Raja Yoga: சிம்மத்தில் விழுந்த புதன்.. கொட்டும் பணமழை.. செப்டம்பர் ராசிகள் இவங்கதான்-3 rasis are going to get raja yoga and live because of lord rahu - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Raja Yoga: சிம்மத்தில் விழுந்த புதன்.. கொட்டும் பணமழை.. செப்டம்பர் ராசிகள் இவங்கதான்

Raja Yoga: சிம்மத்தில் விழுந்த புதன்.. கொட்டும் பணமழை.. செப்டம்பர் ராசிகள் இவங்கதான்

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 07, 2024 12:25 PM IST

Lord Rahu: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Raja Yoga: சிம்மத்தில் விழுந்த புதன்.. கொட்டும் பணமழை.. செப்டம்பர் ராசிகள் இவங்கதான்
Raja Yoga: சிம்மத்தில் விழுந்த புதன்.. கொட்டும் பணமழை.. செப்டம்பர் ராசிகள் இவங்கதான்

ராகு மற்றும் கேது எப்போதும் ஒரே நிலையில் இருப்பார்கள். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் அவர் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

இந்நிலையில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதியன்று ராகு பகவான் மீன ராசியில் இருந்து விளக்கி கும்ப ராசிக்கு செல்கிறார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்தார். 

ராகு பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

ராகு பகவான் உங்களுக்கு பல நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். நேர்மறையான மாற்றங்கள் உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தடைகள் அனைத்தும் நிவர்த்தி அடையும். 

மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். அனைத்து விருப்பங்களும் உங்களுக்கு ஏற்றவாறு நிறைவேறும். அரசாங்க உதவிகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கக்கூடும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

மகர ராசி

உங்கள் ராசிகள் ராகு பகவானின் சஞ்சாரம் பலன்களை பெற்றுத் தரும். பணத்தை திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். திடீரென செல்வம் உங்களைத் தேடி வரும். ஆச்சரியப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நிறுத்தப்பட்ட வேலைகள் வெற்றிகரமாக தொடங்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

நீண்ட கால நிதி சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வாழ்க்கையில் ஏற்பட்டு வந்து ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நல்ல வாய்ப்புகளை பெற்று தரும். அனைத்து வழிகளில் இருந்தும் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அற்புதமான சாதனைகள் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் வாழ்க்கை முன்னேற்றம் அடையும்.

கும்ப ராசி

சனி பகவானின் கும்ப ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். ராகு பகவான் உங்களுக்கு அனைத்து விதமான முன்னேற்றங்களையும் பெற்று தருவார். அனைத்து விதமான பலன்களும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் இருந்து சண்டை மற்றும் சச்சரவுகள் நீங்கும். தொழிலில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். 

வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிலவும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். சிந்தித்து செயல்பட்டால் உங்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner