தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasi Palan: தேவை இல்லாமல் பேச வேண்டாம்!

Today Rasi Palan: தேவை இல்லாமல் பேச வேண்டாம்!

Dec 08, 2022, 07:18 AM IST

டிசம்பர் 8ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.
டிசம்பர் 8ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.

டிசம்பர் 8ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

சமீபத்திய புகைப்படம்

Guru peyarchi 2024 On Zodiac Signs: மறைவு ஸ்தானத்தில் குரு; நெருப்பாய் மாறும் பார்வை; கொப்பளமாய் வீங்கப்போகும் ராசிகள்!

May 10, 2024 07:59 PM

பரணியில் பணத்தில் விளையாடும் ராசிகள்.. சூரியன் மே மாதம் வரை விட மாட்டார்.. ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்

May 10, 2024 02:46 PM

குரு வாசலில் அமர்ந்தார்.. பண மூட்டையை சிதற விடுவார்.. அதிர்ஷ்டத்தில் மிதக்கும் ராசிகள் இவர்கள்தான்

May 10, 2024 02:35 PM

வாட்டி வதைக்க போகும் செவ்வாய்.. முரட்டு அடி வாங்க போகும் ராசிகள்.. இந்த ராசியில் இருக்கா தப்பிச்சுக்கோங்க

May 10, 2024 02:15 PM

காம உணர்ச்சி அதிகமாக இருக்கும் ராசிகள்.. எப்போதும் தாம்பத்திய சிந்தனை தான்.. நீங்களும் அந்த ராசியாக பாருங்கள்

May 10, 2024 02:08 PM

சனி இனி உங்களை விட மாட்டார்.. பையோடு காத்திருங்கள்.. பணமழை பெய்ய போகுது.. அதிர்ஷ்டக்கார ராசிகள் நீங்கள் தான்

May 10, 2024 12:30 PM

தொழில் சார்ந்த விஷயங்களில் நிலையான வருமானம் கிடைக்கும், புதிய வேலைக்காக அதிகம் யோசிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் நல்ல பலனைத் தரும், வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள்.

ரிஷப ராசி

உங்களுக்குப் பக்கபலமாக நண்பர்கள் இருப்பார்கள். வருமானம் அதிகரிக்கும், புதிய வீடு வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு நகை வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்து சிக்கல்கள் தீரும்.

மிதுன ராசி

தொழில் சார்ந்த விஷயங்களில் செலவு அதிகரிக்கும், வியாபாரம் சமமான நிலையில் செல்லும். தொழிலில் சற்று கவனம் தேவை, உங்களுக்குக் கோபம் வர அதிக வாய்ப்பு உள்ளது, எனவே பொறுமையாக இருந்து பிரச்சனைகளை தவிர்த்துவிடுங்கள். பண உதவி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. புத்துணர்ச்சியோடு வேலை செய்யுங்கள்.

கடக ராசி

வியாபாரத்தில் இருக்கும் சிக்கல்கள் தீரும். ரியல் எஸ்டேட் தொழில் மந்தமாக இருக்கும். மற்றவர்களின் பேச்சைக் கேட்பதைத் தவிர்க்க வேண்டும். அவசரமான மனநிலையோடு முடிவு செய்யாதீர்கள். கோபத்தால் குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்ம ராசி

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். தேவையில்லாத அலைச்சல் உண்டாகும், ஆனால் அதனால் நல்ல பலன்கள் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும்.

கன்னி ராசி

புதிய நட்புகளிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீணாகப் பேசி கெட்ட பெயரை வாங்க வேண்டாம். பணப் பரிமாற்றத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பேசும்போது எச்சரிக்கை தேவை. செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

துலாம் ராசி

வியாபாரத்தில் அதிக செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். பயணங்கள் நல்ல பலன்களைத் தராது. எதிர்பார்க்கும் நேரத்தில் உதவிகள் கிடைக்காது. உறவினர்களால் சிக்கல்கள் உண்டாக அதிக வாய்ப்புள்ளது. பண விரயம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிக ராசி

போதுமான அளவுக்கு வருமானம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சாலையில் செல்லும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிக உணர்ச்சிவசப்பட வேண்டாம். வியாபாரம் நிதானமாக இருக்கும்.

தனுசு ராசி

வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. தேவையில்லாத வேலைகளை செய்யாதீர்கள். மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். வார்த்தைகளில் கவனம் தேவை நகைச்சுவை கூட சிக்கல்களை ஏற்படுத்தும். கடன் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

மகர ராசி

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நிகழ உள்ளது. பயணங்கள் நல்ல பலன்களைத் தரும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உங்கள் கஷ்ட நஷ்டத்தில் மனைவி துணையாக இருப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

கும்ப ராசி

வியாபாரத்திற்கு தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும் நடக்கும். அதேபோல் தொழிலில் இருந்த சிக்கல்கள் தீரும். கடன் சிக்கல்கள் முடிவடையும். பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

மீன ராசி

பணி செய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்புள்ளது. நெருங்கிய பழக்கமாக இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும். தொடர்ந்து வந்த சொத்து சிக்கல்கள் தீரும். வீட்டில் திருமண காரியங்கள் நிகழ உள்ளது. வேலை விஷயத்தை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தடைகள் இன்னிக்கு வேலையை முடித்து விடுவீர்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி