தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasi Palan: மே 29 - பேச்சுவார்த்தையில் நிதானம் தேவை..!

Today Rasi Palan: மே 29 - பேச்சுவார்த்தையில் நிதானம் தேவை..!

May 29, 2023, 06:24 AM IST

மே 29ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.
மே 29ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.

மே 29ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

சமீபத்திய புகைப்படம்

Pradhosa Fasting : பிரச்னைகளை தீர்க்கும் பிரதோஷ விரதம்! கணவன் - மனைவி இடையே இணக்கத்தை உருவாக்கும்! எப்படி இருப்பது?

May 04, 2024 05:42 PM

Hastham Nakshatram: ’அமைதியாக இருந்து அதிரடி காட்டுவார்கள்!’ அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

May 04, 2024 05:12 PM

மீனத்தில் சித்து வேலை செய்யும் செவ்வாய்.. தலைகீழாக புரட்டி அடிப்பது உறுதி.. இந்த ராசிகள் ரொம்ப கவனமா இருக்கணும்

May 04, 2024 05:08 PM

சொகுசை தரப்போகும் சுக்கிரன்.. ஆடம்பரமாக வாழப்போகின்ற ராசிகள்.. அதிர்ஷ்ட பணமழை இவர்களுக்குத்தான்

May 04, 2024 03:36 PM

மீன ராசிக்கு புயலாய் கொட்டும் புதன்.. பண குவியலில் சிக்கிக்கொண்ட ராசிகள்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது

May 04, 2024 03:28 PM

குரு குதூகலிக்க போகிறார்.. கிருத்திகை நட்சத்திரத்தில் அதிரடி.. வாழையடி வாழையாய் வாழப் போகும் ராசிகள்..!

May 04, 2024 12:44 PM

மாறி வரும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப உற்பத்தியை பெருக்குவீர்கள். சிறு வியாபாரிகள் அதிக லாபம் அடையலாம். ரியல் எஸ்டேட் தொழில் சீராக நடக்கும். ஷேர் மார்க்கெட்டில் உங்கள் கை ஓங்கலாம். அலைச்சலும் அதிகம் இருந்தாலும் ஆதாயமும் அதிகம் கிடைக்கும்‌. வேலை திறனால் முதலாளிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகமாகும்

ரிஷப ராசி

நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் எச்சரிக்கை தேவை. தேவையில்லாமல் கெட்ட பெயர்களை சம்பாதிக்க வேண்டாம். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணம் நகைகள் வைக்கும் இடத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். பேச்சுவார்த்தையில் நிதானம் தேவை. வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாம். சிக்கனமாக செலவு செய்யுங்கள்.

மிதுன ராசி

வியாபாரத்தை விரிவுபடுத்த வீணாக செலவு செய்ய வேண்டாம். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையாது. கேட்ட இடத்தில் பணம் வர தாமதமாகும். வங்கி பரிவர்த்தனையில் சுணக்கம் ஏற்படும். உறவினர்களால் செலவு அதிகரிக்கும். உடல்நிலை பாதிப்புக்கு மருத்துவமனை செல்வீர்கள். பெற்றோர் வகையில் பணம் விரையம் ஏற்படலாம். வேலை இடங்களிலும் சிக்கலை சந்திப்பீர்கள்.

கடக ராசி

வருமானம் போதிய அளவுக்கு இருப்பதால், குடும்ப நிர்வாகத்தில் பிரச்னை ஏற்படாது. கணவன் மனைவி உறவில் பிரச்னை இருக்காது. வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கை தேவை. உற்பத்தி அதிகரித்து உற்சாகமடைவீர்கள். காலத்துக்கு ஏற்ப வியாபாரத்தை மாற்றுவீர்கள். அரசாங்க வேலை பார்ப்பவர்கள் அனுகூலம் அடைவார்கள்.

சிம்ம ராசி

தொழில் முன்னேற்றத்திற்காக உதவிகள் கிடைக்கும், உறவினர்களால் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும், பிள்ளைகள் நிலைமையைப் புரிந்து கொள்வார்கள். எடுத்த காரியத்தை முடிப்பீர்கள். அலுவலகப் பணியைப் பொருத்தவரை பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

கன்னி ராசி

முக்கியமான தகவல்கள் உங்களைத் தேடி வருவதற்கு நேரம் எடுத்துக் கொள்ளும். வேலை செய்யும் இடத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். மற்றவர்களின் வேலையில் தலையிடாதீர்கள். கடின உழைப்பால் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

துலாம் ராசி

உங்களது குடும்பத்தைப் பிரிய வாய்ப்புள்ளது. மங்கல நிகழ்ச்சிகளால் செலவு அதிகரிக்கும். உறவினர்களால் பிரச்சினை ஏற்படும், தொழிலில் எதிர்ப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது.

விருச்சிக ராசி

நகைகள் வாங்குவீர்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். அலுவலக பணிகளை பொறுத்தளவில் சிறப்பாகச் செயல்படுவீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் சமமான நிலையில் பயணம் செய்யும். பழைய கடன்களைத் தேடி வாங்குவீர்கள். தொடர் பிரச்சனைகள் சரியாகும்.

தனுசு ராசி

வேலை காரணமாக வெளியூர் பயணம் செல்ல அதிக வாய்ப்புள்ளது. தொடர்ந்துவந்த வழக்கு சிக்கல்கள் தீரும். பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். வேலைக்கு செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

மகர ராசி

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கடினமான உழைப்பால் தொழில் முன்னேற்றம் அடையும். பணவரவு அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் நல்ல பலன்களைத் தரும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது.

கும்ப ராசி

நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். வருமானத்தைப் பொறுத்தவரை எந்த குறையும் இருக்காது.

மீன ராசி

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. பணவரவு சீராக இருக்கும்.

டாபிக்ஸ்