2025 புத்தாண்டு கன்னி ராசி பலன்கள்: உங்களுக்கு என்ன நடக்கும்?.. வாங்க பார்க்கலாம்..!
Dec 10, 2024, 03:20 PM IST
New Year 2025: இந்த புத்தாண்டு 2025 பெரிய கிரகங்கள் தங்களது இடத்தை மாற்றுகிறார்கள். தற்போது கன்னி ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை பெறுவார்களா இல்லையா என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
New Year 2025: புதிதாக பிறந்திருக்கக் கூடிய 2025 ஆம் ஆண்டு 12 ராசிக்காரர்களுக்கும் கலவையான பலன்கள் கிடைக்க கூடும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் இந்த புத்தாண்டில் பெரிய கிரகங்கள் தங்களது இடத்தை மாற்றுகிறார்கள். தற்போது கன்னி ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை பெறுவார்களா இல்லையா என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
சமீபத்திய புகைப்படம்
நிதி நிலைமை
இந்த 2025 புத்தாண்டு உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வீடு கட்ட கூடிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். ஜனவரி மாதம் முதல் உங்களுக்கு பங்கு வர்த்தகத்தில் நல்ல யோகம் கிடைக்க கூடும். சாதகமான பலன்கள் பிப்ரவரி மாதத்தில் இருந்து உங்களுக்கு கிடைக்கும்.
மருத்துவ தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய முதலீடு நிதி நிலைமையை மேம்படுத்தி கொடுக்கும். பகுதி நேர வேலை பார்ப்பவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கக்கூடும். பணப்புழக்கம் உங்களுக்கு அதிகரிக்கும். ஏப்ரல் மாதத்தில் இருந்து செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்க கூடும். வீட்டுக்காக புதிய பொருள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு இரட்டிப்பான லாபத்தை பெற்று நிதி நிலைமையை மேம்படுத்தும்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும். வெற்றிகரமாக முடிவடைந்து லாபங்கள் அதிகரிக்கும். தொழில்துறையில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். மின் சாதனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அக்டோபர் மாதத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. டிசம்பர் மாதத்தில் புதிதாக தங்கம் மற்றும் ஆபரணங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
கல்வி
இந்த 2025 புத்தாண்டு உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கக்கூடும். உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். தேர்வுகளில் வெற்றி பெற்று முன்னேற்றம் அடைவார்கள். ஆசிரியர்கள் உங்களுக்கு சரியான வழிகாட்டுதல்களை கொடுப்பார்கள். மாணவர்கள் அவ்வப்போது கல்வி சிதறல்களை சந்திக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.
நுழைவுத் தேர்வு எழுதுபவர்களுக்கு நல்ல வெற்றிகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மாணவர்கள் போட்டிகளில் வெற்றி பெற்ற முன்னேற்றம் காண்பார்கள் விருப்ப தேர்வுகளில் வெற்றிகள் உங்களைத் தேடி வரும். கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். மாணவர்கள் ஆராய்ச்சி துறையில் மிகப்பெரிய வெற்றியை காண்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
உடல் ஆரோக்கியம்
இந்த 2025 புத்தாண்டு உங்களுக்கு அந்த அளவிற்கு பாதிப்புகள் கொடுக்காது. உடல் சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் .. ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் தானாக வரும். தினசரி உடற்பயிற்சி செய்தால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிகமாக பலன்கள் சாப்பிடுவது உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.
உடல் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. தேவையில்லாத நொறுக்கு தீனிகளை தவிர்ப்பது நல்லது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் வயதானவர்கள் பல் சிக்கல்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதற்குப் பிறகு உங்களுக்கு உடல்நிலை மிகவும் சீராக இருக்கும். மே மாதத்திற்கு பிறகு பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே ஆரம்ப காலகட்டத்தில் அதை கவனித்து செயல்படுவது உங்களுக்கு நல்லது.
பரிகாரம்
மகாவிஷ்ணு கோயிலுக்கு சென்று புதன்கிழமைகளில் பசுக்களுக்கு நெய் தீபம் ஏற்று வழிபட்டால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகாலட்சுமி கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் உங்களுக்கு சகல செல்வங்களும் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.