தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  தங்கத்தில் மிதக்கும் ராசிகள்.. புதன் பிச்சுகிட்டு கொட்ட போகிறார்.. பணத்தில் பறப்பது யார்?

தங்கத்தில் மிதக்கும் ராசிகள்.. புதன் பிச்சுகிட்டு கொட்ட போகிறார்.. பணத்தில் பறப்பது யார்?

Oct 29, 2024, 01:58 PM IST

google News
Lord Mercury: புதன் பகவானின் உதயமானது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் நல்ல பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Mercury: புதன் பகவானின் உதயமானது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் நல்ல பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Mercury: புதன் பகவானின் உதயமானது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் நல்ல பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் இளவரசன் பதவியை வகித்து வருபவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் பேச்சு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.புதன் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சமீபத்திய புகைப்படம்

'அருமை தெரியலையா.. அவதிப்படுங்க.. அறம் ஆற்றல் தரும்.. உழைப்பை விடாதீங்க' இன்று நவ.16 மேஷம் முதல் மீனம் வரையான ராசிபலன்!

Nov 16, 2024 04:30 AM

நாளை முதல்ஆட்டம் போட காத்திருக்கும் சூரியன்.. ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், மகரம் ராசியினரே ஜாக்பாட்தான் போங்க!

Nov 15, 2024 07:58 PM

புத்தாண்டில் மாறும் கிரகங்கள்! 2025ஆம் ஆண்டு கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்! செம அடி வாங்க போகும் 3 ராசிகள்!

Nov 15, 2024 05:35 PM

புதன் பெயர்ச்சி உச்சம்.. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் ராசிகள்.. இனி தவிர்க்க முடியாது..!

Nov 15, 2024 03:05 PM

அதிர்ஷ்ட கதவு திறந்தது.. சூரியன் தட்டி தூக்கிய ராசிகள்.. அக்டோபர் பண விளையாட்டு.. தவிக்கப் போவது யார்?

Nov 15, 2024 02:55 PM

சனி தலையில் கை வைத்தார்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. 2025 வரை பணமழை.. என்ன நடக்கும்!

Nov 15, 2024 02:48 PM

அந்த வகையில் தற்போது புதன் பகவான் துலாம் ராசியில் பயணம் செய்திருக்கின்றார். கடந்த அக்டோபர் 22ஆம் தேதி அன்று புதன் பகவான் துலாம் ராசியில் உதயமானார். புதன் பகவானின் உதயமானது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் நல்ல பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் புதன் பகவானின் உதயம் சிறப்பாக உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிறைந்திருக்கும். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும் நிதி பாதுகாப்பு உறுதியாகும்.

கன்னி ராசி

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு நல்ல யோகத்தைப் பெற்றுத் தரப் போகின்றது. குடும்பத்தில் வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப பொறுப்புகளில் உங்களுடைய அர்ப்பணிப்பு அதிகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு பாராட்டுகளை கொடுப்பார்கள். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். 

பணி நிமித்தமாக நீங்கள் நீண்ட தூர பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய தொழில் தொடங்க நினைத்தால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மன ஆரோக்கியம் மற்றும் உடல் நல சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். உடல் ஆரோக்கியத்தில் இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

துலாம் ராசி

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை பெற்றுத் தரப் போகின்றது. நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களைப் பெற்றுத் தரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். சேமிப்பு உங்களுக்கு அதிகமாகும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை