அனல் பறக்க தெறிக்கவிடும் ராசிகள்.. வேலையை தொடங்கிவிட்டார் புதன்.. இனி உங்களை தொட முடியாது
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  அனல் பறக்க தெறிக்கவிடும் ராசிகள்.. வேலையை தொடங்கிவிட்டார் புதன்.. இனி உங்களை தொட முடியாது

அனல் பறக்க தெறிக்கவிடும் ராசிகள்.. வேலையை தொடங்கிவிட்டார் புதன்.. இனி உங்களை தொட முடியாது

Suriyakumar Jayabalan HT Tamil
Oct 28, 2024 12:41 PM IST

Lord Mercury: புதன் பகவானின் உதயமானது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

அனல் பறக்க தெறிக்கவிடும் ராசிகள்.. வேலையை தொடங்கிவிட்டார் புதன்.. இனி உங்களை தொட முடியாது
அனல் பறக்க தெறிக்கவிடும் ராசிகள்.. வேலையை தொடங்கிவிட்டார் புதன்.. இனி உங்களை தொட முடியாது

புதன் பகவான் நரம்பு, வியாபாரம், கல்வி, படிப்பு, பேச்சு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் புதன் பகவான் தற்போது துலாம் ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

இந்நிலையில் அக்டோபர் 22ஆம் தேதி அன்று புதன் பகவான் துலாம் ராசியில் உதயமானார். புதன் பகவானின் உதயமானது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் புதன் பகவானின் உதயம் பல்வேறு விதமான யோகங்களை கொடுத்து வருகிறது. பணி நிமித்தமாக நீங்கள் நீண்ட தூர பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பணத்தை சேமிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்

கன்னி ராசி

உங்கள் ராசியில் புதன் பகவானின் உதயம் நல்ல யோகத்தை தரும். உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை மற்றும் அமைதி நிறைந்திருக்கும். குடும்ப பொறுப்புகளினால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

பணி நிமித்தமாக நீண்ட தூர பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க நினைத்தால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களை அதிகம் தேடி வரும் மன ஆரோக்கியம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் புதன் பகவானின் உதயம் சிறப்பாக செயல்பட உள்ளது அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு ஏற்றவாறு அமையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். 

புதிய தொழில் தொடங்க நினைத்தால் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்கும். நிதி நிலைமையை பொறுத்தவரை உங்களுக்கு சேமிப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner