தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Horoscope For March 27

Today Rasi Palan : மார்ச் 27 - கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது!

Divya Sekar HT Tamil

Mar 27, 2023, 06:28 AM IST

மார்ச் 27ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.
மார்ச் 27ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.

மார்ச் 27ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

சமீபத்திய புகைப்படம்

Lucky Zodiac : பணமும் பதவி உயர்வும் கிடைக்கும்.. சனி பகவானின் பிற்போக்கு பெயர்ச்சி.. இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட மழை தான்!

Apr 30, 2024 07:00 AM

Akshaya Tritiya 2024 : அட்சய திருதியை நாளில் எந்த நேரத்தில் தங்கம் வாங்கினால் ஜாக்பாட் காத்திருக்கு பாருங்க!

Apr 30, 2024 06:20 AM

Uthirattathi Nakshatram: ‘கேட்டதை கொடுக்கும் காமதேனுவின் அருள் பெற்றவர்கள்!’ உத்திரட்டாதி நட்சத்திரத்தின் பொதுப்பலன்கள்!

Apr 29, 2024 05:58 PM

Today Rasi Palan : ‘நினைத்தது நடக்கும்.. நிதானம் தேவை’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Apr 29, 2024 04:30 AM

Elarai Sani 2024: ‘ஏழரை சனி முடிஞ்சாலும் ஏன் இப்படி?’ … தள்ளாடும் தனுசு! - குரு காப்பாற்றுவாரா?

Apr 28, 2024 08:12 PM

Sadhayam Nakshatram: ‘எதிரிகளை ஓட விடுவார்கள்!’ ராஜராஜன் பிறந்த சதயம் நட்சத்திரத்தின் பலன்கள்!

Apr 28, 2024 05:29 PM

வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கும். உங்களை எதிர்த்தவர்கள் காணாமல் போவார்கள். சிறு வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த விஷயத்திலும் கடின உழைப்பால் வெற்றியைப் பெறுவீர்கள். 

ரிஷப ராசி

வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களால் நன்மை கிடைக்கும். உங்கள் திறமையால் முன்னேற்றம் அதிகமாகும். வியாபாரத்திலிருந்த சிக்கல்கள் தீரும். பொறுமையாக இருப்பது நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும்.

மிதுன ராசி

உங்கள் திறமையால் தொழில் முன்னேற்றம் அடையும். நீங்கள் யார் என்று மற்றவர்களுக்குப் புரிய ஆரம்பிக்கும். உயர் அலுவலர்களுக்கு இடையே சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டில் அனைத்து வேலைகளும் வேகமாக நடக்கும். விரைவில் திருமண காரியங்கள் நிகழ உள்ளது.

கடக ராசி

தொழில் சார்ந்த விஷயங்களில் எதிரிகள் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. வீட்டில் சஞ்சலங்கள் ஏற்படும். கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது. சிந்தித்துச் செயல்படுவது உங்களுக்கு நன்மையைத் தரும். வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இல்லாவிட்டாலும் லாபம் கிடைக்கும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம்.

சிம்ம ராசி

வேலை செய்யும் இடத்திலிருந்த சிக்கல்கள் தீரும். தடைப்பட்ட காரியங்கள் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை. தைரியம் அதிகமாகும்.

கன்னி ராசி

தேவையில்லாத உத்தரவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆராயாமல் மற்றவர்கள் கூறுவதைக் கேட்பதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப விஷயத்தில் பொறுமையாக இருப்பது நல்லது. கூடுமானவரையில் மற்றவர்களிடம் அன்பாகப் பழகுங்கள். கடன் வாங்கும் சூழல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

துலாம் ராசி

நேர்மையாகச் செயல்படுவது நல்லது. உதவிகள் கேட்ட இடத்தில் கிடைக்காமல் போக அதிக வாய்ப்பு உள்ளது. உங்களைத் தேடி வருவது சற்று தாமதமாகும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களால் சிக்கல்களில் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மருத்துவமனையில் செலவுகள் அதிகமாகும்.

விருச்சிக ராசி

வெளியே உள்ள கோபத்தை குடும்பத்தின் மீது காட்ட வேண்டாம். குழந்தைகள் மீது அக்கறை கொள்ள வேண்டும். உணவு சாப்பிடும் போது கவனமாக இருங்கள். மற்றவர்கள் விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டாம். வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது. முடிவுகள் எடுக்கும் போது நிதானமாக இருக்கும்.

தனுசு ராசி

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் விருத்தியாகும், வேலை செய்யுமிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். தேவையில்லாத பிரச்சனைகள் தீரும். எதிர்பார்த்த பதவிகள் உங்களைத் தேடி வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மகர ராசி

வீட்டில் மங்கள காரியங்கள் நிகழ உள்ளது. வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது. ரியல் எஸ்டேட் தொழிலில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மருத்துவமனை செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது

கும்ப ராசி

தொழில் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத செலவுகளைக் குறைப்பது நல்லது. நல்ல செய்தி வரத் தாமதமாகும். ரகசியங்களைப் பாதுகாக்க வேண்டும். கோபத்தால் உறவுகளை இழக்க வேண்டாம்.

மீன ராசி

குடும்பத்திலிருந்த பிரச்சனை தீரும். சிக்கல்களைக் கடந்து செல்வீர்கள். தேவையில்லாத செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. நல்ல உணவுகளைச் சாப்பிட வேண்டும். எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் தைரியமாக இருப்பீர்கள்.

டாபிக்ஸ்