தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasipalan: செப்டம்பர் வருகிறார் புதன்.. 3 ராசிகளுக்கு ஜாக்பாட்.. நீங்க என்ன ராசி?.. இனி என்ன செய்ய?

Rasipalan: செப்டம்பர் வருகிறார் புதன்.. 3 ராசிகளுக்கு ஜாக்பாட்.. நீங்க என்ன ராசி?.. இனி என்ன செய்ய?

Sep 08, 2024, 12:05 PM IST

google News
Lord Mercury: புதன் பகவானின் சிம்ம ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.
Lord Mercury: புதன் பகவானின் சிம்ம ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

Lord Mercury: புதன் பகவானின் சிம்ம ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

Lord Mercury: நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் கன்னி மற்றும் மிதுன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

சமீபத்திய புகைப்படம்

யார் இந்த பாபா வங்கா.. பார்வை இல்லை. இமைகள் திறக்காது.. உண்மையில் பெண்.. ஆனால் பாபா வங்கா என அறியப்பட்டவரின் கதை!

Dec 21, 2024 06:37 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:31 PM

குரு 2025 பிப்ரவரி வரை விடமாட்டார்.. இந்த ராசிகள் கொஞ்சம் மோசம்.. பணத்தில் குதித்து விளையாடுவது யார்?

Dec 21, 2024 03:26 PM

சனி வாயை திறந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் மீது விடாமல் கொட்டும் கோடிகள்.. உங்க ராசி என்ன?

Dec 21, 2024 03:21 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:19 PM

மேஷம், கடகம், விருச்சிகம் ராசியினரே.. குரு பகவான் குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி தேடி வரும் பாருங்க!

Dec 21, 2024 01:48 PM

தற்போது கடக ராசியில் பயணம் செய்து வரும் புதன் பகவான் வருகின்ற செப்டம்பர் மாதம் நான்காம் தேதி அன்று சிம்ம ராசியில் நுழைகின்றார். இது சூரிய பகவானின் சொந்தமான ராசியாகும். புதன் பகவானின் சிம்ம ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். எதனால் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மிகவும் அற்புதமான பலன்கள் உங்களை தேடி வரும். அதர்சத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடக ராசி

உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். அதனால் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அனைத்து தொழில்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வணிகத்தில் எதிர்பாராத நேரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

மீன ராசி

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப்போகின்றார். எதனால் உங்களுக்கு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்வில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நீங்கள் எடுக்க முடிவுகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களால் அனைத்து காரியங்களையும் செய்ய முடியும். ஒப்படைக்கப்பட்ட காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக முடித்து காட்டுவீர்கள். மற்றவர்களிடத்தில் பாராட்டுகள் உங்களுக்கு கிடைக்கும். 

காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிதி நிலைமையில் இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி