்களாக கை கூடாமல் இருந்த திருமண வாழ்க்கை கை கூடும். அதுவும், உங்களைப் பார்த்து ஏளனப் பார்வை பார்த்தவர்கள் ஆச்சரியப்படும் வகையில் நல்ல வாழ்க்கை அமையும். இக்காலத்தில் தைரியமாக வரன் பாருங்கள். இறை நம்பிக்கை இந்த காலத்தில் அதிகரிக்கும். உழவாரப் பணிகளை மேற்கொள்வீர்கள். மிகுந்த கஷ்டப்பட்டு, கடன்பட்டு கடையை நடத்திக்கொண்டிருக்கும் வணிகர்களே, சூரியனின் அருள் ஆசியால் உங்களுக்குத் தரமான வாடிக்கையாளர்கள் இந்த காலகட்டத்தில் அமைவார்கள். பேசும்போது மட்டும் இனிமையாகப் பேச கற்றுக்கொள்ளுங்கள். முன்கோபத்தை தயவுசெய்து கட்டுப்படுத்தினீர்கள் என்றால் இன்னும் வாழ்வுமேன்மையடையும். பொருளாதார ரீதியாக இருந்த மந்தநிலை மெல்ல மெல்ல நீங்கும். பணியிடத்திலும் சகப் பணியாளர்களின் அன்பைப் பெறுவீர்கள்.
கன்னி ராசி: சூரிய பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்துக்குப் பெயர்வதால், கன்னி ராசிக்குப் பல நன்மைகள் நடக்கப்போகின்றன. உங்களை அடியோடு சாய்க்க நினைத்த எதிரிகளின் கொட்டத்தை முறியடிப்பீர்கள். தினமும் சூரிய வழிபாடு செய்வது உங்களை ஆன்மபலமிக்கவனாக மாற்றும். உங்களது கண்ணுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருந்த தடைகள் அனைத்தும் கற்பூரம் காற்றில் கரைவதுபோல, இந்த காலத்தில் கரைந்து போகும். இத்தனை நாட்களாக, கஷ்டப்பட்டு சம்பாதித்து, சம்பந்தமே இல்லாமல் விரயமாகிய உங்களது பணம் இனிமேல் சொத்தாக மாறும். ஆம். இந்த காலத்தில் ஒரு வீட்டடி மனையினையாவது வாங்கிவிடுவீர்கள். முந்தைய நாட்களோடு ஒப்பிடும்போது, உங்களது பணிசெய்யும் திறன் மேம்பட்டு இருக்கும். அயல் நாட்டு நிறுவனங்களால் நல்ல வாய்ப்பினைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு பெரிய பெரிய ஆர்டர்கள் மூலம் ஆண்டு வருமானம் அதிகரிக்கும். சொந்தக்காரர்களால் இனிமேல் நல்லது நடக்கும்.
பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்